அதிகமாக படித்துக் கொண்டே இருப்பவர்கள் எப்போதும் இளமையாகவே இருக்கிறார்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கூடுதலான கல்வித் தேர்வுகளை எழுதுபவர்கள் மற்றும் எப்போதும் எதையாவது ஒன்றை படித்துக் கொண்டே இருப்பவர்கள் இளமையாகவே இருக்கின்றனர். ஒரே வயதுடையவர்களிடையே அதிகம் படித்துக் கொண்டே இருப்பவர்கள் மற்றும் படிக்காமல் இருப்பவர்களிடையே லண்டன் பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில் கல்விச் சாதனைக்காக தொடர்ந்து படிக்கும் நபர்களின் மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவதால் இளமையாகவே இருக்கிறார்கள்.
காலம் செல்ல செல்ல இவர்களின் சமூக பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் மிக இளமையாக இருக்கிறார்கள் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வில் உயிரி வயோதிக தன்மையை குரோமோசோம் கடிகாரத்தை வைத்து நிர்ணயம் செய்துள்ளனர்.
ஆக எப்போதும் படிப்பதில் ஒரு பயன் இருக்கிறது என்றால் அது தவிர்த்து முதுமையையும் விரட்டுகிறது என்கிற ஆய்வு முடிவு புத்தகப்பிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment