Saturday, October 15, 2011

அறிவியல் விழிப்புணர்வு திறனறி போட்டி



மாணவர்களிடையே அறிவியல் ஆக்கத் திறனை வளர்க்கும் வகையில், புதுச்சேரி அறிவியல் இயக்கம் தமிழ்நாடு அறிவியல்இயக்கத்துடன் இணைந்து, அறிவியல் விழிப்புணர்வு திறனறி போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.


போட்டியில், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்.

6 முதல் 8ம் வகுப்பு வரை, 9 முதல் 12ம் வகுப்பு வரை என, இரு பிரிவுகளில் போட்டி நடக்கும். 

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் 30ம் தேதிக்குள் ரூ.100 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவுசெய்யும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு காலத்திற்கு ரூ.84 மதிப்புள்ள துளிர் அறிவியல் மாத இதழ்கள் மாதந்தோறும் அனுப்பிவைக்கப்படும்.

 ஜந்தர் மந்தர் (ஆங்கிலம்) இதழ் வேண்டுவோர் பதிவுக்கட்டணமாக ரூ.150/-(ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்)செலுத்தவேண்டும். 

போட்டிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் 26ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் நடக்கும்.

எழுத்துத் தேர்வில் 120 நிமிடத்தில் 100 வினாக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் வினாத்தாள் அமையும்.

வினாத் தாள் தமிழ், ஆங்கிலத்தில் அமையும்.

தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். 

புதுச்சேரி அளவில் முதலிடம் பெறும் 5 மாணவர்களுக்கு (இளநிலை) அடுத்த ஆண்டு மாகியில் நடக்கவுள்ள மாநில குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். 

புதுச்சேரி அளவில் முதல் 50 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு புதுச்சேரி அறிவியல் இயக்க மாத இதழான அறிவியல் முரசு ஒரு ஆண்டுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும். 

இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர்கள்,பள்ளி முதல்வர்கள்/தலைமையாசிரியர்கள் பூர்த்தி செய்த படிவத்துடன் நுழைவுக்கட்டணத்தை வங்கி வரைவாக அல்லது பணவிடையாக மாநில ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.


வங்கி வரைவு துளிர்,சென்னை என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும். (DD in favour of Thulir, Payable at Chennai) 


இப்போட்டிக்கான முதல் பதிவுப்பட்டியல் 28.10.2011க்கு முன்னரும் உரிய வங்கிவரைவு மற்றும் பங்கேற்பாளர் பட்டியல்-முழு முகவரியுடன் மாநில ஒருங்கிணைப்பாளரின் தஞ்சாவூர் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். ஐம்பது பதிவுகளுக்கு மேல் உள்ள பள்ளிகள் தேர்வுமையமாகச் செயல்படலாம்.


 பள்ளிகளுக்கான பரிசுகள்

100 மாணவர்களுக்கு மேல் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று அறிவியல்  மென்தட்டுகள்(சி.டி.) 


200 பதிவுகளுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு.. முதல் பரிசு -ரூ.5000 மதிப்புள்ள அறிவியல் நூலகம். 


இரண்டாம் பரிசு -ரூ.3000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்
மூன்றாம் பரிசு -ரூ.2,000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்


பள்ளிகளுக்கான பரிசுகள் உயர் அளவு பதிவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.


இதற்கு துளிர் மற்றும் ஜந்தர்மந்தர் பதிவுகள் சேர்த்துக் கணக்கில் கொள்ளப்படும். இப்போட்டிகள் குறித்த அதிக விபரங்கள் தேவைப்படுவோர் மாநில ஒருங்கிணைப்பாளரையோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளரையோ தொடர்பு கொள்ளலாம். 


புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் 


பா. ரவிச்சந்திரன் 
10, இரண்டாவது தெரு
பெருமாள் ராஜாத்தோட்டம்
ரெட்டியார்பாளையம்
புதுச்சேரி -10 
மின் அஞ்சல்: cerdpsf@gmail.com


விபரங்களுக்கு 0413 2290733, 94880 74341, 9442786122 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


மாநில ஒருங்கிணைப்பாளர் 


முனைவர்.அ.வள்ளிநாயகம் 

132சி,முனிசிபல் காலனி 6வது வீதி,      
தஞ்சாவூர்-613007                            
போன்-04362-240784                                  
செல்-94438 65864       

                                       


Friday, October 14, 2011

‘நோயர்’ விருப்பம்


வெகுகாலத்துக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று. ஒரு வயதான அம்மையார் மருத்துவரிடம் மூட்டு வலி என்று சென்றார். மருத்துவர் ஸ்டெதெஸ்கோப்பை எடுத்தார்.

அப்போதுஅந்த நோயாளி அதிச யித்தார். “நானும் எத்தனையோ டாக் டர்களிடம் காட்டிவிட்டேன். யாருமே இந்த குழாயை மூட்டில் வைத்துப் பார்க்கவே இல்லையே ராசா”

உஷாரான அந்த மருத்துவர் ஸ்டெதெஸ்கோப்பை மூட்டில் வைத்துப் பார்த்தார்.

பாட்டிக்கு பரம திருப்தி. அதில் வேடிக்கை என்னவெனில், மூட்டில் வைத்து விட்டு, பழக்கதோஷத்தில் டாக்டர் “மூச்சை நல்லா இழுத்து விடுங்க” என்றதுதான்!

ஒரு துணி எடுக்கச் செல்லும் போது நம் மனதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதுபோல், மருத்துவரிடம் செல்லும்போது நோயுற்றவர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இன்ன வியாதிதான் நமக்கு. அதற்கு இது தான் காரணம். இதுதான் வைத்தி யம் என்று ஒரு எதிர்பார்ப்போடு தான் வருவார்கள். திறமையைவிட இந்த ‘நோயர்’ விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே ஒரு மருத்து வரைப் புகழ்பெற்றவராக்குகிறது.

எல்லா நோய்களுக்கும் ஊசி போட்டால்தான் சரியாகும் என்பது பெரும்பாலான நோயர் விருப்பமாக உள்ளது. அதிலும் சிலர் வலது கை வலி என்று போனேன், இடதுகை யில் ஊசி போட்டுவிட்டார்கள் என்று நுகர்வோர் நீதிமன்றம் வரை போவதுண்டு.

நெல்லை டவுனில் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் இருந்தார். அவரது கிளினிக் திஹார் ஜெயில் போல் நிரம்பி வழியும். காரணம் அவரது தனித்தன்மையே. நாம் எந்தப்பகுதியில் வலி என் கிறாமோ அந்தப்பகுதியிலேயே ஊசி போடுவார். சற்றும் மிகைப்படுத்த லற்ற உண்மை இது. இது தெரியா மல் வரிசையில் காத்திருந்த ஒருவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட் டதும், தலை தெறிக்க வெளியே ஓடி விட்டார். வேறு ஒன்றுமில்லை; அவர் மூல வியாதிக்காகச் சிகிச்சை பெற வந்திருந்தார்.

இப்பொழுதெல்லாம் குழந்தை பெறுவது கூட இயற்கையாக அன்றி நாள் நட்சத்திரம் பார்த்துப் பெரியவர் களின் விருப்பப்படிதான் நடைபெறு கிறது. “ரோகிணி நட்சத்திரம் வேண் டாம். மாமாவுக்கு ஆகாது. அதனால் இன்னும் இரண்டு நாள் கழித்து சிசேரியன் வைத்துக் கொள்ளலாமா டாக்டர்” என்று கேட்பது சாதாரண மாகிவிட்டது. எதிர்காலத்தில் மகப் பேறு மருத்துவமனைகளில் ட்யூட்டி டாக்டர் போல் ட்யூட்டி ஜோதிடர் களும் இருக்கலாம்.
நோயுற்றவரின் எதிர்பார்ப்பும், உடன் இருப்பவரின் விருப்பமும் வேறு வேறாக இருக்கும். மேலை நாட்டில் பத்து வருடங்களாக மூக் கடைப்பால் அவதிப்பட்டிருந்த ஒரு பெண், மூக்கடைப்பு சரியானதும், கணவர் மீது துர்நாற்றம் அடிக்கிறது என்று விவாகரத்து செய்துவிட்டார்.

