Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, July 31, 2013

உலக தாய்ப்பால் வாரம் 2013


தாய்ப்பாலின் அவசியம்: 

WHO, UNICEF, WABA (World Alliance for Breastfeeding Action), IBFAN (International Baby Food Action Network போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் தாய்ப்பால் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் காக பல பணிகளைச் செய்து வருகின்றன. 

இந்தியாவில் இதற்கெனவே ஒரு அமைப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. அதுதான் BPNI (Breastfeeding Promotion Network of India) இந்த அமைப்பு உலக தாய்ப்பால் வார நிகழ்வை 1992 முதல்இந்தியாவில் ஒருங்கிணைத்து வருகிறது.

தாய்ப்பால் தருவது, தாயின் உடல்நலனுக்கும் உகந்தது. குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க தொடங்க வேண்டும். முதல் முறை கொடுக்கப்படும் பால், குழந்தை யின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்படுகிறது. குழந்தைக்கு தேவையான புரதங்கள் இதில் அடங்கியுள்ளன. குழந்தை பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்துகிறது. 

முழுமையான தாய்ப்பால் வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் 1.5 மில்லியன் குழந்தை மரணங்களைத் தவிர்க்க முடியும் (யுனிசெப்). தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். குழந்தை மரணங்களும் தாய்ப்பால் தருவதால் தவிர்க்கப்படுகிறது. ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது அவசியம். குழந்தைக் கும்,தாய்க்கும் இடையேயான பிணைப்பு தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகரிக்கிறது. 

பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 50 % குறைகிறது. சரியான தாய்ப்பால் பெற்ற குழந்தை களின் நுண்ணறிவு பிற குழந்தைகளை விடவும் 8 புள்ளிகள் அதிகமெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது தவிர நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகளும் சில புள்ளி விபரங்களும் இருக்கின்றன. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 6.9 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றனர். நாளொன்றுக்கு சுமார் 14000 குழந்தைகள் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். சரியான முறையில் தாய்ப்பாலூட்டு வதன் மூலம் 8,30,000 குழந்தை இறப்புகளைத் தடுக்க முடியும். குழந்தை பிறந்த 1 மணி நேரத்தில் பாலூட்டுவதன் மூலம் 22% இறப்புகளையும் 24 மணி நேரத்திற்குள் பாலூட்டுவதன் மூலம் 16% இறப்புகளையும் தவிர்க்க இயலும்.

குழந்தை பிறந்தவுடன் 1 முறை பாலூட்டுவதும் 1 நாள் கழித்து 3 முறை பாலூட்டுவதும் சமமே. 6 மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் நிமோனியாவில் இறப்பதற்கு 15 மடங்கும், வயிற்றுப் போக்கால் இறப்பதற்கு 11 மடங்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக் கின்றன. உலகில் 93 பில்லியன்/ மூன்றில் இரண்டு மடங்கு குழந்தை களுக்கு 6 மாதங்களுக்குள்ளாகவே தாய்ப்பால் தவிர்த்த செயற்கை உணவுகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான பால் வர்த்தகம் மட்டுமே உலக அளவில் 25 பில்லியன் டாலர் அளவிற்கு நடைபெறுகிறது. 

குழந்தை உணவுப்பொருள் தயாரிப்பு தொழில் வளர்ச்சியில் 31% இலக்கு நிர்ணயித்துள்ளனர். அவர்களின் முக்கிய வியாபாரச் சந்தையாக / இலக்காக இருப்பது நமது ஆசியக் கண்டமே.

தாய்ப்பால் வாரம்:

WABA அமைப்புதான் சர்வதேச அளவில் இந்த தாய்ப்பால் வாரம் நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மையக் கருத்தாக தாய்ப்பாலுக்கு ஆதரவு: அன்னையருக்கு நெருக்கமாக. Breastfeeding Support: Closed to Mothers) என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிகழ்வை அனுசரிப்பதற்கான காரணங்கள் ஐந்து. 1. தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த கவனத்தை ஈர்ப்பது 2. பேறுகாலப் பெண்களுக்கு அனுபவ தாய்மார்களின் ஆலோசனைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவது. பேறுகால பெண்களுக்கான ஆலோசனை முகாம்களை நடத்துவது. 3. தாய்ப்பால் ஆதரிப்போரை பயிற்சிகள் மூலம் மேம்படுத்துவது 4. பேறுகால பெண்களுக்கு ஆதர வாக உள்ளூர் சமூக ஆதரவைத் திரட்டுவது 5. பேறுகாலப் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 படிநிலைகளைப் பின்பற்ற அரசுகளை வலியுறுத்துவது. முழுமையாக தாய்ப்பால் வழங்குவோர் சராசரியை உயர்த்தவும் அரசுகளை வலியுறுத்துவது.

உலக சுகாதார நிறுவனம் & யுனிசெப் தாய்ப்பால் ஆதரவு, விழிப்புணர்வுக்காக அறிவித்துள்ள பத்து படிநிலைகள்:

1. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எழுத்துப்பூர்வமான தகவல றிக்கைகளின் மூலமாக அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தொடர்ந்து நினைவூட்டப்பட வேண்டும்.

2. தாய்ப்பால் ஊட்டச்செய்வதற்கான பணிகளைச் செய்வதற்கான முறையான பயிற்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

3. அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

4. பிரசவம் நிகழ்ந்த அரை மணிநேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டத் தொடங்கிட உதவ வேண்டும்.

5. குழந்தையிடமிருந்து தனித்திருந்தாலும் தாய்மார்களுக்கு பாலூட்டலுக்கான பயிற்சியளித்தல் வேண்டும்.

6. மருத்துவ உதவிக்காக மட்டும் அன்றி வேறெவ்வித காரணத் திற்காகவும் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர்த்த திட> திரவ உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

7. தாயும் சேயும் ஒன்றாக இருக்க செய்தல் வேண்டும்.

8. தேவைக்கேற்ப தாய்ப்பாலூட்ட ஊக்குவிக்க வேண்டும் 

9. பால் பாட்டில்கள் தடை செய்வது

10. தாய்ப்பால் ஆதரவு குழுக்கள் அமைத்து மருத்துவமனை, கிளினிக்-ல் இருந்து சென்ற பின்பும் தாய்மார்களுக்கு ஆலோசனை, ஆதரவு அளித்திட வேண்டும்.

மேலும் பேறுகாலப் பெண்கள் குழந்தைகளுக்கு முழுமையாக தாய்ப்பாலூட்ட ஐந்து புறச்சூழல் ஆதரவு தேவை எனவும் றுஹக்ஷஹ அமைப்பு வலியுறுத்துகிறது. அதாவது 1. குடும்ப, சமூக ஆதரவு, 2. பணியிடம், சுற்றுச்சூழல் 3. அவசரகாலச்சூழலிலும் உரிய ஏற்பாடுகள் (உம்.உத்தரகாண்ட் வெள்ளப்பாதிப்பு போன்ற பேரழிவு நேரங்களில் கூட) 4. சுகாதார நிலைமை 5.அரசுத்தரப்பு (ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, சட்ட திட்டங்கள் வகுப்பதில்)
தாய்ப்பால் வழங்குவதில் என்ன பிரச்சினை?:
தாய்ப்பால் வழங்குவதை அப்பெண்ணின் சமூக, பண்பாடு,கலாச்சார, பொருளாதார,கல்விப் பின்புலங்களும் தீர்மானிக்கின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. முக்கியமாக எங்கும் எதிலும் லாபம் ஒன்றே குறியெனத் திரியும் பன்னாட்டு, உள்நாட்டு
பகாசுரக் கம்பெனிகளின் அநியாயம் தாங்கமுடியாத அநியாயமாக இருக்கிறது. தாய்ப்பாலை, தாய்-சேய் பாசத்தை, குழந்தை வளர்ப்பை மூலதனமாகக் கொண்டு பல்வேறு கம்பெனிகள் தமது தயாரிப்பு களைச் சந்தைக்கு கொண்டு வருகின்றன. தாய்ப்பால் தனியுண வாக குறைந்த பட்சம் 6 மாதங்கள் வழங்குவதில் கூட உலக அளவில் திருப்திகரமான சராசரி நிலையை அடைய முடியாததற்கு இந்தக் கம்பெனிகளின் வியாபார தில்லுமுல்லுகளும் தந்திரங்களுமே பெருங்காரணமாய் இருக்கின்றன.
இவர்களைக் கட்டுப்படுத்தவே IBFAN என்ற அமைப்பின் முயற்சியால் உலக சுகாதார நிறூவனம், யுனிசெப் ஆகியவை 1981ல் பால்துணைப்பொருட்கள், சந்தைப்படுத்துதலுக்கான சர்வதேச விதிமுறைகளை (International Code of Marketing Breastmilk Substitute) வகுத்துள்ளன.

பால் துணைப்பொருட்கள், பால் பாட்டில்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு விளம்பரங்கள் செய்வது, பொருட்களை பிரபலப் படுத்தும் பொருட்டு பரிசாகத் தருவது, சாம்பிள்-ஆகத் தருவது,இதற்காக மருத்துவமனை மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள், பணியாளர்களைப் பயன்படுத்துவது, பொருட்களில் குழந்தையுடன் கூடிய தாய்மார்களின் படங்களைப் பயன்படுத் துவது, தாய்ப்பாலின் மகத்துவத்தைக் குறைக்கும் வகையில் வாசகங் களை அச்சிடுவது, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளைக் “கவனிப்பது”, நன்கொடை வழங்குவது, கல்வி சார்ந்த பிற செயல்பாடுகளுக்கான அச்சு, காட்சி ஊடகங் களை நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயன்படுத்துவது, மருத்து வர்களுக்கு சன்மானம் கொடுப்பது, அவர்களின் உயர்கல்வி, ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்வது ஆகியவை தடைசெய்யப் படுகின்றன.

