Thursday, June 30, 2011

பாஸ்ட் பூட் Danger


இந்தியாவில் துரித உணவை சாப்பிடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காய்கறிகள் சிப்ஸ்களாகவும், ப்ரெஞ்ச் ஃபிரையாகவும் உட்கொள்ளப்படுகின்றன. இதனால் சிறுவயதிலேயே உடல்பருமன் நோய் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கூல்டிரிங்க்ஸ்களின் உபயோகம் முந்நூறு மடங்கு அதிகரித்துள்ளது.

சிறுவர்கள் தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட நூற்றுபத்து முதல் நூற்று எண்பது கலோரிகள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் பத்து ஆண்டுகளில் இவர்களது எடை இருபத்தைந்து கிலோ அதிகரித்து விடுகிறது. ஒரு தலைமுறை இடைவெளியில் இருபது சதவீத அளவிற்கு அதிகமாக கலோரிகள் உட்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் உடற்பருமன், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, இருதயநோய்கள் என பல நோய்கள் சிறுவயதிலேயே ஏற்படுகின்றன. இந்த உடற்பருமனை உடற்பயிற்சியாலும் பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதே உண்மை.

Saturday, June 25, 2011

நெருப்பின் கதை: சுடாது படிங்க


நெருப்பும் புகையும்


ஆதிகாலத்தில் திடீர் திடீரெனத் தீப்பிடித்து எரிந்த காடுகளைக் கண்டு மனிதன் பயந்தான். நெருப்பைக் கும்பிடும் பழக்கமும் இந்த பயத்திலிருந்து தோன்றியதுதான். காலப்போக்கில், நெருப்பைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்த மனிதர்கள் கற்றுக் கொண்டனர்.

ஆனாலும் 17ஆம் நூற்றாண்டு வரை ஒரு பொருள் எரி வதற்கான காரணம் தெரியாமல்தான் இருந்தது. 1774ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஆன்டோயின் லவாய்சியர் ஒரு பொருள் எரிவதற்கு ஆக்ஸிஜன் அவசியம் என்று கண்டுபிடித்தார். 

போதுமான அளவில் ஆக்ஸிஜன் இருந்தால்தான் எரிதல் நடைபெறுமென்றும் கார்பன், ஹைட்ரஜன் போன்ற கனிமங்களைக் கொண்டதாக இருந் தால்தான் ஒரு பொருள் எரியுமென்றும் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. எரியும் பொருள் கூட ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடையும்போதுதான் எரியத் தொடங்கு கிறது. மண்ணெண்ணெய், பெட்ரோல், தாள், இலைச்சருகு போன்ற சில பொருட்கள் எளிதில் தீப்பற்றக் கூடியவை. நிலக்கரி, விறகு போன்ற பொருட்கள் நன்கு சூடுபடுத்திய பிறகே எரியத் தொடங்குகின்றன. பாஸ்ஃபரஸ் சாதாரண வெப்பநிலையிலேயே தீப்பற்றக் கூடியது என்பதால் அதைத் தண்ணீருக்குள் வைத்தால்தான் எரியாமல் பாது காக்க முடிகிறது.

ஒரு பொருள் ஆக்ஸிஜனுடன் சேருவது ஆக்ஸிஜன் மயமாதல் (டிஒனையவiடிn) எனப்படுகிறது. சில பொருட்கள் ஆக் ஸிஜனுடன் சேருவது மிக மெதுவாக நடக்கும். நெருப்பி லிருந்து கிடைப்பது மாதிரி எவ்வித ஒளியும் கிடைக்காது. வெப்பமும் மிக மிகக் குறைவாகவே வெளிப்படும். இரும்பு துடிப்பிடிப்பதை இந்த வகை ஆக்ஸிஜன் மயமாதலுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆக்கமும் நானே, அழிவும் நானே

