Monday, June 6, 2011

புத்தக பொன்மொழிகள்

 நல்ல புத்தகங்களைப் போன்ற நம்பிக்கை இந்த உலகத்தில் இல்லை - ஆங்கிலப் பழமொழி




 என் மனம் விரும்பும் நூல்களைக் கொடுங்கள். வாழ்நாள் முழுதும் சிறையில் வாழச் சம்மதிப்பேன்

 - மாஜினி




 பயன்படுத்தப்படாத புத்தகம் வெறும் காகிதக் கட்டுதான் - சீனப் பழமொழி




 நான் தெரிந்துகொள்ள வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன. நான் படிக்காத நூல் ஒன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்


 - ஆபிரகாம்லிங்கன்



அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி - ஜான்மெக்காலே

ஒரு நல்ல படிப்பாளி கொஞ்சம் விஷயங்களைப் பற்றியாவது முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். பல விஷயங்களைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் - மார்க்ஸ் அரேலியஸ்

மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள் - சீனப் பொன்மொழி

ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை - சிசரோ





நூலகம் இல்லாத ஊரை நான் ஒரு ஊராக மதிப்பதே இல்லை

- மாமேதை லெனின்






எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது - பிளாட்டோ.






"மனிதனைப் போலத்தான் புத்தக மும் ஒரு வாழ்வின் தோற்றமாகும்; அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த இன்றைக்கும் படைத்து வருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அது ஒரு “பொருள்” மட்டும் அல்ல”

மாக்சிம் கார்க்கி

5 comments:

சமுத்ரா said...

அருமை

Pondicherry Science Forum said...

தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி

Settu matharsha said...

Very use full quotes .so much thank u sir

Unknown said...

Thanks it was very useful quote

Unknown said...

Very useful quotes thank you