சரி இந்தியாவின் நிலைமை?

IBFAN- (ஆசியா) அமைப்பால் தாய்ப்பால் வழங்குவதில் உள்ள முன்னேற்றம், கொள்கை ரீதியான பிரச்சினைகள், கள நிலைமைகளை ஆசிய அளவில் 50 நாடுகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. 2012-ல் வெளியான WBTI (World Breastfeeding Trends Initiative) அறிக்கை நம் தாய்த் திரு நாட்டைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. 15 அம்சங் களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், இந்தியாவில் இருக்கின்ற மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளைத் திறம்பட ஒருங்கிணைப்பதில் பின்னடைவு, IYCF (Infant and Young Child Feeding) குறித்த தேசிய வழிகாட்டு நெறிமுறைகளை கீழ்மட்ட அளவுகளில் கொண்டுசெல்வதில் பின்னடைவு, உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் ஒதுக்கப்படுகின்ற நிதி அளவினைக் கருத்தில் கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதற்கான சர்வதேச பத்து படிநிலைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை. BFH (Baby Friendly Hospital) அமைப்பை உருவாக்குவதில் 2005 முதல் எவ்விதத்திலும் முன்னேற்றம் காணப் படவில்லை. (உலக அளவில் 156 நாடுகளில் 20,000 மருத்துவ மனைகள் மட்டுமே. BFH அமைப்பை 82 சதவீதம் மகப்பேறு மருத்துவமனைகளில் நிறுவிய உலகின் முதல் மாநிலமாக கேரளா (இந்தியா) வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் தற்போதும் இந்தியாவில் 10 சதவீதம் மருத்துவமனைகள் தான். கியூபாவில் 87 சதவீதம், சீனாவில் ஊரகப்பகுதிகளில் 68ரூ நகர்ப்பகுதிகளில் 48 சதவீதம் என 6000 மருத்துவமனைகள்- UNICEF & StC)

IMS -2003 சட்டத்தை முழுமையாக, வலுவாக கொண்டு செல்ல தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவில்லை. சட்டத்தை மீறு பவர்கள் குறித்த நடவடிக்கை எடுக்க மாவட்ட, மாநில அளவுகளில் வலுவான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சட்டம் நடைமுறைப் படுத்தப் படுவதைக் கண்காணிக்க பயிற்சி பெற்ற உரிய அலுவலர்கள் இல்லை.இச்சட்டம் குறித்து மக்களிடையே மிகமிகக் குறைந்த அளவே விழிப்புணர்வு உள்ளது. ((WBTI)
(இந்தியாவில் இளம்குழந்தைகளுக்கான பால் துணைப் (பதிலி) பொருட்கள், உணவு மற்றும் பால்பாட்டில்கள் தயாரிப்பு, விநியோக ஒழுங்குமுறைச்சட்டம் (IMS ACT-1993) கொண்டு வரப்பட்டது. 2003ல் அச்சட்டத்திற்கு (-Infant Milk Substitute, Feeding Bottles and Infant Foods (Regulation of Production, Supply and Distribution) Amendment Act, 2003) வலுகூட்டும் பொருட்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்தாய்மார்களை குறிவைத்து செய்யப்படும் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்கள் தடை செய்யப் பட்டன.

பிறந்த 6 மாதங்களுக்குள் பகுதியாகவோ, முழுமையாகவோ தாய்ப்பாலுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் பால் துணைபொருட்கள்
(Lactogen-1, Lactogen-2, Nestogen-1, Nestogen2, Lactodex- 1, Lactodex - 2, Amul Spray, Zerolac, Dexolac, ProSoyal , Simyl-MCT, Similac Neosure போன்றவை), பால் பாட்டில்கள்: Bonny Baby, Hello Baby, Wipro போன்ற அனைத்து வகைக் கம்பெனிகளின் தயாரிப்புகளும்... உணவுகள்: 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தை களுக்கான உணவுகளாக முன்வைக்கப்படும் Nestum,Cerelac, Farex, Weano, Veelac, Infacare, First Food, Dexrice, Easum, Junior Horlicks, Growing up milk, health drinks போன்றவையும் இச் சட்ட வரையறைக்குள் வருகின்றன. பால்துணைப்பொருட்கள் சந்தைப் படுத்துதலுக்கான சர்வதேச விதிமுறைகளுள் ((International Code of Marketing Breastmilk Substitute) பல சரத்துகள் இச்சட்டத்திலும் பிரதிபலிக்கின்றன.)
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணிமுன் பயிற்சி போது மானதாக இல்லை. அங்கன்வாடி, ANM, ASHA பணியாளர்களுக் கான பயிற்சியில் IYCF குறித்த கருத்துகள் இடம்பெறவே இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

நமது இந்தியாவில் ஆண்டுதோறும் 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றனர் (NFHS -3). அதில் 25 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த 1 மணி நேரத்தில் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. 20 மில்லியன் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு மட்டும் கூட முழுமையாக தாய்ப்பால் உணவு கிடைப்பதில்லை. 13 மில்லியன் குழந்தைகளுக்கு 6-9 மாதங்களில் தாய்ப்பாலுடன் சரியான இணை உணவுகள் கிடைக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதில் கடந்த 20 ஆண்டுகளாக பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. 20 % குழந்தைகள் மட்டுமே ஆறு மாதங்களுக் குப் பிறகும் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் பெறுகின் றனர். மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடிப் பணியாளர்களின் சேவையைப் பெறுகின்றனர். 

நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத் தின் கீழ் சத்துணவு பெறுகின்றனர். 18 சதவீதம் குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடி மையங்களில் எடை பார்த்துள்ளனர்.

இந்தியா பாரம்பரியமாகவே தாய்ப்பாலுக்கு சிறப்பான இடம் அளிக்கும் நாடு. ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு சரியான தகவல்கள், வீடு, பணிபுரியும் இடங்களில் உரிய ஏற்பாடு, மகப்பேறு விடுப்பு, குடும்ப உறுப்பினர் களின் ஒத்துழைப்பு இருக்கும்பட்சத்தில் இந்நிலை மேலும் உயரும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. 40.5 சதவீதம் பெண்கள் பிறந்த உட னேயே தாய்ப்பால் வழங்குகின்றனர். 46.8 சதவீதம் பெண்கள் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் வழங்குகின்றனர். அதிகபட்சமாக 24.4 மாதங்கள் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. 12.5 சதவீதம் பெண்கள் பாட்டில் பால் கொடுக்கின்றனர். 57.1 சதவீதம் பெண்கள் தாய்ப்பால் தவிர்த்த உணவுகளைக் கொடுக்கின்றனர்.

(WBTI ) மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளுக்குக் கூட முழுமையான தாய்ப்பால் (6 மாதங்கள்) வழங்க இயலாத பத்து நாடுகளில் இந்தியா வும் ஒன்று. (தாய்ப்பால் குறித்த சர்வதேச மாநாடு-2012 அறிக்கை யில் யுனிசெப்)

இந்தியாவில் 2010ல் உரிய நாட்களுக்கு முன்னதாகவே 13 சத வீதம் குழந்தைகள் பிறப்பதாகவும் 20% குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமலும் 47.9 சதவீதம் குழந்தைகள் வயதிற்கேற்ற வளர்ச்சியில்லாமலும் இருப்பதாகவும் கூறுகிறது உலக சுகாதார அறிக்கை-2013. 

சரி, மேற்கண்ட ஆய்விற்கு வருவோம். WBTI ஆய்வில் கொள்கை மற்றும் திட்டங்கள் சார்ந்த 10 அம்சங்களில் 43/100 மதிப் பெண்களும் குழந்தைகளுக்கு உணகூட்டுதல் சார்ந்த 5 அம்சங் களில் 31/50 மதிப்பெண்களும் ஆக மொத்தம் இந்தியா 74/150 மதிப் பெண்கள் பெற்று ஊ கிரேடில் இருக்கிறது. இருந்தபோதிலும் 2005, 2008 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது 5 மதிப்பெண்கள் அதிக மாகவே பெற்றிருக்கிறது.
இதுவரை போடப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களில் கடந்த 10, 11 மற்றும் 12வது ஐந்தாண்டுத் திட்டங்களில் தான் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காக 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் ஆக உயர்த்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி, மருத்துவம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கு வதில் மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கின்ற இருக்கின்ற பாய்ச்சல் வேகம் , இதுபோன்ற செயல்பாடுகளில் இருந்தால் மக்கள் நலம் பெறுவர். திறன் மிக்க குடிமக்களாய்த் திகழ்வர். உழைப்பு பெருகும். உற்பத்தி பெருகும். பொருளாதார வளர்ச்சியால் நாடு நலம் பெறும்.! வளம் பெறும்..!

தேனி சுந்தர், விஞ்ஞான சிறகு

Thursday, May 17, 2012

அறியாமையும் அச்சமுமே சோதிடத்திற்கு அடித்தளம்


அறிவியல் மனநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்கே சோதிடம் எதிரானது. ஆனால் நம் நாட்டின் பெரும் பாலான மக்களுக்கு சோதிடமே உந்துசக்தியாக இருக்கிறது. படிப்பறி வற்றவர்கள்தான் இந்த மோகத்திற்கு பலியாவார்கள் என்பதும் இல்லை. படித்தவர்களை சோதிட அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கக்கூடியதாக அவர்கள் படிக்கும் படிப்பு இல்லை. மேலைநாட்டு சோதிடமாக இருந்தா லும் சரி, இந்திய சோதிடமாக இருந்தாலும் சரி.. அதில் அறிவியலுக்குப் பொருந்திவரக் கூடிய தன்மைகள் அறவே கிடையாது. மனிதர்களின் அறியாமை மற்றும் அச்சம் இரண்டின் விளைவாக உருவானதே சோதிடம் என்று சொல்வது மிகையாகாது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் வானத்தைக் கூர்ந்து பார்த்து சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள் என்பது உண்மை.

