Saturday, June 18, 2011

கல்விக்கு புதுவை அரசு செய்யவேண்டியது என்ன?





மாநில நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக் கல்விக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்


புதுவையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்விவரை அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்படாததற்கு என்ன காரணம் என்பதை ஆராய கல்வியாளர்கள், வல்லுநர்கள் தலைமையில் ஆய்வு குழு அமைத்து அதன் பரிந்துரைகளை போர்கால அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டுகளில் முடிப்பது 

 கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வியில் 15 சதவித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதநிதிகளின் குழந்தைகளும், அனைத்து வகை அரசு ஊழியர்களின் குழந்தைகளும் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

 புதுச்சேரிக்கான தனியானதொரு கல்விச்சட்டம் இயற்றப்பட வேண்டும். அதில் அடிப்படை வசதிகள், நிதி ஆதாரங்கள், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் தாய்மொழி கல்வி போன்றவைகள் சட்டமாக இருக்க வேண்டும்.

 புதுச்சேரி விடுதலைப் போராட்டம், புதுச்சேரி வரலாறு மற்றும் இயற்கை அமைப்பு பற்றிய திறனை மாணவர்கள் பெற பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். 

 புதுச்சேரியில் படிப்பறிவில்லாதவர்கள் யாரும் இல்லாத நிலையை உருவாக்க ஒரு முழு வீச்சான மக்கள் எழுத்தறிவு இயக்கத்தை நடத்த வேண்டும்.

இனி புதியதாக தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது. 

கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு தனியான அனைத்து விவரங்களும் அடங்கிய இணையதளம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும்; உயரதிகாரிகள் தொடர்ச்சியாக கண்கானிப்பு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். 

தரமான கட்டடங்களைக் கொண்ட பள்ளியாகவும், பாதுகாக்கப்பட்ட முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், மாணவ, மாணவியர்களுக்கு தனித் தனியே பொதுக் கழிவறை வசதியும் கொண்ட பள்ளிகளாக மாற்றுவதும், இதை பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் தனி நிதி ஒதுக்கி அதை பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் ஒப்படைப்பது. 

ஆய்வகங்கள் இல்லாமல் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பரிவுகளுக்கு ஆய்வகங்கள் கட்டுவது, போதுமான உபகரணங்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். 

ஆசிரியர்களை கல்விப்பணி தவிர்த்த வேறு பணிகளுக்கு பயன்படுத்தாமல் இருப்பது குறிப்பாக கோவில் நிர்வாகம், அமைச்சர்களுக்கு உதவியாளர் போன்ற கல்வித்துறைக்கு சம்பந்தம் இல்லாத பணிகளுக்கு அனுப்பவதை தடைசெய்ய வேண்டும்.

பள்ளி ஆசிரியர்களை கல்வி அல்லாத வேலைகளுக்கு இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் புதுவையில் ஆண்டுக்கு 29 நாள் பயன்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும்.

பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஓப்பந்த அடிப்படையில் ஆசிரியர், கல்வி பணி அல்லாத ஊழியர்களை பணி நியமனம் செய்யக் கூடாது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூஷன் வகுப்புகள் நடத்துவதை தடைசெய்ய வேண்டும்.

ஆசிரியர் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம மற்றும் சக ஆசிரியர்கள் சேர்ந்து ஒவ்வொரு காலாண்டுக்கும் வெளியிடுவது.

கல்வியில் பிரைவேட், பொது, மற்றும் பார்ட்னர்சிப் மூலம் (பிபிபி) வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

பள்ளிகளில் சேர்ப்பதற்கு எந்த விதமான தேர்வு முறையையும் பின்பற்றக் கூடாது. & தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் கணக்கு விவரங்களை ஊடகத்தில் வெளியிட வேண்டுமென சட்டம் இயற்றுவதோடு கல்வி வணிகர்களது கணக்கு வழக்குகள் அரசின் தணிக்கைக்கும் உட்பட்டது என்று அறிவிக்க வேண்டும்.

பள்ளி நூலகங்கள் முறையாக பராமரிக்க தேவையான நூலகர்கள், நூல்கள், தேவையான இடம் மேலும் மாணவர்கள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். 

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் காலமுறைப்படியே செய்யவேண்டும். தொற்று வியாதிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பிரத்ஏக வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.

போதுமான அவசர உதவி மருந்துகள், கருவிகள் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு போதுமான அளவு நாப்க்கின்கள் வைத்திருக்க வேண்டும். 

தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெரும் மாணவர்களின் முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். 

பொறியல், மருத்துவம் படிப்பவர்களுக்கு வழங்கப்படுவதைப்போல   கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தனியார் மருத்துவ, பொறியல் கல்லூரிகளில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டை உறுதியாக பெற்றுத் தர வேண்டும்.

No comments: