Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Friday, June 13, 2014

ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்

ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் (13 ஜூன் 1831 – 5 நவம்பர் 1879) பிறந்த நாள் இன்று.
கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். இவரது முக்கியமான சாதனை மின்காந்தவியல் கோட்பாடு ஆகும்.
மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் சார்ந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற முன்னைய கவனிப்புக்கள், சோதனைகள், சமன்பாடுகள் போன்றவற்றை இணைத்து மேற்படி கோட்பாட்டை இவர் உருவாக்கினார்.
மக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் என அழைக்கப்படும் இவரது சமன்பாடுகள், மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கின.
இதனைத் தொடர்ந்து மேற்படி துறைகளின் முன்னைய விதிகள், சமன்பாடுகள் எல்லாமே மக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின் எளிமையான வடிவங்கள் ஆயின. மின்காந்தவியலில் மக்ஸ்வெல்லின் பணி இயற்பியலில் இரண்டாவது பெரிய ஒன்றிணைப்பு எனப்படுகின்றது. முதலாவது ஒன்றிணைப்பு நியூட்டனால் செய்யப்பட்டது.

Thursday, October 31, 2013

மாசில்லா பூமிக்கு சத்தமில்லா தீபாவளி அவசியம்.



நண்பர்களே..

பண்டிகைகள் கொண்டாட்டங்கள் இல்லாத ஒரு தேசத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.ஒன்றுகூட அகப்படாது. பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் மனித சமூகம் தேவையின் பொருட்டு, தானே சிருஷ்டித்துக் கொண்டவையே. புராணப் பொய்மைகள் ஜோடிக்கப்பட்ட பின்னர் பண்டிகை தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக மக்கள் கொண்டாடிய பண்டிகைகளை மதங்கள் ஹைஜாக் செய்து அதற்கு புராண முலாம் பூசின. புனிதம் கற்பிக்கப்பட்டது.

இன்றைக்கும் தீபாவளி கும்பிட்டுவிட்டீர்களா எனக் கேட்பவர்களே அதிகம்.தீபாவளி கொண்டாடினீர்களா எனக் கேட்பவர்கள் மிகமிகச் சொற்பம்.

விழாக்களுக்கு பஞ்சமில்லாத இந்த காலகட்டத்தில் விழாக்கள் நல்லதுக்கா? கெட்டதுக்கா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

வசதியான வீடுகளில் கொண்டாடப்படும் விழாக்கள் பெருமளவில் அவர்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அதற்காக செய்யப்படும் சில ஏற்பாடுகள்தான் அவர்களுக்கு புதிதாக இருக்கும்.

ஏழ்மையான குடும்பங்களிலோ நிலைமை வேறு.. அந்த ஒரு நாள் மகிழ்ச்சிக்காக மாடாய் உழைப்பது, கடனை வாங்கிக் கொண்டாடுவது என சிக்கிச் சீரழிந்து மற்ற நாட்களின் மகிழ்ச்சியையும் சேர்த்துத்தொலைக்கும் கொடுமை! இதைப்பற்றி மேலும் விரிவாக நீங்களும் உங்கள் நண்பர்களும் விவாதித்துக் கொள்ளுங்கள்!

விழாக்கள் கொண்டாடுவதற்கு பல நேர்மறையான காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் நமது கொண்டாட்ட முறைகள் இருக்கின்றனவே.. ஒவ்வொரு விழாக்களின்போதும் நாம் அதை முறைப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நாம் சொல்லிக்கொள்வது போல 'அந்த ஒருநாள்' ஏற்படுத்தும் விளைவுகள் அன்றோடு போவதில்லை!

மகிழ்ச்சி என்ற பெயரில் நீங்கள் கொண்டாடிவிட்டுப் போய்விடுவீர்கள், தண்டனைகள் அனுபவிக்கப் போவது அடுத்த தலைமுறைக் குழந்தைகளும் அல்லவா?

எனவே நாம் இப்போது தீபாவளிக்காய்ச்சலில் இருப்பதால் அதுபற்றிச் சிந்திப்பது நல்லது.

"உனக்கு மகிழ்ச்சி தருவதெல்லாம் எனக்கும் மகிழ்ச்சியைத்தரும் என் சின்னஞ்சிறிய மகனே,ஆனாலும் வெடித்துச்சிதறும் வேட்டுக்களிலும்,சீறி ஒளிப்பிழம்பாகும் மத்தாப்புகளிலும் உன்னைப்போல் சில சிவகாசிச்சிறுசுகளின்,சிதைந்த கனவுகளும் சிறைப்பட்ட வாழ்வுமே தெரிவதனால்,வேட்டுக்களும் மத்தாப்புக்களும் வேண்டாம் மகனே"  பேனா மனோகரன். அவர்களின் கவிதையும் நினைத்து பார்க்க வேண்டிய தருனம் இது

நமது இன்றைய சமூகமானது தனித்தனிக் கட்டிடங்களாகவும் தனித்தனிக் கட்டிடங்கள் தனித்தனிக் குடும்பங்களாகவும் தனித்தனிக் குடும்பங்கள் தனித்தனி மனிதர்களாகவும் ஒரு ஆளுமையின் இருப்பு என்பது அனாதையாகிக் கொண்டே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சமூகக்கொண்டாட்டங்கள் பற்றி நாமெல்லாம் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது.

சமூகக் கொண்டாட்டங்கள் மூலம் ஒத்த கருத்துடைய/ ஒரே கட்டிடத்தில்/ஒரே பகுதியில் வாழக்கூடிய அல்லது சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி ஒரே இடத்தில் கொண்டாடமுடியும். இதனால் தனித்தனி ஏற்பாடுகள் தேவையில்லை. காணுமிடமெல்லாம் குப்பைகள் நிறையும் நிலையில்லை. குறிப்பிட்ட நேரம், ஒரே இடம் என்பதால் தேவையற்ற இரைச்சல், அலைச்சல், குழப்பங்கள் இல்லை. சிறப்பாக சூழல் மேலாண்மை செய்யமுடியும். மிகமுக்கியமாக எரிபொருள்/ஆற்றல் சிக்கனம். இதற்காக பள்ளி,கல்லூரிகள், விடுதிகள்,மருத்துவமனைகள் ஆகிய இடங்களிலிருந்து தூரமாய் உள்ள திறந்தவெளி மைதானங்களைத் தேர்வுசெய்வது நல்லது.

*தனியாகக் கொண்டாடுவதை இனியேனும் தவிர்ப்போம்!
*வெடி வெடிப்பதால், வெளிவரும் புகையால் பொதுமக்களுக்கு தேவையற்ற மன உளைச்சல், தலைவலி, சுவாசக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தோல் வியாதிகள் போன்றவற்றைத் தவிர்ப்போம்.

மேலும் அளவுக்கதிகமான நில மாசு காற்று மாசு ஒலி மாசு போன்றவற்றைத் தவிர்ப்போம்.

தேவையற்ற மின்நுகர்வைத் தவிர்ப்போம்

விளக்கெண்ணையைக் கண்டுபிடித்தவன் அதை சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டு கொண்டாடிய நாளே தீபாவளி என்பார் அயோத்திதாசப் பண்டிதர். சமூக அறிவியல் ரீதியாக பண்டிகைகள் குறித்த ஆய்வும் புரிதலும் தேவைப்படுகிறது.மனிதநேயத்தையும் மகிழ்ச்சியையும் மேன்மைப்படுத்தும் பண்டிகைகள் மட்டுமே சடங்குத்தனமான இன்றையப் பண்டிகைகளை அப்புறப்படுத்தும்.

அது ஒற்றை நாளில் ஒற்றை அறிவிப்பில் வந்துவிடாது.இப்போதே அதற்கு முயற்சியைத் துவங்கினால் காலகதியில் அவை மக்கள் பண்டிகையாக முகிழ்க்கும்.

தீப ஒளி ஏற்றுவோம்.

*விழாக்களின் வடிவங்களை மாற்றுவோம்.
*தொடர்ந்து சிந்திப்போம்! பகிர்ந்து கொள்வோம்! செயல்படுவோம்!
*இது குறித்த உரையாடலைத் தொடங்குவோமே!

Sunday, September 22, 2013

வருது வருது ஐசோன் வால் நட்சத்திரம் !

நவம்பர் மாதத்தில் நமக்கு மிகவும் பிடித்த வானவேடிக்கை பண்டிகையான தீபாவளி வருவது தெரியும். அதே மாதம் வானில் இன்னொரு விஷயம் நடக்கப்போகிறது. 'ஐசோன்’ எனப்படும் வால்நட்சத்திரம் பூமியை நோக்கி வரப்போகிறது.
அச்சமூட்டும் வால்மீன்!
'வால்மீன்’ எனப்படும் வால்நட்சத்திரம் வந்தால், நாட்டுக்கு கெட்டது நடக்கும் என்ற நம்பிக்கை உலக மக்களிடம் பழங்காலம் தொட்டே உள்ளது. 1910, மே 19-ல் வந்த 'ஹாலி வால்மீன்’ பூமிக்கு மிக அருகில் தெரிவதாக இருந்தது. அதன் வாலிலிருந்து நச்சு வாயு வீசப்படும் என்றும் சொல்லப்பட்டது. அதனால், பயந்துபோன மக்கள் சிலர் அதற்கு எதிரான மருந்துகள் உட்கொண்டார்கள். வீட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டார்கள். ஒரு சிலரோ அதற்குப் பயந்து தற்கொலையும் செய்துகொண்டனர். ஆனால், அந்த ஹாலி வால்மீன் சாதுவாக வந்து, அமைதியாகப் போய்விட்டது.
யார் இந்த வால்மீன்?
பொதுவாகவே வால்மீன் ரொம்ப சாதுவானதுதான். இதன் உள்பகுதி துளித்துளி மில்லிமீட்டர் அளவே உள்ள தூசுத் துணுக்குகளால் ஆனது. அதனைச் சுற்றி பனிக்கட்டி அடுக்குகள். அத்துடன் கரியமில வாயு, மீத்தேன் மற்றும் அம்மோனியாவும் இருக்கும். இதில் பாறை, வாயுக்கள், பனிக்கட்டியும் இணைந்த உட்கரு இருக்கும். வால்மீன்கள் வான்வெளியில், இரண்டு இடங்களிலிருந்து உருவாகின்றன. ஒன்று, நம் சூரிய மண்டலக் கோள்களைத் தாண்டி உள்ள 'குய்ப்பர் வளையம்’ (Kuiper Belt).அடுத்து, சூரிய மண்டலத்தின் தொலைதூரக் கடைக்கோடி எல்லையில் உள்ள 'ஊர்ட் மேகங்கள்’ (Oort clouds).ஒரு வால்மீன் என்பது  குய்ப்பர் வளையம் அல்லது  ஊர்ட் மேகத்தில் பல கோடி ஆண்டுகள் தங்கி வாழ்ந்த பின்னரே, அங்கிருந்து கோள்களை நோக்கி ஓடிவரும். அதுவும் சூடான சூரிய மண்டலத்தின் உள் வட்டத்துக்குள் வந்தபின்னரே, வால்மீனுக்கு வால் முளைக்கும். அப்போதுதான் அது பிரகாசமாவும் தெரியும்.
பழங்கால கருத்துகளும், உண்மையும் !
பழங்காலத்தில் வால்மீன்கள் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற உண்மை யாருக்கும் தெரியாது. நம் முன்னோர்கள் வால்மீனையும் அதன் வாலையும் பார்த்தும்கூட அது ஒரு விண்மீன்தான் என்று நம்பினர். வால்மீன் பூமியின் வளிமண்டலத்தில் பயணிக்கிறது என்றும் பல நூறு ஆண்டுகளாக  நினைத்தனர். டேனிஷ் நாட்டு வானவியலாளர் டிகோ ப்ராசே (Tycho Brache) என்பவரே, 'வால்மீன்கள் என்பவை சந்திரனையும் தாண்டி வலம் வருகின்றன’ என்ற உண்மையை, முதன் முதலில் கி.பி.1577-ல் கண்டறிந்தார். வால்மீன், கோள்கள் போலவே சூரியனைச் சுற்றி வரும். ஆனால், அது தன் இஷ்டம் போல ஒருசில ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து சுற்றிவிட்டுப் போகும். சில வால்மீன்கள் 20,000 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சில வால்மீன்கள் 60,000 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்கூட வருவது உண்டு. சில வால்மீன்கள் தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டும் வந்து, சூரியனைச் சுற்றிவிட்டு ஓடிவிடும். மீண்டும் வரவே வராது. இப்படி ஓர் ஆண்டில் சூரியனை ஆலவட்டம் போடும் வால்மீன்கள் ஏராளம் ஏராளம்! அது நம்மை, இந்த உலகை எதுவும் செய்யாது. 2013, ஜூலை வரை 4,894 வால்மீன்கள் கண்டறியப்பட்டு பதிவும் செய்யப்பட்டுள்ளன.
புதிய விருந்தாளி!
நாம் இப்போது, நவம்பரில் வரவுள்ள புதிய விருந்தாளி ஐசோன் கதைக்கு வருவோம். மற்ற வால்மீன்கள் போலவேதான் ஐசோனும். ஆனால், ஐசோன் வால்மீன், இதுவரை வந்த வால்மீன்களில் மிகப் பெரியதும், மிகவும் பிரகாசமானதும்கூட.
இந்த ஐசோனின் வயது என்ன தெரியுமா? இது, சூரியனுக்கு முன்னே பிறந்ததாம். இதன் வயது சூரியனைவிட அதிகம் என்கின்றனர். அதாவது, 470 கோடி ஆண்டுகள். அப்போது உருவான அந்த வால்மீன் இப்போதுதான், நம்மை முதல் முறையாகப் பார்க்க வருகிறது. இது மிக மிகப் பெரிது. இதன் வாலின் நீளம், 3,00,000 கி.மீ., அகலம், 5 கி.மீ.
நவம்பர் 22 அன்று, சூரியனுக்கு மிக அருகில் 1.16 மில்லியன் கி.மீ. தொலைவில் வந்து, சூரியனின் ஒளியுடன் போட்டியிடப் போகிறது. 2013, நவம்பர் 28-ம் நாள், பூமிக்கு மிக அருகில் வருமாம். இதனைத் தொலைநோக்கி மட்டுமின்றி வெறும் கண்களாலும் பார்க்கலாம். உலகில் அனைத்துப் பகுதியினரும் பார்க்கக்கூடிய வால்மீன் இதுதான்.
ஐசோனை மேளதாளத்துடன் வரவேற்போம்!
இதற்கான புதுச்சேரி மாநில அளவிலான பயிற்சி பட்டரை வரும் அக்டோபர் மாதம் 9,10தேதிகளில் நடைபெற இருக்கிறது.
நன்றி பேரா சோ.மோகனா ஆ.முத்துக்குமார்

Friday, August 23, 2013

ஐசோன் வால்நட்சத்திரம் வருது பார்க்க தயாரா இருங்க


ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ திலக, ராஜ பாராக்கிரம ,ராஜ ஒளிவீச நம் இந்த நூற்றாண்டின், மிகப் பெரிய அதிசய மான, அற்புதமான, நிலவை ஒளியையே விழுங்கி ஏப்பம் விடும் தன்மையுள்ள ஒரு பெரிய ஒளி மிகுந்த வால்நட்சத்திரம் இந்த 2013,நவம்பர்-டிசம்பரில் வருகிறார், பராக், பராக் ..பராக் 


பொதுவாக வானில் வலம் வரும் ஒரு வால்மீன்/வால்நட்சத்திரத்தின் வருகையை காலம் காலமாகவே ஒரு கெ ட்ட சகுனமாகவே கருதி வரும் சமூகம் இது. ஆனால் பாவம் இந்த இந்த வால் நட்சத்திரம் அப்படி எதுவும் எந்த கெட்ட செயலையும் செய்வதில்லை. ஆனால் கெட்ட பேர் மட்டும் வாங்கிவிட்டது.பொதுவாக வால்மீன் என்பது சூரியனுக்கு அருகில் சுற்றி வரும் ஒரு பணிக்கட்டியால் ஆனா ஒரு பொருள் அவ்வளவே. அது சூரியனை இஷ்டம் போலவே ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து சுற்றி விட்டுப் போகும். சில வால்மீன்கள் 20-200 ஆண்ட்குகளுக்கு ஒரு முறை கூட வருவது உண்டு. சில வால்மீன்கள் தன வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் வந்து சூரியனை சுற்றி விட்டு ஓடியே போய்விடும். மீண்டும் வரவே வராது.இப்படி ஓர் ஆண்டில் சூரியனை ஆலவட்டம் போடும் வால்மீன்கள் ஏராளம் ஏராளம். 

இந்த வால்மீன்களுக்கு ஒரு உட்கருவ்வும், ஒரூ வாலும் இருக்கும். கொஞ்சம் சேட்டைக்கார வால்மீன்களுக்கு /இரண்டு வால்களும் உண்டு. ஆனா இப்ப இன்னும் மூணு மாசத்துலே வரப்போற வால்மீன் ரொம்ப ரொம்ப பெரிசாம். வாலின் நீளம், ஒரு சில மீட்டரிலிருந்து, பல கிலோ மீட்டர் நீளம் வரை கூட இருப்பதுண்டு. அனைத்தும் பனிக்கட்டியால் ஆனவை; . ஆதிகாலத்தில் ஒவ்வொரு நாகரிகத்திலும், வால்மீன்கள் வந்து போன பதிவை குறிப்பிட்டு வைத்துள்ளார்கள. ஏ சு கிறிஸ்து பிறந்த போ து கூட ஒரு வால்மீன் தோன்றியதாக தகவல் பதிவு செய்யப்பட்டுஅது. 

நவம்பர் மாதம் வரப்போகிற ஹீரோ வான்மீனை கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் நாள்தான் ஓர் அமெச்சூர் வானவியலாளரான, வைட்டாலி நெவ்ஸ்கி மற்றும் அர்த்யோன் நோவிசொநோக் (Vitali Nevski and Artyom Novichonok ) கண்டுபிடித்தனர். அந்த வால்மீனைப் பார்க்க பயன்படுத்திய கருவியின் பெயரைக் கொண்டே அதற்கு 
ஐசோன் ((ISON) )என்று பெயரிட்டுள்ளனர் the International Scientific Optical Network (ISON) என்பதன் கருகிய பெயர்தான் இஸ்கான். இதனை ரஷ்யாவிற்கு அருகில் கிஸ்லோவோட்ச்க் (near Kislovodsk, Russia.)என்ற இடத்தில் கண்டறிந்தனர். 

இந்த ஐசோன் வால்மீன் 2013, நவம்பர் 28 ம் நாள் , பூமிக்கு மிக அருகில் வருமாம். அதாவது சூரியனின் மையப்புள்ளியிலிரு ந்து சுமார் 1,800,000 km; தொலைவில் ( 0.012 AU வானியல் அலகில் ) வலம் வருமாம். ஊர்த் மேகத்திலிருந்து புறப்பட்டு வரும் புது வரவாம் இது. அக்டோபர் முதல் நாள் செவ்வாய்க்கு அருகிலும், டிசம்பர் 27 ல் பூமிக்கு அருகிலு ம் வரும். அதுவும் பூமி அதனுடைய சுற்றுவட்ட த்திற்கு மிக அருகில் 2014, ஜனவரி 12-14 நாட்களில் இருக்கும். 2014 ஜனவரியில் இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும். 

நவம்பர் நெருங்க நெருங்க ஐசோ ன் மிகப் பிரகாசமாய் தெரியும். எப்படி இருக்கும் தெரியுமா? முழு நிலவின் ஒளியையும், வெளிச்சத்தையும் கூட இந்த ஐசோனின் ஒளி விழுங்கி ஏப்பம் விட்டு விடுமாம். இந்த நூற்றாண்டில் வரும் மிகா பிரகாசமான வால்மீன் ஐசோன் ,மட்டுமே. மறந்துடாம எல்லாரும் இந்த வால்மீனைப் பாருங்கப்பா.. உங்க பிள்ளை குட்டிகளுக்கும் காட்டுங்கள். அது வர்ற ஒரு பத்து நாள் மின்னாடி பாக்கி விஷயம் பேசுவோம். 

பேரா.சோ.மோகனா

Sunday, July 8, 2012

கடவுள் என்ற கருத்துக்கு சவக்குழி நோன்டிய கடவுள்துகள்


























பிரபஞ்ச ரகசியம் என்று ஒரு சொல் உண்டு. பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது. ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது; அணுக்களால் ஆனது உலகம் என்று.