ஆனால் அவர்கள் கண்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்களால் அறிவியல் விளக்கம் சொல்ல இயலவில்லை. இரவு வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களின் வடிவ அமைப்புகள் மாறுவது, சந்திரனின் வளர்பிறை தேய்பிறைகள், நட்சத்திரங்களைப் போன்று தோற்றமளிக்கும் கிரகங்களின் சஞ்சாரங்கள், எங்கிருந்தோ தோன்றி பிறகு மறையும் வால்நட்சத்திரங்கள் போன்ற விண்வெளி நிகழ்வுகள் பற்றி சரியான விளக்கம் அளிக்கும் அள வுக்கு அன்றைய அறிவியல் வளர்ந் திருக்கவில்லை. ஆதிகால மனிதர் களுக்கு இவை எல்லாமே அதிசயங் களாகத் தோன்றியிருக்க வேண்டும். சில பிரகாசமான நட்சத்திரங்கள் சேர்ந்து குறிப்பிட்ட சில உருவங்கள் போல் தோன்றுவதே நட்சத்திரக் கூட்டங்கள் அவர்கள் வாழ்வில் நடந்த சில நிகழ்ச்சிகள், விண்ணில் அவர்கள் பார்த்த நட்சத்திரக் கூட்டங்கள் அல்லது கிரகங்களின் சஞ்சாரத்தோடு தொடர்புடையவையாக அவர்களுக் குத் தோன்றியிருக்கக் கூடும். விண் ணில் உள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள், வால்நட்சத்திரங்கள் போன்றவை தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் சக்தி கொண்டவை என அவர்கள் நம்புவ தற்கு இத்தகைய தற்செயல் ஒற்றுமை நிகழ்வுகள் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் இந்த நம்பிக்கைகள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான புரிதலோ தொலைநோக்கி போன்ற சாதனங்களோ இல்லாத காலத்தில் - வானவியல் ஒரு அறிவியல் துறையாக பெருமள வுக்கு வளராத காலகட்டத்தில் - தோன் றியவை என்பதை நாம் நினைவில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொள் வது நல்லது.

முன்காலத்தில் வால் நட்சத்திரங்கள் தோன்றுவது மர்மமாக இருந்ததால் அவை பீதியைக் கிளப்பின. இன்று அவை எங்கிருந்து வருகின்றன, எங்கே செல்கின்றன என்ற விவரங்கள் நமக்குத் தெரிந்த ரகசியங்கள் ஆகிவிட்டதால் மர்ம முடிச்சுகளும் அகன்றுவிட்டன. விண்ணில் ஏவப்பட்ட கலங்கள் பல கிர கங்களின் அருகே சென்று கிரகங்களின் தன்மைகள் பற்றி ஆய்வுகளை நடத்தி விட்டன. சில கிரகங்களில் விண்கலங் கள் இறங்கியே கூட ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. சந்திரனில் மனி தர்களே இறங்கி நடை பயின்ற அதிசயம் கூட நிகழ்ந்துவிட்டது. காலம் காலமாக மனிதனின் கற்பனைக்கு வளம் சேர்த்த சந்திரனை இன்று மனித சக்தி தொட்டுப் பார்த்துவிட்டது. பூமி எந்தெந்த தனி மங்களால் ஆனதோ, ஏறக்குறைய அதே தனிமங்களால் ஆனவைதான் மற்ற கிரகங்கள் என்ற உண்மையும் விண்வெளி ஆய்வுகளால் தெளிவாகி விட்டது. பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதையும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் உண்மையான தன்மைகள் என்னவென்பதையும் அறிவியல் இன்று தெளிவாக விண்டுவைத்துவிட்டது. நட்சத்திரங்களில் சூரியனைத் தவிர மற்றவை பூமியிலிருந்து பல ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. அவ்வளவு தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் பூமியில் உள்ள மனிதர்களின் ‘தலைவிதி’யையோ, குணங்களையோ தீர்மானிக் கும் சக்தி கொண்டவை என நம்பு வதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் கிடையாது. வானத்தில் தொலைதூரத் தில் உள்ள ஒரு கிரகம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் (யீடிளவைiடிn) இருக்கும் காரணத் தால் அது பூமியில் உள்ள ஒரு தனிப் பட்ட மனிதரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதை சோதிடர்களால் அறிவியல் பூர்வமாக விளக்க முடிவ தில்லை. சோதிட சாஸ்திரத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கு மேல் அவர்களால் விளக்கமளிக்க முடி யாது.

பேராசிரியர் கே. ராஜு

Thursday, April 19, 2012

சிறுநீரக மாற்று சிகிச்சை


சிறுநீரகங்கள் மனித உடலில் மிக முக்கியமான இரு உறுப்புகள். அவரைக்காய் வடிவத்தில் உள்ள இவை விலா எலுப்புக்கூட்டிற்குக் கீழ் முதுகெலும்புக்கு இருபக்கத் திலும் அமைந்திருக்கின்றன. இரத் தத்திலிருந்து கழிவுப் பொருள் களையும் நீரையும் அகற்றி சிறுநீர் வழியாக வெளியேற்றும் வேலை யை அவை செய்கின்றன. ஒரு வீட் டைக் கூட்டிப் பெருக்கிக் குப்பை களை அகற்றாவிட்டால் என்ன ஆகும்? சிறுநீரகம் இல்லை யெனில் உடலின் நிலையும் அது தான். ஒவ்வொரு நாளும் சுமார் 50 காலன் ரத்தத்தைச் சுத்தி கரித்து கழிவுகளை அவை பிரித் தெடுக்கின்றன. கழிவுகள் சிறுநீர்க் குழாய்கள் வழியாக சிறுநீர்ப்பை யை அடைகின்றன.

பின்னர் சிறு நீராக அவை வெளியேறுகின்றன. நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், புகை பிடித்தல், குடிப் பழக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாக நேரும். உயிர் வாழ்வதற்கு ஒரு சிறு நீரகமே போதுமானது. எனவே சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான ஒருவரிடமிருந்து ஒரு சிறுநீரகத்தை எடுத்துப் பொருத்துவது சிறுநீரக மாற்று சிகிச்சை என அழைக்கப்படுகிறது.சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சிறுநீரக மாற்று சிகிச்சைக்குப் பெயர் பெற்றது. இந்த ஆண்டு மார்ச் 20 அன்று அங்கு 1000-வது தடவையாக இச் சிகிச்சை நடைபெற்றது. இந்தியா வில் இந்த சாதனையைச் செய்த முதல் அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையே என்கிறார் மருத் துவமனையின் டீன் வி. கனகசபை.25 ஆண்டுகளுக்கு முன் 1987 ஜூலை 10 அன்று இந்த மருத்துவமனையின் முதல் சிறு நீரக மாற்று சிகிச்சையைச் செய் தவர் டாக்டர் எம்.ஏ. முத்துசேதுபதி. “25 ஆண்டுகளில் 1000 சிறுநீரக மாற்று சிகிச்சை நடந்திருப்பது ஒரு சாதனைதான். 1982-ல் ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் முதன்முதலாக இந்த சிகிச்சையை நாங்கள் செய்தோம். பிறகு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்ற லாகி வந்ததும் அந்த சிகிச்சையைத் தொடர்ந்தோம். 25 ஆண்டுகளுக்கு முன் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொண்டவர்களில் சுமார் 80 சதம் பேருக்கு சிகிச்சைக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழக் கூடிய வாய்ப்பு இருந்தது. படிப்படி யாக இதில் முன்னேற்றம் ஏற்பட் டது. தமிழகத்தில் சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடை பெற்று வருவதற்குக் காரணம், சிகிச்சை செய்துகொண்டவர் களுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்க மருந்துகள் (iஅஅரnடிளரயீயீசநளளiடிn னசரபள) இலவசமாக அளிக்கப்பட்டதுதான்” என்கிறார் டாக்டர் முத்துசேதுபதி. “இன்று இந்த மருந்துகளின் விலை 10000 ரூபாயிலிருந்து 12000 ரூபாய் வரை ஆகிறது.

மாநில அரசு நோய் எதிர்ப்புத் திறன் சிகிச்சைக்கு 2 கோடி ரூபாயை ஒதுக்கியிருக் கிறது” என்கிறார் டாக்டர் கனக சபை. மரணமடைந்தவர்களின் சிறு நீரகத்தை எடுத்து நோயாளிகளுக் குப் பொருத்தும் சிகிச்சை (உயனயஎநச வசயளேயீடயவே) 1996-ல் முதன் முத லாக இங்கு நடைபெற்றாலும் 2008-ஆம் ஆண்டிலிருந்தே பரவ லாக நடைபெறத் தொடங்கியிருக்கிறது.உலக சிறுநீரக நாளாக மார்ச் 8 அனுசரிக்கப்படுகிறது. அன்று சென்னையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் களும், சிறுநீரக தானம் செய்தவர் களும் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ள இருக்கும் நோயாளி களைச் சந்தித்து உரையாடினர். 17 ஆண்டுகளுக்கு முன் மாற்று சிறு நீரகம் பொருத்திக் கொண்ட ஒருவர் தன்னுடைய அனுபவங்களை மற்ற வர்களுடன் பகிர்ந்து கொண்டார். சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் நோயாளிகளுக்கு இந்த சந்திப்பு உற்சாகத்தையும் நம்பிக்கையை யும் அளித்தது. “சிகிச்சைக்குப் பிறகு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளை நான் அறிவேன். நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்க மருந்துகளின் விளைவாக ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதுதான் சவாலாக இருக் கிறது” என்கிறார் டாக்டர் முத்து சேதுபதி.சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டவர்களுக்கு மாற்று சிறுநீர கமே புனர்வாழ்வு அளிக்கிறது. எனவே, இத்துறையில் உள்ள சவால்களைச் சந்தித்து நூற்றுக்கு நூறு வெற்றி அடைய எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவோம்.

