Wednesday, July 13, 2011

மௌன வசந்தம்



“உ லகில் தேனீக்கள் மறைந்து விட்டால், மனித குலத்தின் ஆயுட் காலம் வெறும் நான்கு ஆண்டு கள் மட்டுமே இருக்கும். தேனீக்கள் மறைந்தால், மகரந்த சேர்க்கை மறையும், செடிகொடிகள் மறை யும். மனிதனும் மறைந்து விடு வான்” ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.





மனிதர்களின் வாழ்க்கை இயற் கையுடன் பின்னிப்பிணைந்து, செடி, கொடிகள், புழு, பூச்சிகள், மிரு கங்கள், மனிதர்கள் என அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையும் சங்கிலித் தொடராக ஒன்றோ டொன்று இணைக்கப்பட்டுள்ளது. மனிதன் விவசாயத்தைக் கண்டு பிடித்ததும், பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லக் கூடிய பூச்சிக்கொல்லிகளை கண்டு பிடித்தான். 4500 ஆண்டுகளுக்கு முன்னால், மெசபடோமியாவில், சுமேரியர்கள் ‘சல்ஃபரை’ பூச்சிக் கொல்லியாக பயன்படுத்தினார் கள் என்பதுதான் ‘முதல் பூச்சிக் கொல்லி’ என வரலாற்றில் பதி வாகியுள்ளது.

15ம் நூற்றாண்டில் ‘பாதரசம்’ (மெர்க்குரி) மனிதனுக்கு தொல்லை கொடுத்த பேன்களை ஒழிக்க பயன்படுத்தப்பட்டது. 17ம் நூற் றாண்டில், புகையிலையிலிருந்து எடுக்கப்பட்ட ‘நிக்கோட்டின் சல் பேட்’ பூச்சிக் கொல்லியாக பயன் படுத்தப்பட்டுள்ளது. (ஏன் புகை பிடிக்கக் கூடாதென்று தெரிகி றதா). 19ம் நூற்றாண்டில், சூரி யகாந்தி பூவிலிருந்தும், சில செடி களின் வேர்களிலிருந்தும் பூச்சிக் கொல்லிகள் தயாரிக்கப்பட்ட தற்கு சான்றுகள் உள்ளன. இந் தியா போன்ற உஷ்ண பிரதே சங்களில் ‘வேம்பு’ (இலை,காய், எண்ணெய்) பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டதும் பதிவாகி யுள்ளது. இவற்றைத் தவிர, வேறு சில தாவரங்கள், பூச்சிக்கொல்லி களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே ரசாயன பூச் சிக் கொல்லிகள் பயன்பாடு கூடி விட்டது. பால்முல்லர் கண்டுபி டித்த டி.டி.டி. (னுனுகூ டைக்ளோரா டைபினாயில்-ட்ரைக்ளோரா எத்தன்) பரவலாக பயன்படுத்தப் பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, பி.ஹெச்.சி (க்ஷழஊ) அல்டு ரின், டயல்டுரீன் என்ட் ரீன் ஆகிய பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப் பட்டன என்பது ஆய்வு கட்டுரைகள் மூலம் தெரிய வருகிறது.


ரேச்சல் கார்சன் (1907-1964).

உணவு சங்கிலியில் டிடிடி பூச் சிக் கொல்லி ஏற்படுத்திய பிரச்ச னைகளின் விளைவாக, ரேச்சல் கார்சன் 1962ம் ஆண்டு “மௌன வசந்தம்” என்ற நூலை எழுதி னார். இந்த நூல் டிடிடியின் மோச மான விளைவுகளை அம்பலப் படுத்தியது. ரேச்சல் கார்சன் 27, மே, 1907ல் அமெரிக்காவின் பென் சில்வேனியாவிலுள்ள இயற்கை அழகு மிகுந்த ஸ்ப்ரிங்டேலில் பிறந்தார். ஜான் ஹாப்கின்ஸ் பல் கலைக் கழகத்தில் 1932ல் விலங்கி யலில் முதுகலை பட்டம் பெற்றார். 1936 முதல் 15 ஆண்டுகள் பெட ரல் பீரோவின் எடிட்டராக பணி யாற்றினார். மிகச்சிறந்த அறிவிய லாளரான ரேச்சல், மீன்கள், வன விலங்குகள், கடல்சார் உயிரி னங்கள் பற்றி நிறைய ஆய்வு செய் துள்ளார். இவர் எழுதிய “மௌன வசந்தம்” (ளுடைநவே ளுயீசiபே), ‘அண் டர் த சீவிண்ட்’, ‘எட்ஜ் ஆஃப் தசீ’, ‘த சீ அரௌண்டு அஸ்’, ‘சென்ஸ் ஆஃப் வொண்டர்’ ஆகிய நூல்கள் மிக வும் பிரபலமானவை. எனினும் ‘மௌன வசந்தம்’ என்று 1962ல் அவர் எழுதிய நூல்தான் உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் இயக்கம் துவங்க காரணமாக அமைந்தது.

இயற்கையின் வரலாற்றைப் பற்றி எழுதிவந்த ரேச்சல் கார்சன், 1958ல், தனது சிநேகிதி ‘பாஸ்டீன் ஹெரால்டு’ என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதத்தின் நகல் கிடைக் கப்பெற்றார். ஓலகா ஓவன்ஸ் ஹக்கின்ஸ் என்ற ரேச்சலின் சிநேகிதி, தான் வசிக்குமிடத்தில் டிடிடி பூச்சிக்கொல்லி தெளிக்கப் படுவதால், ஏராளமான பறவை கள் இறந்து போவதை எழுதி இருந்தார். கொசுக்களை கொல்ல தெளிக்கப்பட்ட டிடிடி பறவைகளை கொன்று குவித்தது. விளைவு? ரேச் சல் கார்சன் ரசாயன பூச்சிக் கொல் லிகள், குறிப்பாக டிடிடி பற்றி ஆய்வு செய்தார்.

1957ல், லாங் ஐலாண்ட் என்ற இடத்தில் டிடிடியை ஹெலிகாப்டர் மூலம் தெளித்ததன் விளைவுகள் மோசமாக இருந்ததையடுத்து அமெரிக்க வேளாண் துறை மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அது வும் ரேச்சலின் கவனத்தை ஈர்த் தது அவர் ‘நியூயார்க்கர்’ பத்திரி கையில் டிடிடி பற்றி தொடர் கட்டு ரைகள் எழுதினார். அவற்றை தொகுத்து, 27 செப்டம்பர் 1962ல், ஹ்யூட்டன் மிஃபினன் என்ற அச்சகம் ‘மௌன வசந்தம்’ என்ற நூலை வெளியிட்டது.

‘மௌன வசந்தம்’ நூலில் ரேச்சல் கார்சன் ரசாயன தொழிற் சாலைகள் தவறான தகவல்களை வெளியிடுவதையும், விமர்சனம் ஏதுமின்றி, அவற்றை அரசு அதி காரிகள் ஏற்றுக் கொள்வதையும் சாடி இருந்தார். டிடிடி சுற்றுச்சூ ழலை, குறிப்பாக, பறவைகளை கொல்வதை ஆதாரத்துடன் அவர் விளக்கியுள்ளார். “மௌன வசந் தத்திற்கு அப்பால்” என்ற நூலை ஈ.எச்.வான் எம்டனும், டேவிட் பீக் கால் என்பவரும் இணைந்து எழு தினர். அந்த நூல், 1996ல் வெளி யிடப்பட்டது.

‘மௌன வசந்தம்’ என ஏன் பெயரிட்டார்?

வசந்த காலம் என்றாலே பற வைகள் ஆனந்தமாக கூவும். செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங் கும். பிரபல ஆங்கில கவிஞர் ‘கீட்ஸ்’ எழுதிய “எந்த பறவையும் பாடவில்லை” (டுய க்ஷநடடந னுயஅந ளுயளே ஆநசஉi) என்ற கவிதைதான் இந்த தலைப்பை வைக்க தூண்டுகோ லாக அமைந்தது. பூச்சிக் கொல் லிகளால் பறவைகள், மிருகங் கள், மனிதர்கள் மறையும்போது வசந் தம் எப்படி வரும், பறவைகள் பாடாத வசந்தம் மௌன வசந்தம் தானே? என்று வினா எழுப்பி, தனது நூலுக்கான தலைப்பை நியாயப் படுத்தியுள்ளார்.