இன்று நெருப்பு பல வகைகளிலும் நமக்குப் பயன்பட்டு வருகிறது. அன்றாடம் சமையலுக்கு நாம் நெருப்பையே சார்ந்திருக்கிறோம். நெருப்பின் உதவியோடு நீரைக் கொதிக்க வைத்துக் கிடைக்கும் நீராவியின் சக்தியை மனிதன் தெரிந்து கொண்டபோது தொழிற்புரட்சி ஏற்பட் டது. நீராவியின் சக்தி மின்சார உற்பத்திக்கும் வேறு பல இயந்திரங்களை இயக்குவதற்கும் பயன்பட்டு வருகிறது. பூமியிலிருந்து கிடைக்கும் கச்சாப் பொருட்களிலிருந்து உலோகங்களைப் பிரித்து எடுக்க ... கார், படகு, கப்பல், விமானம் போன்ற ஊர்திகளை இயக்க... என வெப்பசக்தி யின் பயன்கள் எண்ணிலடங்கா. அதே சமயம், நெருப்பை அளவோடு கட்டுப்படுத்தத் தவறினால் அது அழிவு சக்தியாகவும் மாறிவிடுகிறது.

புகை தோன்றுவதேன்?

ஒரு எரிபொருள் முழுமையாக எரிய போதுமான அளவில் ஆக்ஸிஜன் தேவை எனப் பார்த்தோம். அப் படிப் போதுமான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பொருட்கள் அரைகுறையாக எரியும்போது புகை தோன் றுகிறது. கார்பன் துகள்கள், கரியமிலவாயு, நீராவி ஆகியவற் றால் ஆனதே புகை. புகை கருப்பாக இருந்தால் அதில் கார்பன் துகள்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று பொருள்.

காற்றை அசுத்தப்படுத்துவதில் புகைக்கே முதலிடம். குறிப்பாக நகரங்களில் வெளியிடப்படும் புகை நமது இதயத்திற்கும் நுரையீரலுக்கும் கெடுதலை ஏற்படுத்தி உடல்நலப் பாதிப்பை உருவாக்குகிறது. காற்று வீசி புகை யை அப்புறப்படுத்தாவிட்டால் பாதிப்பு இன்னும் கூடுத லாக இருக்கும். புகையினால் சில நன்மைகளும் உண்டு. குளிர்ப்பிரதேசங்களில் பழத் தோட்டங்களைக் குளிரிலிருந்து புகை பாதுகாக்கிறது. சிறு துகள்களின் மீது நீர்த்திவலைகள் (றயவநச எயயீடிரச) படிந்து குளிர்வதானாலேயே மழை உண்டாகிறது.

சூரியன் உதிப்பதற்காக தாமரை காத்திருக்கிறதா?

தாமரை மலர்வதற்கு மட்டுமல்ல, அனைத்துவகை தாவரங்கள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூரிய ஒளி அவசி யம். பூமியில் உயிரினம் தோன்றி வளர்வதற்கும் சூரிய ஒளியே ஆதாரமாக இருந்து வருகிறது. மற்றபடி, சூரியன் உதிப்பதற்காக தாமரை காத்திருக்கிறது என்று சொல்வது விஞ்ஞான உண்மையைக் கவித்துவமாகச் சொல்வதுதான்.

Thursday, June 23, 2011

எமனாகும் எண்டோசல்பான்

 அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கி பிறப்பது அரிது என்றார் அவ்வையார். அப்படி அழகிய மகனாய், மகளாய் பிறந்த மக்களுக்கு எமனாக எண்டோசல்பான் என்ற மருந்தை ஆளும் மத்திய அரசே வழங்கி கொல்வது சரியா? கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் எண்டோசல்பான் பூச்சி மருந்தால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. முத்தளமடா, ஸ்வர்க் போன்ற இடங்களில் இப்பூச்சிக்கொல்லி மருந்து ஹெலிகாப்டர் மூலம் முந்திரி மற்றும் மாம்பழத் தோட்டங்களில் தெளிக்கப்பட்டது. 

இதனால் அப்பகுதிகளில் அதிக அளவிலான நோய்களும், சிறுவர், சிறுமியருக்கு மன வளர்ச்சி குறைபாடும், மன நல பிரச்சனைகளும், நரம்பு மண்டல பாதிப்புகளும் ஏற்பட்டது. எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து குறித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது . உயர்நீதி மன்ற உத்தரவிற்கு இணங்க, கேரள அரசாங்கம் 2005ல் எண்டோசல்பானைத் தடை செய்தது. இன்றும் அதன் அபாயம் தொடர்கின்றன.
1995ம் ஆண்டு முதல் எண்டோசல்பான் பூச்சி மருந்தை பயிர்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்த பின்னணியில் இதுவரை 500 உயிர்கள் பலியாகியுள்ளன. 1970களுக்கு பிறகு என்று கணக்கிட்டால் சுமார் 4 ஆயிரம் பேர் எண்டோசல்பானால் உயிரிழந்துள்ளனர். இந்த பூச்சி மருந்தை பயன்படுத்தியதின் தொடர்விளைவால் இன்றைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். 9ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் செவித்திறனை இழந்திருக்கிறார்கள், உடல் உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எண்டோசல்பான் எளிதில் ஆவியாகக் கூடிய பொருள். எண்டோசல்பான் மிக சுலபமாக காற்றில் கலந்துவிடும். 150 நாட்களுக்கும் மேலாக அழியாமல் இருக்கும். பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ள இடங்களில் மழைப் பெய்தால், எண்டோசல்பான் மழை நீரில் கலந்துவிடும். இதனால் மண்ணும், நீரும் விஷமாக மாறிவிடுகிறது. மண்ணில் விளையும் உணவுப் பொருட்களிலும், மனித உடலில் பெரும் பாதிப்புகளை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்தும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
குருதியில் நேரடியாகச் சுரந்து மனிதனின் பாலியல் செயல்பாடு முதல் பல்வேறு செயல்பாடுகளுக்குக் காரணமாகும் ‘என்டோகிரைன்‘ சுரப்பியை எண்டோசல்பான் தாக்குகிறது. இதனை பல்வேறு அறிவியல் ரீதியான சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கின்றது. “முக்கியமாக, கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நீண்டகாலம் அதிக அளவிலான எண்டோசல்பானை சுவாசிப்பதன் காரணமாக, மன நல வளர்ச்சியின்மை, மன நல குறைபாடு, நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள், குழந்தைகள் பிறக்கும்போதே குறைபாடுடன் பிறத்தல் போன்ற விளைவுகளால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்”. இத்தோடு ஆண் மற்றும் பெண் இனப்பெருக்கத் தன்மையையும் பாதிக்கின்றது. பருத்தி மற்றும் முந்திரி பயிர்களுக்காக பயன்படுத்தப்படும் எண்டோசல்பான் பூச்சி மருந்து உலகிலேயே அதிகமாக உபயோகப்படுத்தப்படுவதும், பரிந்துரைக்கப்படுவதும் இந்தியாவில் தான் என புள்ளிவிபரங்கள் கூறுகிறது. “இந்தியாவில் எண்டோசல்பான் 48 பெயர்களில் விற்கப்படுகிறது.” கர்நாடகா, பஞ்சாப் அசாம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள், பயிர்கள், முந்திரி, முருங்கை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் 2011 மே 20ம் தேதி அன்று வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை பகுதியில் கருமலை குரூப் நிர்வாகத்திற்கு உட்பட்ட தேயிலை தோட்டத்தில் எண்டோசல்பான் மருந்து தெளிக்கப்பட்ட போது காற்றில் பரவியது. தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 16 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கேரளமும், கர்நாடகமும் தடை செய்துள்ள எண்டோசல்பான் பூச்சி மருந்தை உடனடியாக நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. மனித வாழ்வுக்கும், மண்வளத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படிபட்ட இந்த ரசாயன மருந்து இன்னும் நமது நாட்டில் பகிரங்கமாக விற்கப்பட்டு வருகிறது. கேரளாவில் தடை இருந்தாலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து தங்கு தடையின்றி சென்று கொண்டிருந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் உடன் தடை செய்யப்பட வேண்டும் என்றபோது தடை செய்வது குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்கப்படும் என்றார் முன்னாள் முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்கள். கடந்த கேரள இடது முன்னணி அரசு தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு, எண்டோசல்பானால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளித்தது. ஆனால், மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களை பற்றி சிந்திக்கவோ, உதவிடவோ எந்த முயற்சியும் செய்யவில்லை.