பேராசிரியர் கே. ராஜு
(உதவிய கட்டுரை : தி இந்துவில் திருமிகு ஆர். சுஜாதா எழுதியது)

Sunday, March 18, 2012

எண்ணெய் வித்துக்களிலிருந்து உயிரி எரிபொருள் அரசு ஊக்கப்படுத்துமா?




நாட்டின் எரிபொருள் தேவையை சமாளிக்க இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்தால் கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும். ஆகையால் உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தியாவின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே, செல்கிறது. நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 70 விழுக்காட்டிற்கு மேல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கம், நாட்டின் வாகனங்கள் பெருக்கம், அவசியமற்ற ஆடம்பரம் என நாட்டின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் எரிபொருள் பயன்பாடு சுமார் 63 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்டு வரும் நிலையற்ற தன்மை, தவறான பொருளாதார கொள்கை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் விஷயத்தில் நம்நாடு நெருக்கடியை சந்திக்க வேண்டிவரும். ஏற்கனவே கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோல்-டீசலை உபயோகிப்பதால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்கள் சுற்றுச்சூழலை மிகவும் பாதிப்பதாக உள்ளது.

இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் சார்ந்த எரிபொருளுக்கு மாற்றாக உயிரி எரிபொருளை உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் எரிபொருள் தேவையை சமாளிப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க இயலும். உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் எந்ததெந்த வித்துக்களில் இருந்து பெற முடியும் என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதில், உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு வசதிகள் அதிகமாக இருக்கிறது; ஆனால் அதனை நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை; கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவிகிதமாவது இந்த உணவுக்கு பயன்பாடாத எண்ணெய்வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் உயிரி எரிபொருள் உற்பத்திக்கு கொடுத்தால், நமக்கான எரிபொருள் தேவையில் கணிசமான பகுதியை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.குறிப்பாக காட்டாமணக்கு, புன்னை,இலுப்பை, மற்றும் புண்ணை மரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் மூலம் உயிரி எரிபொருள் உற்பத்தி செய்ய இயலும் என்பது வெற்றிகரமாக கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.கச்சா எண்ணெய் மூலம் பெறப்படும் எரிபொருளை விட உயிரி எரிபொருள் எவ்விதத்திலும் குறைந்தது இல்லை என்பதும், குறிப்பாக சுற்றுச்சூழலுக்குஎவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதும் ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நீலகிரி மலை ரயில் இந்த உயிரி எரிபொருள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
உணவுக்கு பயன்படாத எண்ணெய்வித்துக்கள் என்று கண்டறியப்பட்டுள்ள இந்த மரங்களை வளர்ப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை என்பது கூடுதல் வசதி ஆகும். மேலும் தொடர் கவனிப்பும் தேவைப்படாது. அரசு சரியாக திட்டமிட்டு செயல்படுத்த ஆரம்பித்தால் மிகப்பெரிய பலனை அடைய முடியும். இந்தியாவில் பயனற்ற நிலையில் பல லட்சக்கணக்கான ஹெக்டேர் தரிசு நிலங்கள் இருக்கிறது. அந்த இடங்களில் புங்கன், கட்டாமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களை பயிரிட்டு பயன்படுத்த துவங்கலாம். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். கூடுதலாக தரிசு நிலங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

 இதன் மூலம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். இதுபற்றி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் துரைராசு ஐ.எப்.எஸ். யிடம் கேட்டபோது:உணவுக்கு பயன்படாத உயிரி எரிபொருள் உற்பத்திக்கு காட்டாமணக்கு, புங்கன் உள்ளிட்ட 10 மர வித்துக்கள் மூலப்பொருட்களாக உள்ளன.

இந்த மாவித்துகள் உற்பத்தியில் கன்று நடுவது முதல் வளர்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது வரை உள்ள பிரச்சனைகளை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மரம் மற்றும் விதைகள் பற்றிய விபரங்களும், அதன் உயர்ந்த பலன் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்லூரி மாணவ- மாணவியருக்கு இது குறித்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்ததப்படுகிறது. இந்த முகாம்களில் உயிரி எரிபொருளின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரி எரிபொருளுக்கான முலப்பொருட்கள் தயாரிப்பு முறைகள் விரிவாக விளக்கப்படுகிறது. மேலும் உயிரி எரிசக்தியின் மர வளர்ப்பு பற்றி மரப்பண்ணைகளுக்கு நேரிடையாக அழைத்துச் சென்று அவர்களின் சந்தேகங்களை நீக்குவதோடு, சிறந்த ஆலோசனைகளையும் பெறுகிறோம் என்றார். மின் சக்தியின் உற்பத்தியை எடுத்துக் கொண்டால் நிலக்கரி மூலம், காற்றின் மூலம், நீரின் மூலம், சூரிய ஒளியின் மூலம், அணுசக்தி மூலம் என பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பல வகைகளில் தயாரிக்கப்படும் மின்சாரமே இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் பற்றாக்குறையாக நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில் தடைப்பட்டு வருகிறது.

 இதே நிலைதான் எரிசக்திக்கும். இறக்குமதியை மட்டுமே நம்பிக் கொண்டு அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொள்ளாமல், “ உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்த்துவிட்டது. அதனால் இங்கும்பெட்ரோல் - டீசல் விலையை தாறுமாறாக உயர்த்துவது தவிர்க்க இயலாதது” என விலையை உயர்த்துவதையேகொள்கையாக கொண்டிராமல், உணவுக்கு பயன்படாத எண்ணெய்வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி முறையை ஊக்கப்படுத்த அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் எரிபொருளின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்தும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

-இரா.சரவணபாபு

Saturday, February 18, 2012

அறிவியல் வானில் பெண் நட்சத்திரங்கள்

 பெண் என்பவர் ஒரு தாய், ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு மனைவி. குடும்பம் என்ற அமைப்பின் ஆணிவேராக இருப்பதும் பெண்தான். அதே சமயம், பொது வாழ்க்கையில் ஆண்களோடு இணைந்து பொறியியல், மருத்துவம், கல்வி, அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் அவர்கள் தங்கள் முத்திரையை அழுத்தமாகப் பதித்தும் வருகின்றனர். தாங்கும் சக்தி அதிகம் தேவைப்படும் மிகக் கடினமான பயிற்சிகள் கொண்ட விண்வெளிப் பயணங்களிலும் கூட அவர்கள் சிறந்த சாதனைகளைச் செய்து வருகின்றனர். 1950-களில் அன்றைய சோவியத் யூனியன் விண் வெளியில் ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோளைச் செலுத்திய பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புது யுகம் பிறந்தது.

 யூரி ககாரின் விண் வெளியில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்து சிறிது காலம் ஆனவுடனேயே வாலெண்டினா டெரஸ் கோவா அந்த சாதனையைத் தொடர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதற்குப் பிறகு மேலும் பல பெண்கள் விண் வெளியில் பயணிக்க அது ஒரு தொடக்கமாக அமைந்தது. 
 
2011 ஜனவரி நிலவரப்படி 282 விண் வெளிப் பயணங்கள் மூலமாக 520 பேர் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்தவர்கள். அதில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப் பான், கொரியா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து சென்ற 56 பேர் பெண்கள். 

இந்தியாவிலும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்குப் பிறகு ஏவுகணைத் திட்டத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருப்பது 48 வயதான டெஸ்ஸி தாமஸ் என்ற பெண்தான். சென்ற ஆண்டு நவம் பர் 15 அன்று ஒரிஸா கடற்கரையின் பாலசோர் சோதனைத்தளத்திலிருந்து அக்னி - ஐஏ ஏவுகணையை விண்ணில் செலுத்தி அவரும் அவரது குழுவினரும் சாதனை படைத்தனர்.

 3000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அந்த ஏவுகணை பழைய சாதனை களை முறியடித்தது. இந்தியாவின் பிரபலமான பெண் விஞ்ஞானியாக டெஸ்ஸி தாமஸ் கருதப்படுகிறார். ஆனால் அதை வைத்து அறிவியல் துறையில் பெண்களுக்குரிய அங்கீ காரம் கிடைத்துவிட்டதாக நாம் மகிழ்ச்சியடைந்துவிட முடியாது. எப்படி ஒரு பிரதிபா பாட்டீலையோ ஒரு மீரா குமாரையோ வைத்து அர சியலில் பெண்களுக்குரிய இடம் கிடைத்து விட்டதாகக் கருதமுடிய தோ அது போன்றதுதான் இது.

பெண் விஞ்ஞானிகளில் மேரி கியூரியைப் பற்றி பலருக்கும் தெரியும். அவர்களுக்குக் கூட அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற வர் என்ற தகவல் தெரியுமாவெனத் தெரியவில்லை. 1963-ல் இயற்பிய லுக்காக நோபல் பரிசு பெற்ற மரியா கோப்பெர்ட்-மேயர், 1964-ல் வேதியியலுக்காக நோபல் பரிசு பெற்ற டோரோதி ஹாட்கின்,1986-ல் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற ரிட்டா லெவி-மாண்டேசினி போன்ற பெண் விஞ்ஞானிகளையோ, பெண் என்ற காரணத்தினா லேயே நோபல் பரிசு பெற வாய்ப் பில்லாமல் போய்விட்ட ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் (1920-1958), லைஸே மேட்னர் (1878-1968), சியன்-ஷியுங் வு (1912- 1997), ஜோசலின் பெல் பர்னெல் (1943- ) போன்ற பெண் விஞ்ஞானிகளையோ எத்தனை பேருக்குத் தெரியும்?

பல கலாச்சார, சமூகத் தடைகளின் காரணமாக நாட்டில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. கலை, சமூக விஞ்ஞானம் போன்ற மென்மையான துறைகளுக்குத்தான் பெண்கள் ஏற்றவர்கள் என்ற கருத்து இன்னமும் பரவலாக இருக் கிறது. அடிப்படையில் பெண்கள் வீட்டுப் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். இது ஆண்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, பல பெண்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்டுள்ள எல்லையும் அதுதான்.

பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பற்றி சமூகவியலாளர்கள் பல ஆண்டுகளாகவே கவலை தெரிவித்து வருகின்றனர். மற்ற எல்லாத் துறைகளையும் போலவே அறிவியல் துறையிலும் சமூகத்தின் பார்வைகள், சமூக நிர்ப்பந்தங்கள், பாலினப் பாகுபாடுகள் போன்ற காரணங்களால் பெண்கள் பிரச்சனை களைச் சந்திக்கின்றனர். மனித வளத்தின் கணிசமான பகுதி சரியான முறையில் பயன்படாமலே வீணாவதை நாம் உணர வேண்டும். சமூகம் பெண்களைப் பார்க்கும் பார்வைகளில் அடிப்படையான மாற்றங்கள் வரவேண்டும். பெண்கள் அறிவியல் துறையில் நியமனம் பெறவும் சாதனைகள் படைக்கவும் உள்ள தடைகளை அகற்ற வேண்டியது மிகமிக அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை.

Sunday, February 12, 2012

முட்களாக மாற்றப்படும் பூக்கள்



தமிழ்சமூகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. ஆனால் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறை யிலேயே ஆசிரியை ஒருவரை ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது ஒரு தனிமனித விரோத குரோதம் சார்ந்த குற்றம் அல்ல. இந்தப் படுகொலை இன்றைய சமூக அமைப்பு, கல்விச்சூழல், பாடத்திட்டம், ஆசிரியர்- மாணவர் உறவு, பெற்றோர் - பிள்ளைகள் உறவு என பல்வேறு தளங்களில் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகிறது. 

கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி கனிவானவர். அதேநேரத்தில் கண்டிப்பானவர் என்றும் அனைத்து மாணவர்களிடமும் அன்போடு பழகக்கூடியவர் என்றும் சக ஆசிரியைகள் கூறியுள்ளனர். கொலை செய்த மாணவன் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண் டிருந்தவன்தான்.

குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியது இன்றைய பாடத்திட்டமும்தான். ஒரே மாதிரியான கல்விமுறை, பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக இந்திய மாணவர் சங்கம் நீண்ட நெடுங்காலமாகப் போராடி வருகிறது. சமூக பொறுப்புணர்வுள்ள ஆசிரியர் சங்கங்களும் இதே கோரிக்கையை முன்வைக்கின்றன. இதன் ஒரு பகுதிதான் சமச்சீர்கல்வி. 

ஆனால், நவீன தாராளமயமாக்கல் சூழலில் கல்வி வணிகமயமாக்கப்பட்டுவிட்டது. எந்த அளவுக்கு கனமான புத்தகங்களை மாணவர்கள் சுமந்து செல்கிறார்களோ அதுவே அறிவின் அடையாளம் என்று சித்தரிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் மாணவர்களை கசக்கிப்பிழி கின்றன. மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம் மட்டும் அளவுகோலாக முன்வைக்கப்படுகிறது. இதே சித்ரவதைக்கு ஆசிரிய சமூகமும் உள் ளாக்கப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட மன அழுத்தம்தான் ஒரு கள்ளமறியா பிஞ்சை கொலைகாரனாக மாற்றியுள்ளது. இந்தி மொழிப்பாடம் தமக்கு கொஞ்சம் கூட புரியவில்லை என்றும், இது குறித்து ஆசி ரியை தொடர்ந்து கண்டித்ததால் கொலை செய் யும் முடிவுக்கு வந்ததாகவும் அந்த மாணவன் கூறியுள்ளான். ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழிவழிக் கல்விக்குப் பதிலாக பல மொழிகளை கற்பிப்பதாக தனியார் பள்ளிகள் விரிக்கும் வர்த்தக வலையில் விழுந்ததால் ஏற் பட்ட விபரீத விளைவுகளில் இதுவும் ஒன்று.

மறுபுறத்தில், இளைய தலைமுறையை நஞ் சாக மாற்றுவதில் திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் முக்கியப் பங்கு வகிக் கின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சமூகப் பொறுப்பற்ற பொறுக்கிகளாகவே ஊடகங் கள் சித்தரிக்கின்றன. அண்மையில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய கொலைவெறி பாடல் இதற்கு ஒரு உதாரணம்.

மறுபுறத்தில் ஆசிரியர் - மாணவர் உறவில் பாடத்திட்டத்தின் சுமை இயல்பான உறவை கெடுத்து வைத்திருக்கிறது. பெற்றோர் - பிள்ளைகள் உறவும் சீரானதாக இல்லை. மதிப்பெண் மட்டுமே ஒரே தகுதியாகக் கருதும் அள வுக்கு பெற்றோர்களை மாற்றியுள்ளது இன்றைய சமூகக் கல்விமுறை. 

சென்னைப் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் இன்றைய சமூகத்திற்கு ஒரு பாடம். இந்தக் கோணத்தில் இதை உணர்ந்து, தீர்வு காண்பதே எதிர்காலத்தில் இளம் கொலையாளி உருவாவதைத் தடுக்கும்.

Friday, January 20, 2012

சூரிய ஆற்றல் தரப்போகும் 20,000 மெகாவாட் மின்சாரம்



சூரிய ஆற்றல் சுற்றுப்புறத்திற்கு எந்தக் கேட்டினையும் விளைவிக்காத சுத்தமான ஆற்றல்.

வடமேற்கு இந்தியாவில் 63 ஏக்கர் நிலத்தில் 36,000 சூரியத் தகடுகளை  வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மிகப்பெரும் திட்டத்தை அசூர் பவர் என்ற நிறுவனம் நிறைவேற்றி வருகிறது. வறண்ட பகுதியில் தகடுகள் நிறுவப்பட்டுள்ளதால் ஐந்து நாட்களுக்கொரு முறை அவற்றின் மீது படியும் தூசுகளைத் துடைத்து சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. கடுமையான மின்பற்றாக்குறை நிலவும் இந்தியாவில் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதை நவீனப் படுத்தி, நிலக்கரியைப் பயன் படுத்தித் தயாரிக்கப்படும் மின் சாரத்தின் அளவைப் படிப்படியாகக் குறைப்பதுதான் திட்டத்தின் நோக்கம்.

2020-க்குள் 2000 மெகாவாட்

இதுவரை 140 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை மட்டுமே இந்தியா பயன்படுத்தி வருகிறது. இதைக் கொண்டு 50,000 மக்கள் தொகை உள்ள ஒரு நகரத்தின் மின்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தயாரிக்கப்படும் சூரிய ஆற்றல் மின்சாரத்தின் அளவு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. 2020-க்குள் இந்த அளவை 20,000 மெகா வாட் ஆக உயர்த்த வேண்டும் என்ற இலக்கினை அப்போது இந்திய அரசு நிர்ணயித்தது. பல ஆய்வாளர்கள் இந்த இலக் கினை எட்டுவது சாத்தியமல்ல என்று கருதினர். ஆனால் இன்று அவர்கள் தங்கள் கருத்தினை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை தோன்றியிருக்கிறது. 2020க்கு சில ஆண்டுகள் முன்ன தாகவே 20,000 மெகாவாட் இலக்கை எட்டிவிட முடியும் என தற்போது ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக அள வில் சூரியத் தகடுகளின் விலை குறைந்ததால்தான் இது சாத்திய மாகியிருக்கிறது. சன்டெக் பவர், யிங்க்லி கிரீன் எனர்ஜி போன்ற சீன நிறுவனங்கள் சூரியத் தகடு களின் உற்பத்தியை அதிகரித்த தால், உலக விலை 30-லிருந்து 40 சதம் வரை குறைந்தது. சீனா, அமெரிக்கா, தைவான், ஐரோப் பிய நாடுகளிலிருந்து இந்திய நிறு வனங்கள் தகடுகளை வர வழைத் துக் கொள்கின்றன. அரசு மானி யம் கொடுத்து ஊக்குவிப்ப தாலும் சூரியத் தகடுகளின் விலை குறைந்திருப்பதாலும் அசூர் போன்ற பல நிறுவனங்கள் இன்று வடமேற்கு இந்தியச் சமவெளிகளில் களம் இறங்கி யுள்ளன. 2000 பேர் வசிக்கும் சிறு கிராமங்களில் கூட சூரிய சக்தித் தகடுகள் மின்னும் காட் சியைப் பார்க்க முடிகிறது.