எதிரிகள் அதிகரித்தனர்

மௌன வசந்தம் நூல் வெளி யானதும் ரசாயனத் தொழிற்சாலை கள் ஒன்றிணைந்து ரேச்சலைப் பற்றி அசிங்கமான பிரச்சாரத்தில் இறங்கின. “பைத்தியம் பிடித்த பெண்” “இப்படிப்பட்ட நூலை எழுத என்ன அருகதை இருக்கிறது?” “அவர் விஞ்ஞானியே இல்லை” என்று எதிரிகள் தாக்குதலில் இறங் கினர். மான்சான்டோ, வெல்சி கோல், அமெரிக்கன் சைனா மிட் .... என்று அமெரிக்க ரசாயன உர பூச்சிக்கொல்லி தயாரிக்கும் ராட் சத நிறுவனங்கள் எதிர்தாக்குத லில் இறங்கின. அதற்கு அமெ ரிக்க அரசின் வேளாண்துறையின் ஆதரவும் இருந்தது. ஊடகங் களும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு ஆதரவாக, ஆனால் சற்று கவனத்துடன் செயல்பட்டன. கார்ப் பரேட் நிறுவனங்கள் சார்பில், ராபர்ட் வொயிட் ஸ்டீவன் என்ப வர், கார்சன் சொல்வதைக் கேட் டால், “நாம் இருண்ட காலத்திற்கு செல்ல வேண்டியதுதான். பூச்சிக ளும் புழுக்களும் நோய்களும் தாக்கி, இந்த பூமி புழு, பூச்சிக ளின் இருப்பிடமாக மாறிவிடும்” என்று எச்சரித்தார்.

பிரிட்டிஷ் நாட்டின் அரசியல் வாதி, டிக்டெவர்ன் “கார்சன் தனது நூலில், டிடிடி கொசுக்களை அழித்து, மலேரியா நோயை ஒழிக்க உதவியுள்ளது பற்றி எது வும் கூறவில்லை. 20ம் நூற்றாண் டில் ஏற்பட்டுள்ள ஆயிரக்கணக் கான சாவுகளுக்கு கார்சன்தான் பொறுப்பேற்க வேண்டும் “(2005ல் எழுதியது).

“மனித நிகழ்வுகள்” என்ற பத் திரிகை 19 மற்றும் 20ம் நூற்றாண் டில் வெளியிடப்பட்ட 10 மிக மோச மான நூல்களில் மௌன வசந்தம் ஒன்று என பட்டியலிட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந் தும், பெரு முதலாளிகளிடமிருந் தும் வேறு எதை எதிர்பார்ப்பது?

அமெரிக்காவில் 1962ல் இந்த நூல் சர்ச்சையை ஏற்படுத்திய தைத் தொடர்ந்து, அன்றைய அதி பர் ஜான்.எப். கென்னடி, இதுதொ டர்பான ஆய்வுக்கு உத்தரவிட் டார். நீண்ட ஆய்வுக்குப்பின், நூலில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மை எனத் தெரிய வந்தது. அதன் பின்னர் ரசாயன பூச்சிக்கொல்லி/உரம் ஆகியவற்றின் பயன்பாடு பற் றிய ஒழுங்குபடுத்தும் விதிமுறை கள் உருவாக்கப்பட்டன. இது இந் நூலுக்கு கிடைத்த வெற்றியாகும்.

கொலராடோ சட்ட பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் கெட் ஜஸ் “இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத் திய நூல் மௌன வசந்தம்” என்று குறிப்பிட்டுள்ளார். பருவநிலை மாற் றம் தொடர்பான கமிட்டியின் தலை வர் அல்கோரே, “சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகளை பொது விவாதத்திற்கு கொண்டு வருவதற்கும், பூவுலகை பாதுகாக் கும் நடவடிக்கைகளை உருவாக்கு வதற்கும் மௌன வசந்தம் உதவியுள் ளது. 20ம் நூற்றாண்டில் தடம் பதித்த நூல் மௌன வசந்தம்” என பாராட்டியுள்ளார்.

பல்வேறு அறிவியல் நூல் களை படைத்த, இயற்கையை நேசித்த ரேச்சல் கார்சன் 4.4. 1964ல் புற்று நோய் தாக்கி மரண மடைந்தார். அமெரிக்காவில், செல் வாக்கு மிகுந்த ரசாயன உற்பத் தியாளர்களின் கூட்டமைப்பை தீரத்துடன் எதிர்கொண்டு, மனி தன் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து, பூவுலகை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகின்ற உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்திற்கு விதை ஊன்றிய ரேச்சல் கார்சன் இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுத்துள்ளார்.

1 comment:

PARAMES DRIVER said...

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். தங்களது வலைப்பதிவுகள் அறிவியல் சார்ந்த விசயங்கள் பல தெரியப்படுத்துகின்றன.வாழ்த்துக்கள்.என வாழ்த்தும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்.