தேசிய அறிவியல் ஆசிரியர்கள் மாநாடு, தேசிய அறிவியல் தொழில்நுட்ப மையம் (NCSTC)> அறிவியல் தொழில் நுட்பத்துறை(DST) புதுடெல்லி,மற்றும் தேசிய அறிவியல் தொழில் நுட்பமைய கூட்டுக்குழு( NCSTC-NETWORK) புதுடெல்லி ஆகிய அமைப்புகள் இனைந்து கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இப்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இம்மாநாடு நாட்டில் உள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கு இடையே அடிப்படையான தொடர்பை ஏற்படுத்தவும், அவர்களுக்கு இடையே அறிவியல் விழிப்புணர்வையும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்தற்காக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இம்மாநாட்டின் மூலம் ஆசிரியகள் சமூகத்தினர்களிடையே புதிய கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும்,அறிவியல் கல்வியில் உருவாகி உள்ள ஆக்கபூர்வமான புதிய முறைகளை பரிமாறிக்கொள்ளவும், அடிப்படையாக அமைவதோடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாகி உள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மற்றவர்கள் பகிர்ந்துக்கொள்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படும் இம்மாநாடு இந்த ஆண்டு “அறிவியல் கல்வியின் சாவல்கள் மற்றும் வளர்ச்சி””(Trends & Chanllengs in Science Education) என்ற கருப்பொருட்ளை மையமாகக் கொண்டும்இ துணைத் தலைப்புகளாக 1. “அறிவியல் கற்றல் -கற்பித்திதலில் புதுமைகள்” 2. “அறிவியல் பாடங்களை தொடர்புப்படுத்துதல்” 3. “வேதி அறிவியல் மற்றும் வாழ்க்கைத்தரம்” ஆகிய தலைப்புகளில் நடத்தப் படுகிறது. இம்மாநட்டில் ஆசிரியர்கள்இ கல்வியாளர்கள், ஆராய்ச் சியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், பி.எட் கல்லுரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம்.
மேற்கண்ட முன்று தலைப்புகலை அடிப்படையாக கொண்டு ஆங்கிலம் அல்லது இந்தியில் ஆய்வுகட்டுரைகள், சுவரொட்டிகள் தயாரித்து வரும் அக்டோபர் 15 2011 க்குள் பேரா.P.ளு வர்மா, தேசிய ஒருங்கிணைப்பாளர், தேசிய அறிவியல் ஆசிரியர்கள் மாநாடு, அறிவியல் கல்லலூரி, பட்னா,பீகார்-800005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: http://www.ncstc-network.org/ntsc6/index.php மற்றும் புதுவை அறிவியல் இயக்கத்தை அனுவகவும். தொடர்பு எண்கள்: 04132290733, 9488074341, 944322588.