13750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிக்-பேங்க் எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.
எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன. நாம் வாழுகிற பூமி, நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி, செல்போன், மேசை, நாற்காலி, பேனா, மோட்டார் வாகனங்கள், இப்படி எல்லாமே அணு சேர்க்கையில் உருவானவைதான். இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.
அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது. அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின்போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இதற்காக பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து, உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.
இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-ஆவது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும்,  இந்த ஹிக்ஸ் போசான் அல்லது இகிசு போசானைக் கடவுள் துகள்(God Particle) என்றும் குறிப்பிடுவர், ஆனால் இதைக் கண்டுபிடிக்க அரிதாக இருந்ததால், "கிடைக்கமாட்டேன் இருக்கின்றதே" என்னும் பொருளில் "goddamn particle" என்று நோபல் பரிசாளர் இலியான் இலேடர்மன் (Leon M. Lederman) குறிப்பிட்டதால், அது பதிப்பாளர்களால் சுருக்கம் பெற்று கடவுள் துகள் என்று பிழையான பொருளுடன் வழங்காயிற்று. 

இந்தத் துகளின் பண்புகளை மிகவும் ஒத்த ஓர் அணுத்துகளை, சூலை 4, 2012, பெரிய ஆட்ரான் மோதுவியில் நிகழ்த்திய இரண்டு தனித்தனி செய்நிலை மெய்த்தேர்வில் இருந்து கண்டுபிடித்தனர். "225GeV/c2 நிறையுடன் (ஏறத்தாழ 133 நேர்மின்னிகள் நிறை) உள்ள புதிய அணுத்துகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

 கடவுள் துகளுக்கு இசைவான இணை அணுவியல் துகள் (New Subatomic Particle) என ஹாட்ரன் மோதி (Large Hadron Collider - LHC) விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கடவுள் துகள் உண்மையில் இருக்கிறதா? அப்படியாயின் இதன் நிறை (Mass) என்ன என்தை கண்டுபிடிக்க கடந்த 45 வருடங்களாக ஆராய்ச்சிகள்  மேற்கொள்ளப் பட்டுவந்தன. குறித்த ஆராய்ச்சியின் தொடக்க நிலை முடிவுகளாக இவை கணிக்கபட்டுள்ள போதும், இவை ஆச்சரியந்தருபவையாகவும், உணர்ச்சிகரமானதுமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அடிப்படை அறிவியல் (Fundemental Science) என்பது இந்த உலகத்துக்கு பொதுவானது. அது தனித்து யாரும் உரிமை கோரமுடியாது. அடிப்படை அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Appoled Science) இரண்டையும் சமமாகவே உலக மக்கள் கருத வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் உண்பவற்றில், ருசியானது எது? என்பது மட்டும் உங்களுக்கு தெரிந்திருந்தால் போதாது. 

நஞ்சானதும் எது என தெரிந்திருக்கவேண்டும். இந்த ஆராய்ச்சிகள் அடிப்படை அறிவியலுக்கும், பயன்பாட்டு அறிவியலுக்கும் இடையிலான ஆழமான முடிச்சுக்களை நோக்கி செல்வதாக குறிப்பிட்டனர். இந்த அணுத்துகள் கண்டுபிடிப்பு, நமது பேரண்டம் தொடங்குவதற்கு முன் எதுவும் இருந்ததில்லை, வெறும் சூனியமாகவே இருந் தது என்ற கருத்தை நிராகரிக்கிறது. கார்ல் மார்க்ஸ் சொன்னதுபோல், எங்கும் எப்போதும் பொருள் என்பது இருந்து வந்திருக்கிறது. பொருள் என்பதற்கு ஆதி - அந்தம் இல்லை என்பதை மெய்ப்பிக்கிறது.இந்தக் கண்டுபிடிப்பால் பேரண்டம் உரு வாவதற்கு முன் கருமைப்பொருள் இருந்தது - கருமைப்பொருள், ஒளிப்பொருள் என இருந் தது என்ற கருத்து வலுப்படக்கூடும். இத னால், மக்கள் வாழ்வுக்கு என்ன பயன் என்ற கேள்வி எழுவது இயல்பு. 

 பேரண்டத்தையும், உலகத்தையும், வாழ்க் கையையும் அறிவியல் பூர்வமாக புரிந்து கொள் வதற்கு இதுவும் உதவும்.இந்த ஆராய்ச்சிக்காகவே உருவாக்கப் பட்ட சோதனைக் கருவிகளும், காந்தப் புலன் கருவிகளும் எதிர் காலத்தில் மருத்துவ சோத னைகளுக்கு மிகவும் பயன்படும். பொருளின் “திரட்சி” சுருக்கப்பட்டு, செயல் திறன் அதிக ரிக்கப்படும். அதனால் என்ன பயன்? எடுத் துக்காட்டாக இன்று ஒரு ஜெட் விமானம் 200 டன் எடையில் தயாரிக்க முடிகிறது. இந்த கண்டுபிடிப்பின் கோட்பாடுகளை பயன் படுத்துவதன் மூலம், அதே விமானத்தை 20 டன் எடையில் தயாரிக்க முடியும்! இதனால், எரிபொருள் செலவு மிகப்பெருமளவுக்கு சேமிக்கப்படும்.வேறு கோள்களுக்கு விண்வெளிக் கப்பல் களை அனுப்புவது என்பது இன்று ஒரு கண் டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு விமானத்தில் செல்வதுபோல் எளிதாகிவிடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொருள் முதல்வாத சிந்தனைகளை உரத்து உரைக்கும் இந்த அணுத்துகள் ஆராய்ச்சி யில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். கடவுள் என்ற கருத்துக்கு சவக்குழி நோன்டிய கடவுள்துகள் எப்படியோ கடவுள் என்ற கருத்துக்கு மரண அடிவிழுந்து அதன் மூலம் மனிதர்கள் தங்களின் தவறுகளையும் எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ள அறிவியலின் துணையை முழுமையாக நம்புமும்  காலம் நெருங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது

Thursday, May 17, 2012

அறியாமையும் அச்சமுமே சோதிடத்திற்கு அடித்தளம்


அறிவியல் மனநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்கே சோதிடம் எதிரானது. ஆனால் நம் நாட்டின் பெரும் பாலான மக்களுக்கு சோதிடமே உந்துசக்தியாக இருக்கிறது. படிப்பறி வற்றவர்கள்தான் இந்த மோகத்திற்கு பலியாவார்கள் என்பதும் இல்லை. படித்தவர்களை சோதிட அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கக்கூடியதாக அவர்கள் படிக்கும் படிப்பு இல்லை. மேலைநாட்டு சோதிடமாக இருந்தா லும் சரி, இந்திய சோதிடமாக இருந்தாலும் சரி.. அதில் அறிவியலுக்குப் பொருந்திவரக் கூடிய தன்மைகள் அறவே கிடையாது. மனிதர்களின் அறியாமை மற்றும் அச்சம் இரண்டின் விளைவாக உருவானதே சோதிடம் என்று சொல்வது மிகையாகாது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் வானத்தைக் கூர்ந்து பார்த்து சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள் என்பது உண்மை.

ஆனால் அவர்கள் கண்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்களால் அறிவியல் விளக்கம் சொல்ல இயலவில்லை. இரவு வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களின் வடிவ அமைப்புகள் மாறுவது, சந்திரனின் வளர்பிறை தேய்பிறைகள், நட்சத்திரங்களைப் போன்று தோற்றமளிக்கும் கிரகங்களின் சஞ்சாரங்கள், எங்கிருந்தோ தோன்றி பிறகு மறையும் வால்நட்சத்திரங்கள் போன்ற விண்வெளி நிகழ்வுகள் பற்றி சரியான விளக்கம் அளிக்கும் அள வுக்கு அன்றைய அறிவியல் வளர்ந் திருக்கவில்லை. ஆதிகால மனிதர் களுக்கு இவை எல்லாமே அதிசயங் களாகத் தோன்றியிருக்க வேண்டும். சில பிரகாசமான நட்சத்திரங்கள் சேர்ந்து குறிப்பிட்ட சில உருவங்கள் போல் தோன்றுவதே நட்சத்திரக் கூட்டங்கள் அவர்கள் வாழ்வில் நடந்த சில நிகழ்ச்சிகள், விண்ணில் அவர்கள் பார்த்த நட்சத்திரக் கூட்டங்கள் அல்லது கிரகங்களின் சஞ்சாரத்தோடு தொடர்புடையவையாக அவர்களுக் குத் தோன்றியிருக்கக் கூடும். விண் ணில் உள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள், வால்நட்சத்திரங்கள் போன்றவை தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் சக்தி கொண்டவை என அவர்கள் நம்புவ தற்கு இத்தகைய தற்செயல் ஒற்றுமை நிகழ்வுகள் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் இந்த நம்பிக்கைகள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான புரிதலோ தொலைநோக்கி போன்ற சாதனங்களோ இல்லாத காலத்தில் - வானவியல் ஒரு அறிவியல் துறையாக பெருமள வுக்கு வளராத காலகட்டத்தில் - தோன் றியவை என்பதை நாம் நினைவில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொள் வது நல்லது.

முன்காலத்தில் வால் நட்சத்திரங்கள் தோன்றுவது மர்மமாக இருந்ததால் அவை பீதியைக் கிளப்பின. இன்று அவை எங்கிருந்து வருகின்றன, எங்கே செல்கின்றன என்ற விவரங்கள் நமக்குத் தெரிந்த ரகசியங்கள் ஆகிவிட்டதால் மர்ம முடிச்சுகளும் அகன்றுவிட்டன. விண்ணில் ஏவப்பட்ட கலங்கள் பல கிர கங்களின் அருகே சென்று கிரகங்களின் தன்மைகள் பற்றி ஆய்வுகளை நடத்தி விட்டன. சில கிரகங்களில் விண்கலங் கள் இறங்கியே கூட ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. சந்திரனில் மனி தர்களே இறங்கி நடை பயின்ற அதிசயம் கூட நிகழ்ந்துவிட்டது. காலம் காலமாக மனிதனின் கற்பனைக்கு வளம் சேர்த்த சந்திரனை இன்று மனித சக்தி தொட்டுப் பார்த்துவிட்டது. பூமி எந்தெந்த தனி மங்களால் ஆனதோ, ஏறக்குறைய அதே தனிமங்களால் ஆனவைதான் மற்ற கிரகங்கள் என்ற உண்மையும் விண்வெளி ஆய்வுகளால் தெளிவாகி விட்டது. பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதையும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் உண்மையான தன்மைகள் என்னவென்பதையும் அறிவியல் இன்று தெளிவாக விண்டுவைத்துவிட்டது. நட்சத்திரங்களில் சூரியனைத் தவிர மற்றவை பூமியிலிருந்து பல ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. அவ்வளவு தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் பூமியில் உள்ள மனிதர்களின் ‘தலைவிதி’யையோ, குணங்களையோ தீர்மானிக் கும் சக்தி கொண்டவை என நம்பு வதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் கிடையாது. வானத்தில் தொலைதூரத் தில் உள்ள ஒரு கிரகம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் (யீடிளவைiடிn) இருக்கும் காரணத் தால் அது பூமியில் உள்ள ஒரு தனிப் பட்ட மனிதரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதை சோதிடர்களால் அறிவியல் பூர்வமாக விளக்க முடிவ தில்லை. சோதிட சாஸ்திரத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கு மேல் அவர்களால் விளக்கமளிக்க முடி யாது.

