சூரிய ஆற்றல் சுற்றுப்புறத்திற்கு எந்தக் கேட்டினையும் விளைவிக்காத சுத்தமான ஆற்றல்.
வடமேற்கு இந்தியாவில் 63 ஏக்கர் நிலத்தில் 36,000 சூரியத் தகடுகளை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மிகப்பெரும் திட்டத்தை அசூர் பவர் என்ற நிறுவனம் நிறைவேற்றி வருகிறது. வறண்ட பகுதியில் தகடுகள் நிறுவப்பட்டுள்ளதால் ஐந்து நாட்களுக்கொரு முறை அவற்றின் மீது படியும் தூசுகளைத் துடைத்து சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. கடுமையான மின்பற்றாக்குறை நிலவும் இந்தியாவில் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதை நவீனப் படுத்தி, நிலக்கரியைப் பயன் படுத்தித் தயாரிக்கப்படும் மின் சாரத்தின் அளவைப் படிப்படியாகக் குறைப்பதுதான் திட்டத்தின் நோக்கம்.
2020-க்குள் 2000 மெகாவாட்
இதுவரை 140 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை மட்டுமே இந்தியா பயன்படுத்தி வருகிறது. இதைக் கொண்டு 50,000 மக்கள் தொகை உள்ள ஒரு நகரத்தின் மின்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தயாரிக்கப்படும் சூரிய ஆற்றல் மின்சாரத்தின் அளவு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. 2020-க்குள் இந்த அளவை 20,000 மெகா வாட் ஆக உயர்த்த வேண்டும் என்ற இலக்கினை அப்போது இந்திய அரசு நிர்ணயித்தது. பல ஆய்வாளர்கள் இந்த இலக் கினை எட்டுவது சாத்தியமல்ல என்று கருதினர். ஆனால் இன்று அவர்கள் தங்கள் கருத்தினை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை தோன்றியிருக்கிறது. 2020க்கு சில ஆண்டுகள் முன்ன தாகவே 20,000 மெகாவாட் இலக்கை எட்டிவிட முடியும் என தற்போது ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக அள வில் சூரியத் தகடுகளின் விலை குறைந்ததால்தான் இது சாத்திய மாகியிருக்கிறது. சன்டெக் பவர், யிங்க்லி கிரீன் எனர்ஜி போன்ற சீன நிறுவனங்கள் சூரியத் தகடு களின் உற்பத்தியை அதிகரித்த தால், உலக விலை 30-லிருந்து 40 சதம் வரை குறைந்தது. சீனா, அமெரிக்கா, தைவான், ஐரோப் பிய நாடுகளிலிருந்து இந்திய நிறு வனங்கள் தகடுகளை வர வழைத் துக் கொள்கின்றன. அரசு மானி யம் கொடுத்து ஊக்குவிப்ப தாலும் சூரியத் தகடுகளின் விலை குறைந்திருப்பதாலும் அசூர் போன்ற பல நிறுவனங்கள் இன்று வடமேற்கு இந்தியச் சமவெளிகளில் களம் இறங்கி யுள்ளன. 2000 பேர் வசிக்கும் சிறு கிராமங்களில் கூட சூரிய சக்தித் தகடுகள் மின்னும் காட் சியைப் பார்க்க முடிகிறது.
சூரியசக்தி மின்தயாரிப்பில் ஐரோப்பிய நாடுகளோடு ஒப் பிடும்போது இந்தியா பின்தங் கியே இருக்கிறது. உதாரணமாக, 2010 இறுதியில் ஜெர்மனி 17,000 மெகாவாட் சூரியசக்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் திற னுடன் இருந்தது. ஒரு வருடத் தில் 300 நாட்களில் சூரிய ஒளி தாராளமாகக் கிடைக்கும் நம் நாட்டில் அதைவிட அதிகமாக சூரியசக்தி மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.
தயாரிப்புச் செலவு குறையும்
“இந்தியாவில் உள்ள மின் ஆலைகளில் பெரும்பாலானவை நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்களே. அங்கு ஒரு யூனிட்டிற்கு 4 ரூபாய் செலவில் மின்சாரம் தயாரிக் கப்படுகிறது. ஏலத்தில் அது 8-லிருந்து 10 ரூபாய் வரை எடுக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் ஒரு யூனிட் மின்சாரத்திற்குக் கொடுக்கும் விலையும் அதுதான். பெட்ரோலியப் பொருட்களைப் பயன்படுத்தும் ஜெனரேட்டர் கள் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 10 ரூபாய் செலவா கிறது. தற்போது சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் செலவு இதோடு ஒப்பிடும் நிலையில் உள்ளது. சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான தேவை அதிகரித்து வருவதால், ஒவ்வொரு மாதமும் சூரியசக்தி மின்சாரத்தின் உற்பத்திச் செலவு குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் மற்ற வகைகளில் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு ஆகும் செலவிலேயே சூரியசக்தி மின்சாரத்தையும் தயாரிக்க முடியும். தொடக் கத்தில் நிறுவனங்களிடையே கடுமையான போட்டி இருக் கிறது. ஆனால் நாளாவட்டத் தில் கொள்ளை லாபமே நோக்க மாகக் கொண்ட நிறுவனங்கள் காணாமல் போய்விடும். இத் துறையில் உண்மையான ஈடு பாடு உள்ள நிறுவனங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும்” என்கிறார் அசூர் பவர் தலைமை மேலாளர் இன்டர்ப்ரீட் வாத்வா.
பேராசிரியர் கே. ராஜு
(உதவிய கட்டுரை : ‘தி இந்து’வில் விகாஸ் பஜாஜ் எழுதியது)