 எண்டோசல்பான் 125 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நம் நாட்டிலும் இதற்கு தடை விதிக்கக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கேரள மாநிலக்குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.
எண்டோசல்பானால் மனித உயிருக்கும், சுற்றுச் சூழலுக்கும் எந்தவிதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் தலைமையிலும், விவசாய கமிஷனர் தலைமையிலும் இரண்டு கமிட்டிகளை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. எண்டோசல்பான் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டுமா அல்லது தற்போதுள்ள கையிருப்புகளுக்கு மட்டும் தடைவிதித்து, இந்த மருந்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இந்த கமிட்டி அறிக்கை அளிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மற்ற எல்லா விஷயங்களை விட மனித உயிர் மேலானது என்பதால், எண்டோசல்பானை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் எட்டு வார காலத்துக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை எண்டோசல்பான் உற்பத்தியாளர்களின் லைசென்சை முடக்கி வைக்கும்படியும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வுக் குழுவும், 3 ஆண்டு காலம் தீவிர ஆய்விற்கு பின் எண்டோசல்பான் பூச்சி மருந்தை, உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. ஸ்டாக் ஹேம் சுற்றுச்சூழல் மாநாட்டில், தடை செய்யப்பட வேண்டிய மருந்துகள் தொடர்பாக இந்தக் குழு முன்வைத்துள்ள பட்டியலில் எண்டோசல்பான் முதலிடத்தில் உள்ளது. உலகிலுள்ள 173 நாடுகள் எண்டோசல்பான் போன்ற நச்சுத்தன்மை மிக்க பூச்சிக்கொல்லி மருந்துக்கு சர்வதேச அளவிலான தடை பிறப்பிப்பது குறித்து விவாதித்தன. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 125 நாடுகள் எண்டோசல்பானுக்குத் தடை விதித்துவிட்டன. மீதமுள்ள 48 நாடுகளில் 47 நாடுகள், மௌனம் காத்தன. இந்தியா மட்டும் தான் எண்டோசல்பானை தடை செய்யக்கூடாது என வாதிட்டது.
உலகில் 70 சதவீத எண்டோசல்பான் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. மிச்சமுள்ள 30 சதவீதத்தை பிரேசிலும் இஸ்ரேலும் தயாரிக்கின்றன. உலகின் மொத்த உற்பத்தியான 12,800 டன்னில், இந்தியாவில் மட்டும் 9000 டன் எண்டோசல்பான் உற்பத்தி செய்யப்படுகிறது. எண்டோசல்பான் மருந்தினை தயாரித்த ஜெர்மன் நிறுவனம் உற்பத்தியை நிறுத்திவிட்டது. இப்போது அந்த நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்து அதை வளரும் நாடுகள் மீது திணிக்கவே, எண்டோசல்பான் மீதான தடையை அந்த நிறுவனமே ஆதரித்து வருகிறது என்று இந்திய எண்டோசல்பான் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய பூச்சி மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் தாவே, புகார் கூறியுள்ளனர். ஒரு லிட்டர் எண்டோசல்பானில் விலை ரூ. 286 ஆகும். ஆனால், இதற்குப் பதிலாக ஐரோப்பிய நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பூச்சி மருந்தின் விலை லிட்டர் ரூ. 2,000ல் இருந்து ரூ. 13,000 வரை இருக்கும் என்கிறார்கள்.
இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தக போட்டியில் சாதாரண விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், எதிர்கால சந்ததியினர், மண்வளம் பாதிக்கப்படுவதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் லாபவெறியில் மனித வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 
ரசாயன மருந்துகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்திற்கு அடி பணியாமல், கோடிக்கணக்கான விவசாயிகள், பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடு முழு வதும் மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உடனடியாக எண்டோசல்பான் மருந்துக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்த மருந்தை பயன்படுத்தியதால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.


