மாணவர்களிடையே அறிவியல் ஆக்கத் திறனை வளர்க்கும் வகையில், புதுச்சேரி அறிவியல் இயக்கம் தமிழ்நாடு அறிவியல்இயக்கத்துடன் இணைந்து, அறிவியல் விழிப்புணர்வு திறனறி போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
6 முதல் 8ம் வகுப்பு வரை, 9 முதல் 12ம் வகுப்பு வரை என, இரு பிரிவுகளில் போட்டி நடக்கும்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் 30ம் தேதிக்குள் ரூ.100 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவுசெய்யும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு காலத்திற்கு ரூ.84 மதிப்புள்ள துளிர் அறிவியல் மாத இதழ்கள் மாதந்தோறும் அனுப்பிவைக்கப்படும்.
ஜந்தர் மந்தர் (ஆங்கிலம்) இதழ் வேண்டுவோர் பதிவுக்கட்டணமாக ரூ.150/-(ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்)செலுத்தவேண்டும்.
போட்டிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் 26ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் நடக்கும்.
எழுத்துத் தேர்வில் 120 நிமிடத்தில் 100 வினாக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் வினாத்தாள் அமையும்.
வினாத் தாள் தமிழ், ஆங்கிலத்தில் அமையும்.
தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
புதுச்சேரி அளவில் முதலிடம் பெறும் 5 மாணவர்களுக்கு (இளநிலை) அடுத்த ஆண்டு மாகியில் நடக்கவுள்ள மாநில குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.
புதுச்சேரி அளவில் முதல் 50 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு புதுச்சேரி அறிவியல் இயக்க மாத இதழான அறிவியல் முரசு ஒரு ஆண்டுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர்கள்,பள்ளி முதல்வர்கள்/தலைமையாசிரியர்கள் பூர்த்தி செய்த படிவத்துடன் நுழைவுக்கட்டணத்தை வங்கி வரைவாக அல்லது பணவிடையாக மாநில ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
வங்கி வரைவு துளிர்,சென்னை என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும். (DD in favour of Thulir, Payable at Chennai)
பள்ளிகளுக்கான பரிசுகள்:
100 மாணவர்களுக்கு மேல் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று அறிவியல் மென்தட்டுகள்(சி.டி.)
200 பதிவுகளுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு.. முதல் பரிசு -ரூ.5000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்.
இரண்டாம் பரிசு -ரூ.3000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்
மூன்றாம் பரிசு -ரூ.2,000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்
பள்ளிகளுக்கான பரிசுகள் உயர் அளவு பதிவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
இதற்கு துளிர் மற்றும் ஜந்தர்மந்தர் பதிவுகள் சேர்த்துக் கணக்கில் கொள்ளப்படும். இப்போட்டிகள் குறித்த அதிக விபரங்கள் தேவைப்படுவோர் மாநில ஒருங்கிணைப்பாளரையோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளரையோ தொடர்பு கொள்ளலாம்.
புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர்
பா. ரவிச்சந்திரன்
10, இரண்டாவது தெரு
பெருமாள் ராஜாத்தோட்டம்
ரெட்டியார்பாளையம்
புதுச்சேரி -10
மின் அஞ்சல்: cerdpsf@gmail.com
விபரங்களுக்கு 0413 2290733, 94880 74341, 9442786122 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மாநில ஒருங்கிணைப்பாளர்
முனைவர்.அ.வள்ளிநாயகம்
132சி,முனிசிபல் காலனி 6வது வீதி,
தஞ்சாவூர்-613007
போன்-04362-240784
செல்-94438 65864