சூரியசக்தி மின்தயாரிப்பில் ஐரோப்பிய நாடுகளோடு ஒப் பிடும்போது இந்தியா பின்தங் கியே இருக்கிறது. உதாரணமாக, 2010 இறுதியில் ஜெர்மனி 17,000 மெகாவாட் சூரியசக்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் திற னுடன் இருந்தது. ஒரு வருடத் தில் 300 நாட்களில் சூரிய ஒளி தாராளமாகக் கிடைக்கும் நம் நாட்டில் அதைவிட அதிகமாக சூரியசக்தி மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

தயாரிப்புச் செலவு குறையும்

“இந்தியாவில் உள்ள மின் ஆலைகளில் பெரும்பாலானவை நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்களே. அங்கு ஒரு யூனிட்டிற்கு 4 ரூபாய் செலவில் மின்சாரம் தயாரிக் கப்படுகிறது. ஏலத்தில் அது 8-லிருந்து 10 ரூபாய் வரை எடுக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் ஒரு யூனிட் மின்சாரத்திற்குக் கொடுக்கும் விலையும் அதுதான். பெட்ரோலியப் பொருட்களைப் பயன்படுத்தும் ஜெனரேட்டர் கள் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 10 ரூபாய் செலவா கிறது. தற்போது சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் செலவு இதோடு ஒப்பிடும் நிலையில் உள்ளது. சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான தேவை அதிகரித்து வருவதால், ஒவ்வொரு மாதமும் சூரியசக்தி மின்சாரத்தின் உற்பத்திச் செலவு குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் மற்ற வகைகளில் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு ஆகும் செலவிலேயே சூரியசக்தி மின்சாரத்தையும் தயாரிக்க முடியும். தொடக் கத்தில் நிறுவனங்களிடையே கடுமையான போட்டி இருக் கிறது. ஆனால் நாளாவட்டத் தில் கொள்ளை லாபமே நோக்க மாகக் கொண்ட நிறுவனங்கள் காணாமல் போய்விடும். இத் துறையில் உண்மையான ஈடு பாடு உள்ள நிறுவனங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும்” என்கிறார் அசூர் பவர் தலைமை மேலாளர் இன்டர்ப்ரீட் வாத்வா.

பேராசிரியர் கே. ராஜு
(உதவிய கட்டுரை : ‘தி இந்து’வில் விகாஸ் பஜாஜ் எழுதியது)

Wednesday, January 18, 2012

தென்னிந்திய அளவிலான அறிவியல் செய்முறை பணியரங்கு


புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் புதுதில்லி விஞ்ஞான் பிரச்சார் சார்பில் புதுச்சேரி வெற்றி வெங்கடேஷ்வரா ஆசிரியர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இப் பணியரங்கை, விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் நிர்வாகி டி.வி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். புதுவை அறிவியல் இயக்கத் தலைவர் எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.சேகர், துணைத் தலைவர்கள் ஏ.ஹேமாவதி, ஆர்.தட்சிணாமூர்த்தி, த.பரசுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒடிஷா பாரீஸ் செüத்-11 பல்கலைக்கழக பேராசிரியர் பியர் பான்த்ஸ் பயிற்சி அளித்தார்.

இதில், புதுச்சேரி, தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 30 அறிவியல் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இப் பணியரங்கு 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

A series of Innovative Science Experiments Workshops with Prof. Pierre Fontes from France started yesterday at Pondicherry (17-19 Jan) followed by one in Bhopal (21-23 Jan) and then in Mandi (3-6 February) in collaboration with Vigyan Prasar, Department of Science & Technology, Govt. of India.
 
The Pondicherry workshop is being attended by about 25 participants from Andhrapradesh, Karnataka, Tamilnadu, Kerala and Pondicherry.  Prof.Pierre Fontes is a distinguished Nuclear Physicist and Science Communicator from the University of Paris, South 11, Orsay, France (retired) and is currently in India to conduct three workshops to train science teachers and activists on innovative, low cost experiments in science to make science teaching interesting and fun.
 
The programme was inaugurated yesterday at the Vettri Venkateswara Institute (Behind Hotel Mass) with Dr.T.Parasuraman, Vice President of PSF presiding over the function, Mr.T.P.Raghunath, Programme Coordinator welcoming the participants and explaining the background of the programme. The Inaugural talk was delivered by Dr.T.V.Venkateswaran of Vigyan Prasar, New Delhi. This was followed by an introductory speach by Dr.Fontes who started his experiments session with the participants.
 
The programme will continue for two more days. This is being followed by a Workshop at Bhopal Science Centre, Bhopal on 21 to 23 January 2012 and another one at Mandi (Himachal Pradesh). In total about 80 to 100 teachers will be trained on these experiments which require very low cost, kitchen ware materials only but with wonderful results and no less interesting than a fully equipped science lab. And thus, with schools which does not a full fledged science lab can adopt these experiments into their curriculum easily and children too can try it out at their homes.
 
Pondicherry Science Forum in collaboration with the Vigyan Prasar is also planning to bring out a manual for science experiments with which the contents of the training can be disseminated to all the schools in the country as well.



Wednesday, January 11, 2012

குழந்தைகளின் கல்விக்கு வெறும் 1 விழுக்காடுதானா?

குழந்தைகளின் அடிப்படைக் கல்வி, உலக அவையத்து இந்தியா முந்தியிருக்க மிக மிக முக்கியத் தேவை. ஆனால், இந்தியாவில் மிகவும் பிந்தியிருப்பது குழந்தைகளின் கல்விக்கு அளிக் கப்படும் முக்கியத்துவம்தான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக ஒதுக்கப்படும் அரசு செலவினம் ஒருபோதும் அதிகபட்சமாக 4.3 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்ததில்லை. இது உயர்கல்வி உள்ளிட்ட அனைத்துத்துறைகளுக்குமான மொத்தத் தொகை. அடிப்படையான தொடக்கக்கல்விக் கான நிதி மிகமிகக் குறைவு.

இந்தப் பின்னணியில் குழந்தைகளின் கல் விக்காக என மத்திய-மாநில அரசுகள் ஒதுக்கு கிற நிதியிலும் கூட, நேரடியாக அவர்களுடைய கல்விக்கு என ஒதுக்கப்படுவது வெறும் 6 விழுக் காடுதான் என்று அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பாடப்புத்தகங் கள், சீருடைகள், பள்ளியிலிருந்து பாதியில் விலகுகிற குழந்தைகளின் பிரச்சனைகள் இவற் றுக்காக ஒதுக்கப்படுகிற நிதி ஏற்பாடுகள் அந்த 6 விழுக்காட்டிற்குள் அடங்குகிறது. 78 விழுக் காடு வரையில் ஆசிரியர்களின் ஊதியத்திற்கும், 14 விழுக்காடு நிதி பள்ளிகளின் உள்கட்டுமான செலவுகளுக்காகவும் செல்கின்றன. கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்படும் நிதியோ வெறும் 1 விழுக்காடுதான்!

2009 - 2010 கல்வியாண்டுக் கட்டத்தில் பல் வேறு மாநிலங்களின் பட்ஜெட்டுகளில் தொடக் கக் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய அந்த அறிக்கை, இந்த ஒதுக்கீடுகளின் உண்மையான இலக்காகிய குழந்தைகள் எந்த அளவுக்குப் பயனடைந்திருக்கிறார்கள் என ஆராய்கிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாநிலங் களில், தொடக்கக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு, பணக்கணக்கின்படி கணிசமாக அதிகரிக்கப் பட்டிருக்கிறது. 2007-08ம் ஆண்டில் ரூ.68,710 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2009-10ல் அது ரூ.97,255 கோடியாக உயர்த்தப்பட்டது. மாநிலத் துக்கு மாநிலம் மாறுபட்ட இதில் சில வேறுபாடு கள் இருக்கின்றன என்றாலும், ஒட்டுமொத்த மாகப் பார்க்கிறபோது குழந்தைகளின் நேரடிக் கல்விக்கு மிகச் சொற்பமான தொகைதான் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆசிரியர்களின் ஊதியம் அவர்களது நெடும் போராட்டத்தின் பலனாகக் கிடைத்திருப்பது. அதே போல் கூரையில்லாப் பள்ளிக்கூடங்கள் இன்னும் தொடர்கிற நிலையில் உள்கட்டுமானங் களுக்காக, இன்னும் பல மடங்கு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எதற்காக? குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைத்தாக வேண்டும் என்பதற் காகத்தானே? அதற்கான நேரடி நிதியை 1 விழுக்காடு அளவுக்குக் குறைத்துவிட்டு, மற்ற செலவினங்களை மட்டும் அதிகரிப்பதால் என்ன பயன்? ஆசிரியர்களுக்கான நிதி ஒதுக் கீடு குறைவாக உள்ள மாநிலங்களும் இருக்கின் றன. அதற்குக் காரணம் நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக, கணிசமான எண்ணிக்கையில் ஒப் பந்த ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் நியமிக் கப்பட்டிருப்பதுதான்!

கட்டாய இலவசக் கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு குழந்தை களுக்கு நேரடியாக பலனளிக்கும் நிதி குறை வாக இருப்பது ஒருவகையில் அந்தச் சட்டத் தையே மீறுவதாகிவிடும். வசதியுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க, அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கான தரமான கல்வி உரிமையை மறுப்பதாகிவிடும். கல்வியில் ஏற்றத்தாழ்வை ஒழிக்க, போதுமான நிதி ஒதுக்கீட்டிற்கான போராட்டம் வலுப்பெற வேண்டியதன் அவசியத் தைத்தான் இந்த ஆய்வு புலப்படுத்துகிறது.

Saturday, December 24, 2011

சர்வதேச அளவில் நடக்கும் அறிவியல் உருவாக்குவோம் திட்டத்திற்கு ஆய்வு அறிக்கைகள் வரவேற்பு


புதுவை அறிவியல் இயக்கம்பிரான்ஸ் நாட்டு பிரான்ஸ் பல்கலைக்கழகம் தெற்கு 11 உடன்  (University of Paris, South 11, France) இணைந்து சர்வதேச அளவில் அறிவியல் உருவாக்குவோம் (Make ScienceCompetition) திட்டத்தை / போட்டியை இந்தியாவில் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுச்சேரிஅரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் பங்குபெறும் வகையில் புதுவை அறிவியல் இயக்கம், புதுச்சேரிஅரசு பள்ளிக் கல்வித்துறையின் மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திவருகிறது.