பேராசிரியர் கே. ராஜு

Thursday, April 19, 2012

சிறுநீரக மாற்று சிகிச்சை


சிறுநீரகங்கள் மனித உடலில் மிக முக்கியமான இரு உறுப்புகள். அவரைக்காய் வடிவத்தில் உள்ள இவை விலா எலுப்புக்கூட்டிற்குக் கீழ் முதுகெலும்புக்கு இருபக்கத் திலும் அமைந்திருக்கின்றன. இரத் தத்திலிருந்து கழிவுப் பொருள் களையும் நீரையும் அகற்றி சிறுநீர் வழியாக வெளியேற்றும் வேலை யை அவை செய்கின்றன. ஒரு வீட் டைக் கூட்டிப் பெருக்கிக் குப்பை களை அகற்றாவிட்டால் என்ன ஆகும்? சிறுநீரகம் இல்லை யெனில் உடலின் நிலையும் அது தான். ஒவ்வொரு நாளும் சுமார் 50 காலன் ரத்தத்தைச் சுத்தி கரித்து கழிவுகளை அவை பிரித் தெடுக்கின்றன. கழிவுகள் சிறுநீர்க் குழாய்கள் வழியாக சிறுநீர்ப்பை யை அடைகின்றன.

பின்னர் சிறு நீராக அவை வெளியேறுகின்றன. நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், புகை பிடித்தல், குடிப் பழக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாக நேரும். உயிர் வாழ்வதற்கு ஒரு சிறு நீரகமே போதுமானது. எனவே சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான ஒருவரிடமிருந்து ஒரு சிறுநீரகத்தை எடுத்துப் பொருத்துவது சிறுநீரக மாற்று சிகிச்சை என அழைக்கப்படுகிறது.சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சிறுநீரக மாற்று சிகிச்சைக்குப் பெயர் பெற்றது. இந்த ஆண்டு மார்ச் 20 அன்று அங்கு 1000-வது தடவையாக இச் சிகிச்சை நடைபெற்றது. இந்தியா வில் இந்த சாதனையைச் செய்த முதல் அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையே என்கிறார் மருத் துவமனையின் டீன் வி. கனகசபை.25 ஆண்டுகளுக்கு முன் 1987 ஜூலை 10 அன்று இந்த மருத்துவமனையின் முதல் சிறு நீரக மாற்று சிகிச்சையைச் செய் தவர் டாக்டர் எம்.ஏ. முத்துசேதுபதி. “25 ஆண்டுகளில் 1000 சிறுநீரக மாற்று சிகிச்சை நடந்திருப்பது ஒரு சாதனைதான். 1982-ல் ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் முதன்முதலாக இந்த சிகிச்சையை நாங்கள் செய்தோம். பிறகு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்ற லாகி வந்ததும் அந்த சிகிச்சையைத் தொடர்ந்தோம். 25 ஆண்டுகளுக்கு முன் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொண்டவர்களில் சுமார் 80 சதம் பேருக்கு சிகிச்சைக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழக் கூடிய வாய்ப்பு இருந்தது. படிப்படி யாக இதில் முன்னேற்றம் ஏற்பட் டது. தமிழகத்தில் சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடை பெற்று வருவதற்குக் காரணம், சிகிச்சை செய்துகொண்டவர் களுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்க மருந்துகள் (iஅஅரnடிளரயீயீசநளளiடிn னசரபள) இலவசமாக அளிக்கப்பட்டதுதான்” என்கிறார் டாக்டர் முத்துசேதுபதி. “இன்று இந்த மருந்துகளின் விலை 10000 ரூபாயிலிருந்து 12000 ரூபாய் வரை ஆகிறது.

மாநில அரசு நோய் எதிர்ப்புத் திறன் சிகிச்சைக்கு 2 கோடி ரூபாயை ஒதுக்கியிருக் கிறது” என்கிறார் டாக்டர் கனக சபை. மரணமடைந்தவர்களின் சிறு நீரகத்தை எடுத்து நோயாளிகளுக் குப் பொருத்தும் சிகிச்சை (உயனயஎநச வசயளேயீடயவே) 1996-ல் முதன் முத லாக இங்கு நடைபெற்றாலும் 2008-ஆம் ஆண்டிலிருந்தே பரவ லாக நடைபெறத் தொடங்கியிருக்கிறது.உலக சிறுநீரக நாளாக மார்ச் 8 அனுசரிக்கப்படுகிறது. அன்று சென்னையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் களும், சிறுநீரக தானம் செய்தவர் களும் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ள இருக்கும் நோயாளி களைச் சந்தித்து உரையாடினர். 17 ஆண்டுகளுக்கு முன் மாற்று சிறு நீரகம் பொருத்திக் கொண்ட ஒருவர் தன்னுடைய அனுபவங்களை மற்ற வர்களுடன் பகிர்ந்து கொண்டார். சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் நோயாளிகளுக்கு இந்த சந்திப்பு உற்சாகத்தையும் நம்பிக்கையை யும் அளித்தது. “சிகிச்சைக்குப் பிறகு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளை நான் அறிவேன். நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்க மருந்துகளின் விளைவாக ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதுதான் சவாலாக இருக் கிறது” என்கிறார் டாக்டர் முத்து சேதுபதி.சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டவர்களுக்கு மாற்று சிறுநீர கமே புனர்வாழ்வு அளிக்கிறது. எனவே, இத்துறையில் உள்ள சவால்களைச் சந்தித்து நூற்றுக்கு நூறு வெற்றி அடைய எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவோம்.

பேராசிரியர் கே. ராஜு
(உதவிய கட்டுரை : தி இந்துவில் திருமிகு ஆர். சுஜாதா எழுதியது)

Sunday, March 18, 2012

எண்ணெய் வித்துக்களிலிருந்து உயிரி எரிபொருள் அரசு ஊக்கப்படுத்துமா?




நாட்டின் எரிபொருள் தேவையை சமாளிக்க இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்தால் கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும். ஆகையால் உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தியாவின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே, செல்கிறது. நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 70 விழுக்காட்டிற்கு மேல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கம், நாட்டின் வாகனங்கள் பெருக்கம், அவசியமற்ற ஆடம்பரம் என நாட்டின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் எரிபொருள் பயன்பாடு சுமார் 63 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்டு வரும் நிலையற்ற தன்மை, தவறான பொருளாதார கொள்கை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் விஷயத்தில் நம்நாடு நெருக்கடியை சந்திக்க வேண்டிவரும். ஏற்கனவே கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோல்-டீசலை உபயோகிப்பதால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்கள் சுற்றுச்சூழலை மிகவும் பாதிப்பதாக உள்ளது.

இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் சார்ந்த எரிபொருளுக்கு மாற்றாக உயிரி எரிபொருளை உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் எரிபொருள் தேவையை சமாளிப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க இயலும். உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் எந்ததெந்த வித்துக்களில் இருந்து பெற முடியும் என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதில், உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு வசதிகள் அதிகமாக இருக்கிறது; ஆனால் அதனை நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை; கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவிகிதமாவது இந்த உணவுக்கு பயன்பாடாத எண்ணெய்வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் உயிரி எரிபொருள் உற்பத்திக்கு கொடுத்தால், நமக்கான எரிபொருள் தேவையில் கணிசமான பகுதியை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.குறிப்பாக காட்டாமணக்கு, புன்னை,இலுப்பை, மற்றும் புண்ணை மரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் மூலம் உயிரி எரிபொருள் உற்பத்தி செய்ய இயலும் என்பது வெற்றிகரமாக கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.கச்சா எண்ணெய் மூலம் பெறப்படும் எரிபொருளை விட உயிரி எரிபொருள் எவ்விதத்திலும் குறைந்தது இல்லை என்பதும், குறிப்பாக சுற்றுச்சூழலுக்குஎவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதும் ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நீலகிரி மலை ரயில் இந்த உயிரி எரிபொருள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
உணவுக்கு பயன்படாத எண்ணெய்வித்துக்கள் என்று கண்டறியப்பட்டுள்ள இந்த மரங்களை வளர்ப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை என்பது கூடுதல் வசதி ஆகும். மேலும் தொடர் கவனிப்பும் தேவைப்படாது. அரசு சரியாக திட்டமிட்டு செயல்படுத்த ஆரம்பித்தால் மிகப்பெரிய பலனை அடைய முடியும். இந்தியாவில் பயனற்ற நிலையில் பல லட்சக்கணக்கான ஹெக்டேர் தரிசு நிலங்கள் இருக்கிறது. அந்த இடங்களில் புங்கன், கட்டாமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களை பயிரிட்டு பயன்படுத்த துவங்கலாம். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். கூடுதலாக தரிசு நிலங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

 இதன் மூலம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். இதுபற்றி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் துரைராசு ஐ.எப்.எஸ். யிடம் கேட்டபோது:உணவுக்கு பயன்படாத உயிரி எரிபொருள் உற்பத்திக்கு காட்டாமணக்கு, புங்கன் உள்ளிட்ட 10 மர வித்துக்கள் மூலப்பொருட்களாக உள்ளன.