எதற்காக சிகிச்சைக்கு வருகி றார் என்பதைத்தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். குடிப்பழக்கத் தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என் னிடம் வந்தார். “குடிச்சு குடிச்சுக் கையெல்லாம் ரொம்ப நடுங்குது டாக் டர். எப்படியாவது நீங்கதான் இதை நிறுத்தணும்” என்றார்.

‘கவலைப்படாதீங்க! உங்க குடிப் பழக்கத்தை நிறுத்திடலாம்’ என் றேன். திடுக்கிட்ட அவர், “அதெல் லாம் வேண்டாம் டாக்டர். இந்த கை நடுக்கத்தை மட்டும்நிறுத்துங்க! சரக்கெல்லாம் கொட்டி நிறைய வீணாகுது” என்றார்.

ஒரே வியாதியால் இருவர் பாதிக் கப்படலாம். ஆனால் இருவரும் ஒன் றல்ல. நேயர் விருப்பம்போல் நோயர் விருப்பமும் தனித்தன்மையுடையதே.

டாக்டர் ஜி.ராமானுஜம்
நன்றி: புதிய ஆசிரியன் 

Thursday, September 22, 2011

நவீன கருவிகளுக்கு அடிமையாவது ஆபத்து

சென்ற ஆண்டு கொல்கத்தாவில் 10-வது படிக்கும் ஒரு மாணவி தண்டவா ளத்தைக் கடக்கும்போது ரயில் மோதிய தில் அவளது உடல் கூழாகிவிட்டது. அலைபேசியைக் காதில் வைத்தபடி மூடப் பட்டிருந்த ரயில்வே கேட்டைக் கடந்து சென்ற அச்சிறுமி, 100 மீட்டர் தூரத்தில் வேகமாக ஒரு ரயில் வந்து கொண்டிருந் ததைக் கவனிக்கவில்லை. மற்றவர்கள் போட்ட சத்தமும் அவள் காதில் விழவில் லை. இந்த ஆண்டு ஹெளராவில் 10-வது படித்துக் கொண்டிருந்த நெருங்கிய நண் பர்களான இரு சிறுமிகளும் செல்போ னைக் காதில் வைத்தபடி தண்டவாளத் தைக் கடந்தபோது வேகமாக நெருங்கிக் கொண்டிருந்த ரயிலையோ, அருகிலிருந்த வர்கள் எச்சரிக்கை செய்து போட்ட கூச்ச லையோ கவனிக்கும் நிலையில் இல்லை. இவர்களெல்லாம் தங்கள் அலட்சியத்திற்கு விலையாக தங்கள் உயிரையே தர வேண்டியிருந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 

 சிங்கப்பூரில் ஒரு சிறு பெண் குழந் தையின் பெற்றோர்கள் கணினித் திரை யில் மூழ்கியிருந்தபோது, பசியால் துடித்த அக்குழந்தை இறந்தே போய்விட்டது. தென் கொரியாவில் கணினி விளையாட்டி லேயே நேரத்தைச் செலவிட்டுக் கொண்டி ருந்ததற்காகத் திட்டிய அம்மாவை ஒரு சிறுவன் கொலை செய்துவிட்டுப் பின்னர் தற்கொலையும் செய்து கொண்டான். உல கெங்கிலும் வயது வித்தியாசமின்றி பல ரைப் பிடித்து ஆட்டும் இந்த மோகத்திற்கு ‘தொழில்நுட்ப அடிமைத்தனம் என்ற பெயர் கூட வைக்கப்பட்டுவிட்டது. 