2012 ஆம் ஆண்டிற்கான அறிவியல் உருவாக்குவோம் போட்டிக்கான ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. விதிமுறைகள்:

1.     இப்போட்டியில் புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.

2.     இத்திட்டம் ஜனவரி 2012 முதல் ஏப்ரல் 2012 வரை நடைபெறும்.

3.      7வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே பங்குபெறலாம்.

4.     ஆய்வுத்திட்டம் இயற்பியல், வேதியல், கணிதம், அடிப்படை உயிரியியல் ஆகிய பிhpவுகளில் இருக்கலாம்.

5.     ஆங்கிலத்தில் மட்டுமே திட்ட குறிப்புகளை ஆனுப்ப வேண்டும்.
  
6.      கடைசித்தேதி வரும் 2011 டிசம்பர் 28க்குள்  அனுப்ப வேண்டும்.

7.      மேலும் விவரங்களுக்கும் திட்டத்திற்காக விண்னப்படிவத்திற்கும் கிழ்ண்ட மின்அஞ்சல் முகவயிலும் தொலைப் பேசியிலும் தொடர்பு கொள்ளலாம்: மின்அஞ்சல் : cerdpsf@gmail.com  Ph:  0413 -2290733

ஆய்வு அறிக்கைகள் மின் அஞ்சல் மூலம் பெறப்பட்டு அவை பிரான்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கபட்டும் அவற்றில் சிறந்த 12 ஆய்வுத்திட்டங்களை மட்டும் தேர்வு செய்து அனுப்புவார்கள். அந்த திட்டங்கள் துவக்கத்திற்கான உதவி ஊக்கதொகை வழங்கபடும். பிறகு அந்த திட்டம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அவை மீண்டும் பிரான்ஸ் பல்கலைக்கழத்திற்கு அனுப்பட்டு வீடியோ கான்பிரன்சிங் மூலம் சிறந்த 4 ஆய்வு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிக்கு  சான்றிதழும் முதல் பரிசுக்கு 300  Euro முன்று இரண்டாம் பரிசுக்கு தலா 100 Euro அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை அனைத்து அரசுப் பள்ளிகளுகம் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, December 23, 2011

விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லலும் புதிய விண்கலம் ஸ்பேஸ்எக்ஸ்


விண்வெளி அமைப்பான நாஸா தனது ஷட்டில் ரக விண்கலங்கள் உபயோகிப்பதை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், ஸ்பேஸ்எக்ஸ்ரக விண்கலங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரஉள்ளது.

ஏறக்குறைய 30 ஆண்டுகள் 135 முறை ஏவப்பட்ட ஸ்பெஸ் ஷட்டில்ரக விண்கலங்கள் ஏராளமான விண்வெளி வீரர்களை விண்ணுக்கு கொண்டு சென்றது. தற்போது இதற்கு பதில் மிக நவீனரக ஷட்டில்களை நாஸா உருவாக்கி வருகிறது. அதுவரை வீரர்களை விண்ணுக்கு அழைத்துச் செல்லவும் பூமிக்கு திரும்பச் செலுத்தவும் ரஷ்யாவின் சோயூஸ் கேப்சூல்களையே அமெரிக்கா சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் அமெரிக்காவில் பல விண்துறை நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள டிராகன் ரக கேப்சூலுக்கு நாஸா அனுமதி தந்துள்ளது. இந்த கேப்சூல் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இதில் பயணிக்கும் விஞ்ஞானிகள் வானில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு விட்டு, இந்த கேப்சூலிலேயே பூமிக்குத் திரும்புவர்.ஷட்டில் ரக விண்கலம் விமானத்தைப் போல பூமியில் தரையிறங்கும்.ஆனால் இந்த கேப்சூல் பாராசூட் மூலம் பூமியில் தரையிறங்கும்.
ரஷ்யா தான் ஆரம்பம் முதலே கேப்சூல்களை பயன்படுத்தி வந்தது. தற்போது அமெரிக்கா கேப்சூலை பயன்படுத்தவுள்ளது. அமெரிக்கா 2012 பிப்ரவரி மாதம் 7ம் தேதி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் என்றும் இதில் வீரர்கள் செல்ல மாட்டார்கள்என்பதும், சரக்குகள் ஏற்றிச்செல்லும் இந்த கேப்சூல், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அதை கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள விஞ்ஞானிகள் சரக்குகளை இறக்கிய பின், இந்த கேப்சூல் பூமிக்கு திரும்பும். பசிபிக் கடலில் பாராசூட் முலம் இந்தக் கலம் தரையிறங்கும்இந்த விண்கலத்தை உருவாக்கியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் பே பால் நிறுவனரான எலோன் முஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 22, 2011

விவசாய நிலப்பரப்பு வீழ்ச்சி எதிர்கால இந்தியாவின் வீழ்ச்சி
























5 ஆண்டுகளில் 8 லட்சம் ஹெக்டேர் நிலம் குறைந் துள்ளது. வேளாண் சாராத இதரப் பணிகளுக்கு அவை பயன்படுத்தப்பட்டதால் விளைநிலம் குறைந்துள் ளது என நாடாளுமன்றத் தில் செவ்வாய்க்கிழமை யன்று தெரிவிக்கப்பட்டது.

2003-04ம் ஆண்டு 1 லட்சத்து 83 ஆயிரத்து 186 ஹெக்டேர் நிலம் குறைந்துள்ளது. 

2008-09 ம் ஆண்டில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 385ஹெக்டேர் நிலம் குறைந்துள்ளது 

என மக்களவையில் வேளாண் துறை இணையமைச்சர் ஹரிஷ் ரவாத் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

இந்த விளைநிலங்கள்- கட்டிடங்கள், சாலைகள், ரயில்வே பணிகளுக்கு பயன் படுத்தப்பட்டுள்ளன. 

இருப்பினும் உணவு தானிய உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது என்றும், விளைநிலம் சிறிய அளவு குறைந்துள்ளதால்,எந்த எதிர்மறை விளைவையும் வேளாண் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 


விவசாய நிலங்களின் மீது நடக்கும் அநியாய ஆக்கிரமீப்பை எப்படியாது தொடர வேண்டும் என்ற லாபவெறி அப்பட்டமாக தெரிகிறது. 

எதிர்கால சமூகத்தின் மீக துயரமான வாழ்வுக்கு நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

Tuesday, November 29, 2011

கல்வி குற்றத்தில் சிறந்த தமிழ்நாடு!


சாலை விபத்து, தற்கொலைகள், கள்ள நோட்டுப் புழக்கம், மாணவர்கள் தற்கொலை, போலி பாஸ்போர்ட், முதியோர்கள் பாதுகாப்பு எனப் பல குற்றங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.

அடுத்த வரியைப் படித்து அதிர்ச்சி அடைய வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் பல குற்றங்களில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. சாலை விபத்து, தற்கொலைகள், கள்ள நோட்டுப் புழக்கம், மாணவர்கள் தற்கொலை, போலி பாஸ்போர்ட், முதியோர்கள் பாதுகாப்பு என்று பல வகையான குற்றங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறோம் நாம். தேசியக் குற்றப் பதிவுத்துறை (‡National Crime Records Bureau - NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் இந்தத் தகவல்களைத்  தெரிவிக்கின்றன.

சாலை, ரயில் விபத்துகள்

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது தமிழகம். 15 ஆயிரத்து 409 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்த இடம் ஆந்திராவிற்கு (15,337 பேர்), அடுத்து உத்தரப்பிரதேசத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும்.

நாடு முழுக்க கடந்த 2010ம் ஆண்டு 1.61 லட்சம் விபத்துகள் பதிவாகியுள்ளன. அதாவது, நாட்டில் ஒவ்வொரு நாளும் சாலையில், ரயில் பாதையில் 18 பேர் இறக்கிறார்கள். சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் (1.61 லட்சம் விபத்துகளில் 1.34 லட்சம் விபத்துகள் சாலை விபத்துகள்). இதுவரை இந்தியாவிலேயே இல்லாத அளவிற்குக் கடந்த ஆண்டு விபத்துகள் நடந்துள்ளன.

இதற்குப் பெருகி வரும் வாகனங்கள் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 2008ம் ஆண்டில் இருந்ததைவிட 28 சதவீதம் வாகனப் பதிவு அதிகரித்துள்ளது. 20 சதவீதச் சாலை விபத்துகள் இரு சக்கர வாகனங்களாலும் 28 ஆயிரத்து 800 விபத்துகள் கனரக வாகனங்கள், டிரக்குகளாலும் நடந்துள்ளன.

தற்கொலைகள்
வேலையின்மை, வறுமை, கடன் தொல்லை, வரதட்சணைக்கொடுமை போன்றவற்றால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 21 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். 2010ம் ஆண்டு இந்தியாவில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அந்த ஆண்டு தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 16,561 பேர். நாட்டில் நடந்த தற்கொலைகளில் 57.2 சதவீதம் தமிழகம், மேற்கு வங்காளம் (16,037), மகாராஷ்டிரா (15,916), ஆந்திரா (15,901), கர்நாடகா (12,651) ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்துள்ளன. இதில் திகைக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், தற்கொலை செய்துகொள்பவர்களில் 65.8 சதவீதம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்!

