படிம ஆராய்ச்சிகளும் மரபணு செல்களில் ஏற்படும் மாற்றங்களும் மனித இனம் (ஹோமோ சேப்பியன்ஸ்) 2,00,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் தற்கால மனிதனைப் போல சிந்திக்கக் கூடிய மூளை ஆரம்பக்கட்டத்திலேயே உருவாகிவிடவில்லை. தற்போது தென்னாப்பிரிக்கா என்று அறியப்படும் பூமிப்பகுதியில் 80,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களிடம் இத்தகைய மூளை வளர்ச்சி தொடங்கியதாகக் கொள்ளலாம் எனப் புதிய புதைபொருள் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அந்த மனிதர்கள் கற்களைக் கூர்மைப்படுத்தி அவற்றை ஈட்டிமுனைகளைப் போல் பயன்படுத்தத் தெரிந்தவர்களாக இருந்துள்ளனர். இந்த நுட்பத்தைக் கற்றுக் கொள்ள மனித இனத்திற்கு நீண்ட காலம் பிடித்திருக்கிறது. இந்த நுட்பம் கைவந்தபிறகு மனிதர்களிடையே இருந்த சமூக உணர்வு மேம்படத் தொடங்கியிருக்கிறது. நவீன மனிதர்கள் உருவாக அது அடித்தளமிட்டிருக்கிறது. 80,000 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மூளை வளர்ச்சியின் பரிணாமமே இன்றைய மனித மூளை எனக் கொள்ளலாம்.
(தகவல் : தி இந்து)
No comments:
Post a Comment