இந்த மாவித்துகள் உற்பத்தியில் கன்று நடுவது முதல் வளர்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது வரை உள்ள பிரச்சனைகளை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மரம் மற்றும் விதைகள் பற்றிய விபரங்களும், அதன் உயர்ந்த பலன் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்லூரி மாணவ- மாணவியருக்கு இது குறித்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்ததப்படுகிறது. இந்த முகாம்களில் உயிரி எரிபொருளின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரி எரிபொருளுக்கான முலப்பொருட்கள் தயாரிப்பு முறைகள் விரிவாக விளக்கப்படுகிறது. மேலும் உயிரி எரிசக்தியின் மர வளர்ப்பு பற்றி மரப்பண்ணைகளுக்கு நேரிடையாக அழைத்துச் சென்று அவர்களின் சந்தேகங்களை நீக்குவதோடு, சிறந்த ஆலோசனைகளையும் பெறுகிறோம் என்றார். மின் சக்தியின் உற்பத்தியை எடுத்துக் கொண்டால் நிலக்கரி மூலம், காற்றின் மூலம், நீரின் மூலம், சூரிய ஒளியின் மூலம், அணுசக்தி மூலம் என பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பல வகைகளில் தயாரிக்கப்படும் மின்சாரமே இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் பற்றாக்குறையாக நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில் தடைப்பட்டு வருகிறது.

 இதே நிலைதான் எரிசக்திக்கும். இறக்குமதியை மட்டுமே நம்பிக் கொண்டு அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொள்ளாமல், “ உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்த்துவிட்டது. அதனால் இங்கும்பெட்ரோல் - டீசல் விலையை தாறுமாறாக உயர்த்துவது தவிர்க்க இயலாதது” என விலையை உயர்த்துவதையேகொள்கையாக கொண்டிராமல், உணவுக்கு பயன்படாத எண்ணெய்வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி முறையை ஊக்கப்படுத்த அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் எரிபொருளின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்தும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

-இரா.சரவணபாபு

Sunday, February 19, 2012

புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


தானே புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரியில் கடந்த டிசம்பர் 30ஆம்தேதி தானே புயலால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் அடங்கிய இடுபொருட்கள், மாணவர்களுக்கு புத்தகபைகள், நோட்டு புத்தகங்கள், பெண்கள் வீட்டு தோட்டத்தில் காய்கறிகள் பயிரிடுவதற்கு விதைகள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவை  வழங்கும் நிகழ்ச்சி ரெட்டியார்பாளையம், பாகூர், உச்சிமேடு கிராமம் ஆகிய பகுதியில் நடைபெற்றது.

 இந்நிகழ்சியில் அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் S.சேகர், துனைதலைவர் முனைவர் T. பரசுராமன் நிர்வாகிகள் R. தட்சணாமூர்த்தி, A. ஹேமாவதி, T.P.ரகுநாத், M. சுதர்சனன், P. ரவிச்சந்திரன், R. ரமேஷ், K. விஜயமூர்த்தி, சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் செயலாளர் டி.சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

இதேப்போல் கடந்த ஜனவரி மாதத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, சமையல்என்ணெய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

Saturday, February 18, 2012

அறிவியல் வானில் பெண் நட்சத்திரங்கள்

 பெண் என்பவர் ஒரு தாய், ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு மனைவி. குடும்பம் என்ற அமைப்பின் ஆணிவேராக இருப்பதும் பெண்தான். அதே சமயம், பொது வாழ்க்கையில் ஆண்களோடு இணைந்து பொறியியல், மருத்துவம், கல்வி, அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் அவர்கள் தங்கள் முத்திரையை அழுத்தமாகப் பதித்தும் வருகின்றனர். தாங்கும் சக்தி அதிகம் தேவைப்படும் மிகக் கடினமான பயிற்சிகள் கொண்ட விண்வெளிப் பயணங்களிலும் கூட அவர்கள் சிறந்த சாதனைகளைச் செய்து வருகின்றனர். 1950-களில் அன்றைய சோவியத் யூனியன் விண் வெளியில் ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோளைச் செலுத்திய பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புது யுகம் பிறந்தது.

 யூரி ககாரின் விண் வெளியில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்து சிறிது காலம் ஆனவுடனேயே வாலெண்டினா டெரஸ் கோவா அந்த சாதனையைத் தொடர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதற்குப் பிறகு மேலும் பல பெண்கள் விண் வெளியில் பயணிக்க அது ஒரு தொடக்கமாக அமைந்தது. 
 
2011 ஜனவரி நிலவரப்படி 282 விண் வெளிப் பயணங்கள் மூலமாக 520 பேர் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்தவர்கள். அதில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப் பான், கொரியா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து சென்ற 56 பேர் பெண்கள். 

இந்தியாவிலும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்குப் பிறகு ஏவுகணைத் திட்டத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருப்பது 48 வயதான டெஸ்ஸி தாமஸ் என்ற பெண்தான். சென்ற ஆண்டு நவம் பர் 15 அன்று ஒரிஸா கடற்கரையின் பாலசோர் சோதனைத்தளத்திலிருந்து அக்னி - ஐஏ ஏவுகணையை விண்ணில் செலுத்தி அவரும் அவரது குழுவினரும் சாதனை படைத்தனர்.

 3000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அந்த ஏவுகணை பழைய சாதனை களை முறியடித்தது. இந்தியாவின் பிரபலமான பெண் விஞ்ஞானியாக டெஸ்ஸி தாமஸ் கருதப்படுகிறார். ஆனால் அதை வைத்து அறிவியல் துறையில் பெண்களுக்குரிய அங்கீ காரம் கிடைத்துவிட்டதாக நாம் மகிழ்ச்சியடைந்துவிட முடியாது. எப்படி ஒரு பிரதிபா பாட்டீலையோ ஒரு மீரா குமாரையோ வைத்து அர சியலில் பெண்களுக்குரிய இடம் கிடைத்து விட்டதாகக் கருதமுடிய தோ அது போன்றதுதான் இது.

பெண் விஞ்ஞானிகளில் மேரி கியூரியைப் பற்றி பலருக்கும் தெரியும். அவர்களுக்குக் கூட அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற வர் என்ற தகவல் தெரியுமாவெனத் தெரியவில்லை. 1963-ல் இயற்பிய லுக்காக நோபல் பரிசு பெற்ற மரியா கோப்பெர்ட்-மேயர், 1964-ல் வேதியியலுக்காக நோபல் பரிசு பெற்ற டோரோதி ஹாட்கின்,1986-ல் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற ரிட்டா லெவி-மாண்டேசினி போன்ற பெண் விஞ்ஞானிகளையோ, பெண் என்ற காரணத்தினா லேயே நோபல் பரிசு பெற வாய்ப் பில்லாமல் போய்விட்ட ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் (1920-1958), லைஸே மேட்னர் (1878-1968), சியன்-ஷியுங் வு (1912- 1997), ஜோசலின் பெல் பர்னெல் (1943- ) போன்ற பெண் விஞ்ஞானிகளையோ எத்தனை பேருக்குத் தெரியும்?

பல கலாச்சார, சமூகத் தடைகளின் காரணமாக நாட்டில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. கலை, சமூக விஞ்ஞானம் போன்ற மென்மையான துறைகளுக்குத்தான் பெண்கள் ஏற்றவர்கள் என்ற கருத்து இன்னமும் பரவலாக இருக் கிறது. அடிப்படையில் பெண்கள் வீட்டுப் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். இது ஆண்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, பல பெண்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்டுள்ள எல்லையும் அதுதான்.

பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பற்றி சமூகவியலாளர்கள் பல ஆண்டுகளாகவே கவலை தெரிவித்து வருகின்றனர். மற்ற எல்லாத் துறைகளையும் போலவே அறிவியல் துறையிலும் சமூகத்தின் பார்வைகள், சமூக நிர்ப்பந்தங்கள், பாலினப் பாகுபாடுகள் போன்ற காரணங்களால் பெண்கள் பிரச்சனை களைச் சந்திக்கின்றனர். மனித வளத்தின் கணிசமான பகுதி சரியான முறையில் பயன்படாமலே வீணாவதை நாம் உணர வேண்டும். சமூகம் பெண்களைப் பார்க்கும் பார்வைகளில் அடிப்படையான மாற்றங்கள் வரவேண்டும். பெண்கள் அறிவியல் துறையில் நியமனம் பெறவும் சாதனைகள் படைக்கவும் உள்ள தடைகளை அகற்ற வேண்டியது மிகமிக அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை.

Sunday, February 12, 2012

முட்களாக மாற்றப்படும் பூக்கள்



தமிழ்சமூகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. ஆனால் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறை யிலேயே ஆசிரியை ஒருவரை ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது ஒரு தனிமனித விரோத குரோதம் சார்ந்த குற்றம் அல்ல. இந்தப் படுகொலை இன்றைய சமூக அமைப்பு, கல்விச்சூழல், பாடத்திட்டம், ஆசிரியர்- மாணவர் உறவு, பெற்றோர் - பிள்ளைகள் உறவு என பல்வேறு தளங்களில் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகிறது. 

கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி கனிவானவர். அதேநேரத்தில் கண்டிப்பானவர் என்றும் அனைத்து மாணவர்களிடமும் அன்போடு பழகக்கூடியவர் என்றும் சக ஆசிரியைகள் கூறியுள்ளனர். கொலை செய்த மாணவன் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண் டிருந்தவன்தான்.

குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியது இன்றைய பாடத்திட்டமும்தான். ஒரே மாதிரியான கல்விமுறை, பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக இந்திய மாணவர் சங்கம் நீண்ட நெடுங்காலமாகப் போராடி வருகிறது. சமூக பொறுப்புணர்வுள்ள ஆசிரியர் சங்கங்களும் இதே கோரிக்கையை முன்வைக்கின்றன. இதன் ஒரு பகுதிதான் சமச்சீர்கல்வி. 

ஆனால், நவீன தாராளமயமாக்கல் சூழலில் கல்வி வணிகமயமாக்கப்பட்டுவிட்டது. எந்த அளவுக்கு கனமான புத்தகங்களை மாணவர்கள் சுமந்து செல்கிறார்களோ அதுவே அறிவின் அடையாளம் என்று சித்தரிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் மாணவர்களை கசக்கிப்பிழி கின்றன. மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம் மட்டும் அளவுகோலாக முன்வைக்கப்படுகிறது. இதே சித்ரவதைக்கு ஆசிரிய சமூகமும் உள் ளாக்கப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட மன அழுத்தம்தான் ஒரு கள்ளமறியா பிஞ்சை கொலைகாரனாக மாற்றியுள்ளது. இந்தி மொழிப்பாடம் தமக்கு கொஞ்சம் கூட புரியவில்லை என்றும், இது குறித்து ஆசி ரியை தொடர்ந்து கண்டித்ததால் கொலை செய் யும் முடிவுக்கு வந்ததாகவும் அந்த மாணவன் கூறியுள்ளான். ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழிவழிக் கல்விக்குப் பதிலாக பல மொழிகளை கற்பிப்பதாக தனியார் பள்ளிகள் விரிக்கும் வர்த்தக வலையில் விழுந்ததால் ஏற் பட்ட விபரீத விளைவுகளில் இதுவும் ஒன்று.

மறுபுறத்தில், இளைய தலைமுறையை நஞ் சாக மாற்றுவதில் திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் முக்கியப் பங்கு வகிக் கின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சமூகப் பொறுப்பற்ற பொறுக்கிகளாகவே ஊடகங் கள் சித்தரிக்கின்றன. அண்மையில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய கொலைவெறி பாடல் இதற்கு ஒரு உதாரணம்.

மறுபுறத்தில் ஆசிரியர் - மாணவர் உறவில் பாடத்திட்டத்தின் சுமை இயல்பான உறவை கெடுத்து வைத்திருக்கிறது. பெற்றோர் - பிள்ளைகள் உறவும் சீரானதாக இல்லை. மதிப்பெண் மட்டுமே ஒரே தகுதியாகக் கருதும் அள வுக்கு பெற்றோர்களை மாற்றியுள்ளது இன்றைய சமூகக் கல்விமுறை. 

சென்னைப் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் இன்றைய சமூகத்திற்கு ஒரு பாடம். இந்தக் கோணத்தில் இதை உணர்ந்து, தீர்வு காண்பதே எதிர்காலத்தில் இளம் கொலையாளி உருவாவதைத் தடுக்கும்.

Friday, January 20, 2012

சூரிய ஆற்றல் தரப்போகும் 20,000 மெகாவாட் மின்சாரம்



சூரிய ஆற்றல் சுற்றுப்புறத்திற்கு எந்தக் கேட்டினையும் விளைவிக்காத சுத்தமான ஆற்றல்.

வடமேற்கு இந்தியாவில் 63 ஏக்கர் நிலத்தில் 36,000 சூரியத் தகடுகளை  வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மிகப்பெரும் திட்டத்தை அசூர் பவர் என்ற நிறுவனம் நிறைவேற்றி வருகிறது. வறண்ட பகுதியில் தகடுகள் நிறுவப்பட்டுள்ளதால் ஐந்து நாட்களுக்கொரு முறை அவற்றின் மீது படியும் தூசுகளைத் துடைத்து சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. கடுமையான மின்பற்றாக்குறை நிலவும் இந்தியாவில் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதை நவீனப் படுத்தி, நிலக்கரியைப் பயன் படுத்தித் தயாரிக்கப்படும் மின் சாரத்தின் அளவைப் படிப்படியாகக் குறைப்பதுதான் திட்டத்தின் நோக்கம்.

2020-க்குள் 2000 மெகாவாட்

இதுவரை 140 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை மட்டுமே இந்தியா பயன்படுத்தி வருகிறது. இதைக் கொண்டு 50,000 மக்கள் தொகை உள்ள ஒரு நகரத்தின் மின்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தயாரிக்கப்படும் சூரிய ஆற்றல் மின்சாரத்தின் அளவு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. 2020-க்குள் இந்த அளவை 20,000 மெகா வாட் ஆக உயர்த்த வேண்டும் என்ற இலக்கினை அப்போது இந்திய அரசு நிர்ணயித்தது. பல ஆய்வாளர்கள் இந்த இலக் கினை எட்டுவது சாத்தியமல்ல என்று கருதினர். ஆனால் இன்று அவர்கள் தங்கள் கருத்தினை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை தோன்றியிருக்கிறது. 2020க்கு சில ஆண்டுகள் முன்ன தாகவே 20,000 மெகாவாட் இலக்கை எட்டிவிட முடியும் என தற்போது ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக அள வில் சூரியத் தகடுகளின் விலை குறைந்ததால்தான் இது சாத்திய மாகியிருக்கிறது. சன்டெக் பவர், யிங்க்லி கிரீன் எனர்ஜி போன்ற சீன நிறுவனங்கள் சூரியத் தகடு களின் உற்பத்தியை அதிகரித்த தால், உலக விலை 30-லிருந்து 40 சதம் வரை குறைந்தது. சீனா, அமெரிக்கா, தைவான், ஐரோப் பிய நாடுகளிலிருந்து இந்திய நிறு வனங்கள் தகடுகளை வர வழைத் துக் கொள்கின்றன. அரசு மானி யம் கொடுத்து ஊக்குவிப்ப தாலும் சூரியத் தகடுகளின் விலை குறைந்திருப்பதாலும் அசூர் போன்ற பல நிறுவனங்கள் இன்று வடமேற்கு இந்தியச் சமவெளிகளில் களம் இறங்கி யுள்ளன. 2000 பேர் வசிக்கும் சிறு கிராமங்களில் கூட சூரிய சக்தித் தகடுகள் மின்னும் காட் சியைப் பார்க்க முடிகிறது.

சூரியசக்தி மின்தயாரிப்பில் ஐரோப்பிய நாடுகளோடு ஒப் பிடும்போது இந்தியா பின்தங் கியே இருக்கிறது. உதாரணமாக, 2010 இறுதியில் ஜெர்மனி 17,000 மெகாவாட் சூரியசக்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் திற னுடன் இருந்தது. ஒரு வருடத் தில் 300 நாட்களில் சூரிய ஒளி தாராளமாகக் கிடைக்கும் நம் நாட்டில் அதைவிட அதிகமாக சூரியசக்தி மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

தயாரிப்புச் செலவு குறையும்

“இந்தியாவில் உள்ள மின் ஆலைகளில் பெரும்பாலானவை நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்களே. அங்கு ஒரு யூனிட்டிற்கு 4 ரூபாய் செலவில் மின்சாரம் தயாரிக் கப்படுகிறது. ஏலத்தில் அது 8-லிருந்து 10 ரூபாய் வரை எடுக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் ஒரு யூனிட் மின்சாரத்திற்குக் கொடுக்கும் விலையும் அதுதான். பெட்ரோலியப் பொருட்களைப் பயன்படுத்தும் ஜெனரேட்டர் கள் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 10 ரூபாய் செலவா கிறது. தற்போது சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் செலவு இதோடு ஒப்பிடும் நிலையில் உள்ளது. சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான தேவை அதிகரித்து வருவதால், ஒவ்வொரு மாதமும் சூரியசக்தி மின்சாரத்தின் உற்பத்திச் செலவு குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் மற்ற வகைகளில் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு ஆகும் செலவிலேயே சூரியசக்தி மின்சாரத்தையும் தயாரிக்க முடியும். தொடக் கத்தில் நிறுவனங்களிடையே கடுமையான போட்டி இருக் கிறது. ஆனால் நாளாவட்டத் தில் கொள்ளை லாபமே நோக்க மாகக் கொண்ட நிறுவனங்கள் காணாமல் போய்விடும். இத் துறையில் உண்மையான ஈடு பாடு உள்ள நிறுவனங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும்” என்கிறார் அசூர் பவர் தலைமை மேலாளர் இன்டர்ப்ரீட் வாத்வா.

பேராசிரியர் கே. ராஜு
(உதவிய கட்டுரை : ‘தி இந்து’வில் விகாஸ் பஜாஜ் எழுதியது)

Wednesday, January 18, 2012

தென்னிந்திய அளவிலான அறிவியல் செய்முறை பணியரங்கு


புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் புதுதில்லி விஞ்ஞான் பிரச்சார் சார்பில் புதுச்சேரி வெற்றி வெங்கடேஷ்வரா ஆசிரியர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இப் பணியரங்கை, விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் நிர்வாகி டி.வி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். புதுவை அறிவியல் இயக்கத் தலைவர் எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.சேகர், துணைத் தலைவர்கள் ஏ.ஹேமாவதி, ஆர்.தட்சிணாமூர்த்தி, த.பரசுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒடிஷா பாரீஸ் செüத்-11 பல்கலைக்கழக பேராசிரியர் பியர் பான்த்ஸ் பயிற்சி அளித்தார்.

இதில், புதுச்சேரி, தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 30 அறிவியல் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இப் பணியரங்கு 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

A series of Innovative Science Experiments Workshops with Prof. Pierre Fontes from France started yesterday at Pondicherry (17-19 Jan) followed by one in Bhopal (21-23 Jan) and then in Mandi (3-6 February) in collaboration with Vigyan Prasar, Department of Science & Technology, Govt. of India.
 
The Pondicherry workshop is being attended by about 25 participants from Andhrapradesh, Karnataka, Tamilnadu, Kerala and Pondicherry.  Prof.Pierre Fontes is a distinguished Nuclear Physicist and Science Communicator from the University of Paris, South 11, Orsay, France (retired) and is currently in India to conduct three workshops to train science teachers and activists on innovative, low cost experiments in science to make science teaching interesting and fun.
 
The programme was inaugurated yesterday at the Vettri Venkateswara Institute (Behind Hotel Mass) with Dr.T.Parasuraman, Vice President of PSF presiding over the function, Mr.T.P.Raghunath, Programme Coordinator welcoming the participants and explaining the background of the programme. The Inaugural talk was delivered by Dr.T.V.Venkateswaran of Vigyan Prasar, New Delhi. This was followed by an introductory speach by Dr.Fontes who started his experiments session with the participants.
 
The programme will continue for two more days. This is being followed by a Workshop at Bhopal Science Centre, Bhopal on 21 to 23 January 2012 and another one at Mandi (Himachal Pradesh). In total about 80 to 100 teachers will be trained on these experiments which require very low cost, kitchen ware materials only but with wonderful results and no less interesting than a fully equipped science lab. And thus, with schools which does not a full fledged science lab can adopt these experiments into their curriculum easily and children too can try it out at their homes.
 
Pondicherry Science Forum in collaboration with the Vigyan Prasar is also planning to bring out a manual for science experiments with which the contents of the training can be disseminated to all the schools in the country as well.