முதியோர் பாதுகாப்பு


தமிழகத்தில் முதியோர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்களா? இல்லை என்றுதான் உதட்டைப் பிதுக்கத் தோன்றுகிறது. ஆனால், இதில் ஒரு சின்ன ஆறுதல். ஆந்திராவையும் உத்தரப்பிரதேசத்தையும் அடுத்து, முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மூன்றாவது மாநிலமாகத்தான் இருக்கிறது தமிழகம்.

ஆனால், அதிர வைக்கும் விஷயம் என்னவென்றால் வயதான பெண்களின் பாதுகாப்பு நிலை கவலைக்குரிய வகையில் மோசமடைந்திருக்கிறது. 50 வயதிற்கு மேற்பட்ட 227 பெண்கள் 2010ம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டு 93 பெண்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 2010ம் ஆண்டு 50 வயதைத் தாண்டிய 100 ஆண்களும் 2009ம் ஆண்டு 246 ஆண்களும் கொலையுண்டிருந்தனர்.

‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் தொலைபேசி எண்ணுக்கு (1253) தினமும் 10க்கும் அதிகமான அழைப்புகள் உதவி கேட்டு வருவதாகவும் அதில் இரண்டு முதியவர்கள் தங்களுக்கு பாதுகாப்புக் கேட்பதாகவும் கூறுகிறார்கள். பெரும்பாலும் வயதானவர்கள் தனியாகவே வாழ்கிறார்கள். பணம், நகை என்று கொள்ளையடிப்பவர்களின் இலக்கு இவர்கள் மேலேயே இருக்கிறது. காவல்துறையின் தகவல்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 54 முதியவர்கள் மாநிலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும 10 படுகொலைகள் நடந்துள்ளன.

போலி பாஸ்போர்ட்

போலி பாஸ்போர்ட், விசாவுடன் பறப்பதற்கான வசதியான இடமாகவே தமிழக விமான நிலையங்கள் இருப்பதாக தேசியக் குற்றப் பதிவுத்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் பதிவான இதுபோன்ற 937 வழக்குகளில் 398 பேர் தமிழகத்தில் பிடிபட்டுள்ளனர். தொடர்ந்து கேரளாவில் 209 பேரும் மேற்கு வங்களத்தில் 102, மகாராஷ்டிரா 69, ஆந்திரா 68 வழக்குகள் பதிவாகி உள்ளன. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஒரு வழக்குகூட இல்லை அல்லது 50க்கும் குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன. இந்தியாவிலேயே பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரம் கோவை. தொடர்ந்து திருச்சி, திருவனந்தபுரம் உள்ளது. இதனாலேயேசென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தமிழகத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள் என்று சுமார் 40 இடங்களுக்கு நேரடி விமான சேவை இருப்பது, அதிகப் பயணிகள் போன்ற காரணங்கள் போலி பாஸ்போர்ட்டுக்கு கூறப்படுகிறது. சென்னையில்தான் அதிக அளவில் ஏஜெண்ட்கள் இருக்கிறார்கள். மொத்தம் உள்ள 243 பேரில் 197 பதிவு பெற்ற ஏஜெண்ட்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கில் போலி ஏஜெண்ட்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஐ.நா. அமைப்பின் போதைக் குற்றத்தடுப்புப் பிரிவு வெளியிட்ட ஆவில், போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக இலங்கைத் தமிழர்கள் 23 சதவீதம் பேர் சென்னை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது.

மாணவர்கள் தற்கொலை

கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது 26 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னை, மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில்தான் பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதிலும் சென்னைதான் முன்னிலை. சென்னையில் 170 மாணவர்கள், தில்லியில் 133, மும்பையில் 115 மாணவர்களும் 2010ல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

2009ல் வெறும் 0.9 சதவீதமாக இருந்த முதுநிலை பட்டதாரி மாணவர்களின் தற்கொலை சதவீதம் அடுத்த ஆண்டு 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் ரேங்க் வாங்க வேண்டும், போட்டி மனப்பான்மை, அளவுக்கு அதிகமான கல்விச் சுமை இவையே இதற்குக் காரணம் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

கள்ளநோட்டு

2010ல் சென்னையில் மட்டும் 72 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டு வெறும் 42 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. கள்ள நோட்டுகள் அதிகமாகப் புழங்கும் இடம் மும்பை. கிட்டத்தட்ட இந்த விஷயத்தில் மும்பையை (76) நெருங்கிவிட்டோம் நாம். சென்னையை அடுத்து வேலூரிலும் மதுரையிலும் தலா 31 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்த நகரம் கோயம்புத்தூர் (30). பொதுவாகத் தமிழகத்தில் பெருநகரங்களில்தான் கள்ள நோட்டு அதிகம் புழங்குவதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

132 சேக் போஸ்ட்களில் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து, கள்ள நோட்டு கடத்துபவர்களைப் பிடித்தாலும் இதன் பின்னணியிலிருந்து செயல்படுபவர்கள் யார் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருப்பதாகப் போலீஸ் கூறுகிறது. மும்பை, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் இருந்துதான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாவட்டங்களில் இருக்கும் வேலையில்லாத இளைஞர்களை கள்ள நோட்டைப் புழங்க விடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் காவல்துறையின் அனுமானம்.

அடையாளம் தெரியாத உடல்கள்

மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஏழு அடையாளம் தெரியாத உடல்கள் வருவதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 795 உடல்கள் வந்திருக்கின்றன. தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் இது அதிகம். 2006லிருந்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக இந்த எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது.

போலீஸ் ரெக்கார்டுப்படி 2,739 அடையாளம் தெரியாத உடல்களில் 657 உடல்கள் சென்னை, செங்கல்பட்டு, சூளூர்பேட்டை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டைவிட 248 உடல்கள் அதிகம் கிடைத்துள்ளன. அடையாளம் காண முடியாத உடல்கள் 48 மணி நேரத்தில் மாநகராட்சி உதவியுடன் தகனம் செயப்படுகின்றன அல்லது மருத்துவக் கல்லூரிக்கு தரப்படுகின்றன.
நன்றி கீதா புதியதலைமுறை 

Thursday, November 17, 2011

கல்விச் சிந்தனைகள்




” அறிவு நமக்கு ஆற்றலை அளிக்கிறது
அன்பு நம்மை முழுமையடையச் செய்கிறது”

 டாக்டர். ராதாகிருஷ்ணன் முன்னாள் குடியரசு தலைவர்

நமது இந்தியாவில் 504 பல்கலைக் கழகங்கள் உள்ளன. மொத்தக் கல்லூரிகள் 25,951. இதில் மகளீர் கல்லூரிகள் 2565. இக் கல்லூரிகளில் படிக்கம் மாணவர்களின் எண்ணிக்கை 1.36 கோடி. இதில் பெண்கள் 56.49 லட்சம். 

” கல்வி என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த கருவி
 உலகை மாற்றுவதற்கு அதைப் பயன்படுத்த முடியும்”
                                            
-நெல்சன் மண்டேலா

” அடிப்படை அறிவை வளர்க்கின்ற கல்வியைப் புகட்ட நினைக்காமல், பட்டதாரிகளை உற்பத்தி செய்வது பல்கலைக் கழகங்களின் நோக்கமாக இருக்கக்கூடாது.
                                     
  - ஜவஹர்லால் நேரு.

” அனைத்து குழந்தைகளும் ஓவியர்களே, பிரச்சனை என்னவென்றால்
 வளர்ந்த பிறகும் எப்படி ஓவியராகவே இருப்பது என்பதுதான்”
                                                                  
- பிக்காஸோ

” ஒரு மாணவனுக்கு உண்மையான பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியர்தான்”  

 - மஹாத்மா காந்தி

” வீட்டுக்கொரு புத்தகசாலை வேண்டும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருட்களுக்கும், போக போக்கியப் பொருட்களுக்கும் தரப்படும் நிலை மாறி, புத்தகச் சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை அடிப்படை தேவை. அந்த தேவையை பூர்த்தி செய்ததானதும் முதல் இடம் புத்தகச் சாலைக்கே தரப்படவேண்டும்.

 - அண்ணாத்துரை

“நான் நிலவு வரை செல்வதற்கு உதவியது தாய்மொழி தமிழ்தான்.” 



-    மயில்சாமி அண்ணாத்துரை

” இயல்பிலேயே எதையும் கற்கும் ஆற்றல் குழந்தைகளிடம் உண்டு, மாணவர்களுக்கு எந்த ஆசிரியரும் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் கற்றுகொள்கிற வாய்ப்பை மகிழ்ச்சிக்குரியதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் ஏற்படுத்தித் தருவது மட்டும்தான்.”                   

 - ஜே. ஷாஜஹான்

கல்வியில் தோல்விக்கு இடமில்லை, அனுமதியில்லை என்ற நிலை கொணருவது பெரும் புரட்சிதான்.    

  - டாக்டர். ஆர். ராமானுஜம்

” மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பழைய நிலைமைகளை நியாயப்படுத்தினால் எந்த மாற்றமும் கல்வியில் வரமுடியாது”
          
  - எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க

”கூட்டாக சேர்ந்து கற்பது சிறந்த அரசியல். தனியாகக் கற்பது சுயநலம் என்று புரிந்துகொண்டோம்.”                     

 - பார்பியானா மாணவர்கள்  

” அவர் பிரதமாராக இருக்கும்போது லிப்டில் வந்தார். திடீரென்று லிப்ட் பழுதாகிவிட்டது. 20 நிமிடங்கள் போராடி லிப்டைத் திறந்தனர். வெளியே வந்த அவர் அதிகாரிகளை அழைத்தார். ஓர் ஆலோசனை சொன்னார். ”லிப்டில் சிறியதாய் ஒரு நூலகம் அமைக்கலாம்” என்றார்”   

 - ஜவஹர்லால் நேரு

மொபா. மதுரை