 மின்னணுக் கருவிகள் நுகர்வோர் பற்றிய ரிட்ரீவோ என்ற இணையதளம் நடத்திய ஓர் ஆய்வில் ஃபேஸ்புக் அல்லது டிவிட்டரில் மூழ்குவதைக் கட்டுப்படுத்த இயலாத பல பெற்றோர்கள் தங்களது கட மைகளைப் புறக்கணிப்பதாக ஒத்துக் கொண்டனர். தொழில்நுட்பக் கருவிகளுக்கு அடிமைகளாவது பெரும்பாலும் இளைஞர் கள்தாம். தங்களுடைய சமூக வலைத் தளங்களுக்குள் 15 நிமிடங்களுக்கொரு முறை செல்வதென்பது பலருக்கு பழக்க மாகிவிட்டது. சிறிது நேரம் அந்த வலைத் தளங்கள் செயலிழந்து போனாலும் அவர் களால் பொறுக்க முடிவதில்லை. உண வையும் உறக்கத்தையும் கூட இதற்காக மறப்பவர்கள் இருக்கிறார்கள். ஆன்லைன் உரையாடல்களிலோ செல்போன் விளை யாட்டுகளிலோ ஈடுபட்டிருக்கும்போது, கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய அவ சரத் தேவையைக் கூட தள்ளிப் போடக் கூடிய அளவு சிலர் கிறுக்குப் பிடித்தவர் களாக இருப்பது கவலைக்குரியது. இத்தகைய அளவுகடந்த தீவிரமான ஈடுபாட்டை உடற்கூறு வல்லுநர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவ தோடு ஒப்பிடுகின்றனர். 

தொழில்நுட்ப அடிமைகளை சிறிது நேரம் அவர்களுக் குப் பிரியமான கருவிகளிலிருந்து பிரித்து வைத்தபோது, போதைப் பொருள் கிடைக் காத போதைப் பொருள் அடிமைகள் படும் பாட்டினை ஒத்ததாக அவர்கள் நிலை இருந்ததாக வல்லுநர்கள் அந்த ஆய்வில் கண்டுபிடித்தனர். மேரிலாண்ட் பல் கலைக்கழகத்தில் ஊடகங்கள் பற்றிய சர்வ தேச மையம் 10 நாடுகளைச் சேர்ந்த 1000 பல்கலைக்கழக மாணவர்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், செல்போன் கள், எம்.பி.3 பிளேயர்கள் போன்ற சாத னங்களிலிருந்து 24 மணி நேரத்திற்கு விலகியிருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரால் அது இயலவில்லை. துக்கம். தனிமை, கவலை போன்ற மன அழுத்தங்களுக்கும் இதயப் படபடப்பு போன்ற உடல்நலப் பாதிப்புக ளுக்கும் ஆளானதாக பல மாணவர்கள் தெரிவித்தனர். செல்போன் அருகில் இல் லாவிட்டாலும், செல்போன் ஒலி கேட்ப தைப் போன்ற பிரமை ஏற்பட்டதாகக் கூட ஒரு மாணவன் தன் அனுபவத்தை விவ ரித்தான்! அன்றாடம் தொழில்நுட்பக் கரு விகளோடு இருக்கும் தீவிரப் பிணைப்பு காரணமாக குடும்ப உறவுகள் சீர்கெட்டு வருவதாக பிரபல உளவியல் நிபுணர் ஆண்டனி கிட்மேன் தெரிவிக்கிறார்.

 தொழில்நுட்பமும், தொழில்நுட்பக் கருவிகளும் உலகில் பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக் கின்றன. ஆனால் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அவற்றின் அடிமை களாக நாம் மாறிவிடக் கூடாது. அப்படி மாறினால் நம்முடைய உடல்நலம், சமூக உறவுகள், ஏன், சமயத்தில் உயிரையே கூட அதற்கு விலையாகத் தர வேண்டி யிருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமுத மும் விஷம் என்ற முதுமொழி நம் வாழ் வின் ஒவ்வோர் அம்சத்திற்கும் பொருந்தி வரு வதை நாம் கவனத்தில் கொள்வது நல்லது. 

 பேராசிரியர் கே. ராஜு (உதவிய கட்டுரை : ஆகஸ்ட் மாத சயன்ஸ் ரிப்போர்ட்டர் தலையங்கம்)