Wednesday, January 11, 2012

குழந்தைகளின் கல்விக்கு வெறும் 1 விழுக்காடுதானா?

குழந்தைகளின் அடிப்படைக் கல்வி, உலக அவையத்து இந்தியா முந்தியிருக்க மிக மிக முக்கியத் தேவை. ஆனால், இந்தியாவில் மிகவும் பிந்தியிருப்பது குழந்தைகளின் கல்விக்கு அளிக் கப்படும் முக்கியத்துவம்தான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக ஒதுக்கப்படும் அரசு செலவினம் ஒருபோதும் அதிகபட்சமாக 4.3 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்ததில்லை. இது உயர்கல்வி உள்ளிட்ட அனைத்துத்துறைகளுக்குமான மொத்தத் தொகை. அடிப்படையான தொடக்கக்கல்விக் கான நிதி மிகமிகக் குறைவு.

இந்தப் பின்னணியில் குழந்தைகளின் கல் விக்காக என மத்திய-மாநில அரசுகள் ஒதுக்கு கிற நிதியிலும் கூட, நேரடியாக அவர்களுடைய கல்விக்கு என ஒதுக்கப்படுவது வெறும் 6 விழுக் காடுதான் என்று அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பாடப்புத்தகங் கள், சீருடைகள், பள்ளியிலிருந்து பாதியில் விலகுகிற குழந்தைகளின் பிரச்சனைகள் இவற் றுக்காக ஒதுக்கப்படுகிற நிதி ஏற்பாடுகள் அந்த 6 விழுக்காட்டிற்குள் அடங்குகிறது. 78 விழுக் காடு வரையில் ஆசிரியர்களின் ஊதியத்திற்கும், 14 விழுக்காடு நிதி பள்ளிகளின் உள்கட்டுமான செலவுகளுக்காகவும் செல்கின்றன. கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்படும் நிதியோ வெறும் 1 விழுக்காடுதான்!

2009 - 2010 கல்வியாண்டுக் கட்டத்தில் பல் வேறு மாநிலங்களின் பட்ஜெட்டுகளில் தொடக் கக் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய அந்த அறிக்கை, இந்த ஒதுக்கீடுகளின் உண்மையான இலக்காகிய குழந்தைகள் எந்த அளவுக்குப் பயனடைந்திருக்கிறார்கள் என ஆராய்கிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாநிலங் களில், தொடக்கக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு, பணக்கணக்கின்படி கணிசமாக அதிகரிக்கப் பட்டிருக்கிறது. 2007-08ம் ஆண்டில் ரூ.68,710 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2009-10ல் அது ரூ.97,255 கோடியாக உயர்த்தப்பட்டது. மாநிலத் துக்கு மாநிலம் மாறுபட்ட இதில் சில வேறுபாடு கள் இருக்கின்றன என்றாலும், ஒட்டுமொத்த மாகப் பார்க்கிறபோது குழந்தைகளின் நேரடிக் கல்விக்கு மிகச் சொற்பமான தொகைதான் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆசிரியர்களின் ஊதியம் அவர்களது நெடும் போராட்டத்தின் பலனாகக் கிடைத்திருப்பது. அதே போல் கூரையில்லாப் பள்ளிக்கூடங்கள் இன்னும் தொடர்கிற நிலையில் உள்கட்டுமானங் களுக்காக, இன்னும் பல மடங்கு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எதற்காக? குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைத்தாக வேண்டும் என்பதற் காகத்தானே? அதற்கான நேரடி நிதியை 1 விழுக்காடு அளவுக்குக் குறைத்துவிட்டு, மற்ற செலவினங்களை மட்டும் அதிகரிப்பதால் என்ன பயன்? ஆசிரியர்களுக்கான நிதி ஒதுக் கீடு குறைவாக உள்ள மாநிலங்களும் இருக்கின் றன. அதற்குக் காரணம் நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக, கணிசமான எண்ணிக்கையில் ஒப் பந்த ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் நியமிக் கப்பட்டிருப்பதுதான்!

கட்டாய இலவசக் கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு குழந்தை களுக்கு நேரடியாக பலனளிக்கும் நிதி குறை வாக இருப்பது ஒருவகையில் அந்தச் சட்டத் தையே மீறுவதாகிவிடும். வசதியுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க, அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கான தரமான கல்வி உரிமையை மறுப்பதாகிவிடும். கல்வியில் ஏற்றத்தாழ்வை ஒழிக்க, போதுமான நிதி ஒதுக்கீட்டிற்கான போராட்டம் வலுப்பெற வேண்டியதன் அவசியத் தைத்தான் இந்த ஆய்வு புலப்படுத்துகிறது.

Saturday, December 24, 2011

சர்வதேச அளவில் நடக்கும் அறிவியல் உருவாக்குவோம் திட்டத்திற்கு ஆய்வு அறிக்கைகள் வரவேற்பு


புதுவை அறிவியல் இயக்கம்பிரான்ஸ் நாட்டு பிரான்ஸ் பல்கலைக்கழகம் தெற்கு 11 உடன்  (University of Paris, South 11, France) இணைந்து சர்வதேச அளவில் அறிவியல் உருவாக்குவோம் (Make ScienceCompetition) திட்டத்தை / போட்டியை இந்தியாவில் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுச்சேரிஅரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் பங்குபெறும் வகையில் புதுவை அறிவியல் இயக்கம், புதுச்சேரிஅரசு பள்ளிக் கல்வித்துறையின் மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திவருகிறது.

2012 ஆம் ஆண்டிற்கான அறிவியல் உருவாக்குவோம் போட்டிக்கான ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. விதிமுறைகள்:

1.     இப்போட்டியில் புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.

2.     இத்திட்டம் ஜனவரி 2012 முதல் ஏப்ரல் 2012 வரை நடைபெறும்.

3.      7வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே பங்குபெறலாம்.

4.     ஆய்வுத்திட்டம் இயற்பியல், வேதியல், கணிதம், அடிப்படை உயிரியியல் ஆகிய பிhpவுகளில் இருக்கலாம்.

5.     ஆங்கிலத்தில் மட்டுமே திட்ட குறிப்புகளை ஆனுப்ப வேண்டும்.
  
6.      கடைசித்தேதி வரும் 2011 டிசம்பர் 28க்குள்  அனுப்ப வேண்டும்.

7.      மேலும் விவரங்களுக்கும் திட்டத்திற்காக விண்னப்படிவத்திற்கும் கிழ்ண்ட மின்அஞ்சல் முகவயிலும் தொலைப் பேசியிலும் தொடர்பு கொள்ளலாம்: மின்அஞ்சல் : cerdpsf@gmail.com  Ph:  0413 -2290733

ஆய்வு அறிக்கைகள் மின் அஞ்சல் மூலம் பெறப்பட்டு அவை பிரான்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கபட்டும் அவற்றில் சிறந்த 12 ஆய்வுத்திட்டங்களை மட்டும் தேர்வு செய்து அனுப்புவார்கள். அந்த திட்டங்கள் துவக்கத்திற்கான உதவி ஊக்கதொகை வழங்கபடும். பிறகு அந்த திட்டம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அவை மீண்டும் பிரான்ஸ் பல்கலைக்கழத்திற்கு அனுப்பட்டு வீடியோ கான்பிரன்சிங் மூலம் சிறந்த 4 ஆய்வு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிக்கு  சான்றிதழும் முதல் பரிசுக்கு 300  Euro முன்று இரண்டாம் பரிசுக்கு தலா 100 Euro அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை அனைத்து அரசுப் பள்ளிகளுகம் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, December 23, 2011

விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லலும் புதிய விண்கலம் ஸ்பேஸ்எக்ஸ்


விண்வெளி அமைப்பான நாஸா தனது ஷட்டில் ரக விண்கலங்கள் உபயோகிப்பதை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், ஸ்பேஸ்எக்ஸ்ரக விண்கலங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரஉள்ளது.

ஏறக்குறைய 30 ஆண்டுகள் 135 முறை ஏவப்பட்ட ஸ்பெஸ் ஷட்டில்ரக விண்கலங்கள் ஏராளமான விண்வெளி வீரர்களை விண்ணுக்கு கொண்டு சென்றது. தற்போது இதற்கு பதில் மிக நவீனரக ஷட்டில்களை நாஸா உருவாக்கி வருகிறது. அதுவரை வீரர்களை விண்ணுக்கு அழைத்துச் செல்லவும் பூமிக்கு திரும்பச் செலுத்தவும் ரஷ்யாவின் சோயூஸ் கேப்சூல்களையே அமெரிக்கா சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் அமெரிக்காவில் பல விண்துறை நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள டிராகன் ரக கேப்சூலுக்கு நாஸா அனுமதி தந்துள்ளது. இந்த கேப்சூல் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இதில் பயணிக்கும் விஞ்ஞானிகள் வானில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு விட்டு, இந்த கேப்சூலிலேயே பூமிக்குத் திரும்புவர்.ஷட்டில் ரக விண்கலம் விமானத்தைப் போல பூமியில் தரையிறங்கும்.ஆனால் இந்த கேப்சூல் பாராசூட் மூலம் பூமியில் தரையிறங்கும்.
ரஷ்யா தான் ஆரம்பம் முதலே கேப்சூல்களை பயன்படுத்தி வந்தது. தற்போது அமெரிக்கா கேப்சூலை பயன்படுத்தவுள்ளது. அமெரிக்கா 2012 பிப்ரவரி மாதம் 7ம் தேதி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் என்றும் இதில் வீரர்கள் செல்ல மாட்டார்கள்என்பதும், சரக்குகள் ஏற்றிச்செல்லும் இந்த கேப்சூல், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அதை கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள விஞ்ஞானிகள் சரக்குகளை இறக்கிய பின், இந்த கேப்சூல் பூமிக்கு திரும்பும். பசிபிக் கடலில் பாராசூட் முலம் இந்தக் கலம் தரையிறங்கும்இந்த விண்கலத்தை உருவாக்கியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் பே பால் நிறுவனரான எலோன் முஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 22, 2011

விவசாய நிலப்பரப்பு வீழ்ச்சி எதிர்கால இந்தியாவின் வீழ்ச்சி
























5 ஆண்டுகளில் 8 லட்சம் ஹெக்டேர் நிலம் குறைந் துள்ளது. வேளாண் சாராத இதரப் பணிகளுக்கு அவை பயன்படுத்தப்பட்டதால் விளைநிலம் குறைந்துள் ளது என நாடாளுமன்றத் தில் செவ்வாய்க்கிழமை யன்று தெரிவிக்கப்பட்டது.

2003-04ம் ஆண்டு 1 லட்சத்து 83 ஆயிரத்து 186 ஹெக்டேர் நிலம் குறைந்துள்ளது. 

2008-09 ம் ஆண்டில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 385ஹெக்டேர் நிலம் குறைந்துள்ளது 

என மக்களவையில் வேளாண் துறை இணையமைச்சர் ஹரிஷ் ரவாத் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

இந்த விளைநிலங்கள்- கட்டிடங்கள், சாலைகள், ரயில்வே பணிகளுக்கு பயன் படுத்தப்பட்டுள்ளன. 

இருப்பினும் உணவு தானிய உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது என்றும், விளைநிலம் சிறிய அளவு குறைந்துள்ளதால்,எந்த எதிர்மறை விளைவையும் வேளாண் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 


விவசாய நிலங்களின் மீது நடக்கும் அநியாய ஆக்கிரமீப்பை எப்படியாது தொடர வேண்டும் என்ற லாபவெறி அப்பட்டமாக தெரிகிறது. 

எதிர்கால சமூகத்தின் மீக துயரமான வாழ்வுக்கு நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

Tuesday, November 29, 2011

கல்வி குற்றத்தில் சிறந்த தமிழ்நாடு!


சாலை விபத்து, தற்கொலைகள், கள்ள நோட்டுப் புழக்கம், மாணவர்கள் தற்கொலை, போலி பாஸ்போர்ட், முதியோர்கள் பாதுகாப்பு எனப் பல குற்றங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.

அடுத்த வரியைப் படித்து அதிர்ச்சி அடைய வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் பல குற்றங்களில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. சாலை விபத்து, தற்கொலைகள், கள்ள நோட்டுப் புழக்கம், மாணவர்கள் தற்கொலை, போலி பாஸ்போர்ட், முதியோர்கள் பாதுகாப்பு என்று பல வகையான குற்றங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறோம் நாம். தேசியக் குற்றப் பதிவுத்துறை (‡National Crime Records Bureau - NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் இந்தத் தகவல்களைத்  தெரிவிக்கின்றன.

சாலை, ரயில் விபத்துகள்

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது தமிழகம். 15 ஆயிரத்து 409 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்த இடம் ஆந்திராவிற்கு (15,337 பேர்), அடுத்து உத்தரப்பிரதேசத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும்.

நாடு முழுக்க கடந்த 2010ம் ஆண்டு 1.61 லட்சம் விபத்துகள் பதிவாகியுள்ளன. அதாவது, நாட்டில் ஒவ்வொரு நாளும் சாலையில், ரயில் பாதையில் 18 பேர் இறக்கிறார்கள். சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் (1.61 லட்சம் விபத்துகளில் 1.34 லட்சம் விபத்துகள் சாலை விபத்துகள்). இதுவரை இந்தியாவிலேயே இல்லாத அளவிற்குக் கடந்த ஆண்டு விபத்துகள் நடந்துள்ளன.

இதற்குப் பெருகி வரும் வாகனங்கள் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 2008ம் ஆண்டில் இருந்ததைவிட 28 சதவீதம் வாகனப் பதிவு அதிகரித்துள்ளது. 20 சதவீதச் சாலை விபத்துகள் இரு சக்கர வாகனங்களாலும் 28 ஆயிரத்து 800 விபத்துகள் கனரக வாகனங்கள், டிரக்குகளாலும் நடந்துள்ளன.

தற்கொலைகள்
வேலையின்மை, வறுமை, கடன் தொல்லை, வரதட்சணைக்கொடுமை போன்றவற்றால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 21 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். 2010ம் ஆண்டு இந்தியாவில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அந்த ஆண்டு தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 16,561 பேர். நாட்டில் நடந்த தற்கொலைகளில் 57.2 சதவீதம் தமிழகம், மேற்கு வங்காளம் (16,037), மகாராஷ்டிரா (15,916), ஆந்திரா (15,901), கர்நாடகா (12,651) ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்துள்ளன. இதில் திகைக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், தற்கொலை செய்துகொள்பவர்களில் 65.8 சதவீதம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்!

முதியோர் பாதுகாப்பு


தமிழகத்தில் முதியோர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்களா? இல்லை என்றுதான் உதட்டைப் பிதுக்கத் தோன்றுகிறது. ஆனால், இதில் ஒரு சின்ன ஆறுதல். ஆந்திராவையும் உத்தரப்பிரதேசத்தையும் அடுத்து, முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மூன்றாவது மாநிலமாகத்தான் இருக்கிறது தமிழகம்.

ஆனால், அதிர வைக்கும் விஷயம் என்னவென்றால் வயதான பெண்களின் பாதுகாப்பு நிலை கவலைக்குரிய வகையில் மோசமடைந்திருக்கிறது. 50 வயதிற்கு மேற்பட்ட 227 பெண்கள் 2010ம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டு 93 பெண்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 2010ம் ஆண்டு 50 வயதைத் தாண்டிய 100 ஆண்களும் 2009ம் ஆண்டு 246 ஆண்களும் கொலையுண்டிருந்தனர்.

‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் தொலைபேசி எண்ணுக்கு (1253) தினமும் 10க்கும் அதிகமான அழைப்புகள் உதவி கேட்டு வருவதாகவும் அதில் இரண்டு முதியவர்கள் தங்களுக்கு பாதுகாப்புக் கேட்பதாகவும் கூறுகிறார்கள். பெரும்பாலும் வயதானவர்கள் தனியாகவே வாழ்கிறார்கள். பணம், நகை என்று கொள்ளையடிப்பவர்களின் இலக்கு இவர்கள் மேலேயே இருக்கிறது. காவல்துறையின் தகவல்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 54 முதியவர்கள் மாநிலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும 10 படுகொலைகள் நடந்துள்ளன.

போலி பாஸ்போர்ட்

போலி பாஸ்போர்ட், விசாவுடன் பறப்பதற்கான வசதியான இடமாகவே தமிழக விமான நிலையங்கள் இருப்பதாக தேசியக் குற்றப் பதிவுத்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் பதிவான இதுபோன்ற 937 வழக்குகளில் 398 பேர் தமிழகத்தில் பிடிபட்டுள்ளனர். தொடர்ந்து கேரளாவில் 209 பேரும் மேற்கு வங்களத்தில் 102, மகாராஷ்டிரா 69, ஆந்திரா 68 வழக்குகள் பதிவாகி உள்ளன. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஒரு வழக்குகூட இல்லை அல்லது 50க்கும் குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன. இந்தியாவிலேயே பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரம் கோவை. தொடர்ந்து திருச்சி, திருவனந்தபுரம் உள்ளது. இதனாலேயேசென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தமிழகத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள் என்று சுமார் 40 இடங்களுக்கு நேரடி விமான சேவை இருப்பது, அதிகப் பயணிகள் போன்ற காரணங்கள் போலி பாஸ்போர்ட்டுக்கு கூறப்படுகிறது. சென்னையில்தான் அதிக அளவில் ஏஜெண்ட்கள் இருக்கிறார்கள். மொத்தம் உள்ள 243 பேரில் 197 பதிவு பெற்ற ஏஜெண்ட்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கில் போலி ஏஜெண்ட்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஐ.நா. அமைப்பின் போதைக் குற்றத்தடுப்புப் பிரிவு வெளியிட்ட ஆவில், போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக இலங்கைத் தமிழர்கள் 23 சதவீதம் பேர் சென்னை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது.

மாணவர்கள் தற்கொலை

கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது 26 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னை, மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில்தான் பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதிலும் சென்னைதான் முன்னிலை. சென்னையில் 170 மாணவர்கள், தில்லியில் 133, மும்பையில் 115 மாணவர்களும் 2010ல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

2009ல் வெறும் 0.9 சதவீதமாக இருந்த முதுநிலை பட்டதாரி மாணவர்களின் தற்கொலை சதவீதம் அடுத்த ஆண்டு 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் ரேங்க் வாங்க வேண்டும், போட்டி மனப்பான்மை, அளவுக்கு அதிகமான கல்விச் சுமை இவையே இதற்குக் காரணம் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

கள்ளநோட்டு

2010ல் சென்னையில் மட்டும் 72 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டு வெறும் 42 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. கள்ள நோட்டுகள் அதிகமாகப் புழங்கும் இடம் மும்பை. கிட்டத்தட்ட இந்த விஷயத்தில் மும்பையை (76) நெருங்கிவிட்டோம் நாம். சென்னையை அடுத்து வேலூரிலும் மதுரையிலும் தலா 31 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்த நகரம் கோயம்புத்தூர் (30). பொதுவாகத் தமிழகத்தில் பெருநகரங்களில்தான் கள்ள நோட்டு அதிகம் புழங்குவதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

132 சேக் போஸ்ட்களில் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து, கள்ள நோட்டு கடத்துபவர்களைப் பிடித்தாலும் இதன் பின்னணியிலிருந்து செயல்படுபவர்கள் யார் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருப்பதாகப் போலீஸ் கூறுகிறது. மும்பை, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் இருந்துதான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாவட்டங்களில் இருக்கும் வேலையில்லாத இளைஞர்களை கள்ள நோட்டைப் புழங்க விடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் காவல்துறையின் அனுமானம்.

அடையாளம் தெரியாத உடல்கள்

மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஏழு அடையாளம் தெரியாத உடல்கள் வருவதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 795 உடல்கள் வந்திருக்கின்றன. தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் இது அதிகம். 2006லிருந்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக இந்த எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது.

போலீஸ் ரெக்கார்டுப்படி 2,739 அடையாளம் தெரியாத உடல்களில் 657 உடல்கள் சென்னை, செங்கல்பட்டு, சூளூர்பேட்டை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டைவிட 248 உடல்கள் அதிகம் கிடைத்துள்ளன. அடையாளம் காண முடியாத உடல்கள் 48 மணி நேரத்தில் மாநகராட்சி உதவியுடன் தகனம் செயப்படுகின்றன அல்லது மருத்துவக் கல்லூரிக்கு தரப்படுகின்றன.
நன்றி கீதா புதியதலைமுறை