செ.முத்துக்கண்ணன்
இளைஞர் முழக்கம்
ஜூன்2011

Wednesday, June 22, 2011

கோள்கள் குள்ளக்கோள்கள் புறக்கோள்கள் Planets, Dwarf Planets Exoplanets


சூரியன், கோள்கள், குள்ளக்கோள்கள், குறுங்கோள்கள், வால் நட்சத்திரம், புறக்கோள்கள் குறித்த அறிவியல் விளக்கங்கள், சுவையான செய்திகள், நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் , அண்மை கண்டுபிடிப்புகள் என கோள்கலைப் பற்றிய அனைத்து தகவல்கலையும் எளிய முறையில் அளிக்கிறது இந்நூல்.


ஆசிரியர்: முனைவர். த. வி. வெங்கடேஸ்வரன் ( Vigyan Prasar, DST, NewDelhi)
விலை : ரூ. 75
பெரிய அளவு
பக்கம் : 130

பதிப்புஅறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )

ஆனுகவும் / அழைக்கவும்

புதுவை அறிவியல் இயக்கம்
10.இரண்டாவது தெரு பெருமாள் ராஜா தோட்டம்ரெட்டியார்பாளையம்
புதுச்சேரி
தொலைப்பேசி எண்கள்
0413-2290733

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
245, அவ்வை சண்முகம் சாலை
கோபாலபுரம்
சென்னை-86
தொலைப்பேசி எண்கள்:044-28113630

Saturday, June 18, 2011

கல்விக்கு புதுவை அரசு செய்யவேண்டியது என்ன?





மாநில நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக் கல்விக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்


புதுவையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்விவரை அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்படாததற்கு என்ன காரணம் என்பதை ஆராய கல்வியாளர்கள், வல்லுநர்கள் தலைமையில் ஆய்வு குழு அமைத்து அதன் பரிந்துரைகளை போர்கால அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டுகளில் முடிப்பது 

 கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வியில் 15 சதவித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதநிதிகளின் குழந்தைகளும், அனைத்து வகை அரசு ஊழியர்களின் குழந்தைகளும் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

 புதுச்சேரிக்கான தனியானதொரு கல்விச்சட்டம் இயற்றப்பட வேண்டும். அதில் அடிப்படை வசதிகள், நிதி ஆதாரங்கள், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் தாய்மொழி கல்வி போன்றவைகள் சட்டமாக இருக்க வேண்டும்.

 புதுச்சேரி விடுதலைப் போராட்டம், புதுச்சேரி வரலாறு மற்றும் இயற்கை அமைப்பு பற்றிய திறனை மாணவர்கள் பெற பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். 

 புதுச்சேரியில் படிப்பறிவில்லாதவர்கள் யாரும் இல்லாத நிலையை உருவாக்க ஒரு முழு வீச்சான மக்கள் எழுத்தறிவு இயக்கத்தை நடத்த வேண்டும்.

இனி புதியதாக தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது. 

கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு தனியான அனைத்து விவரங்களும் அடங்கிய இணையதளம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும்; உயரதிகாரிகள் தொடர்ச்சியாக கண்கானிப்பு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். 

தரமான கட்டடங்களைக் கொண்ட பள்ளியாகவும், பாதுகாக்கப்பட்ட முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், மாணவ, மாணவியர்களுக்கு தனித் தனியே பொதுக் கழிவறை வசதியும் கொண்ட பள்ளிகளாக மாற்றுவதும், இதை பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் தனி நிதி ஒதுக்கி அதை பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் ஒப்படைப்பது. 

ஆய்வகங்கள் இல்லாமல் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பரிவுகளுக்கு ஆய்வகங்கள் கட்டுவது, போதுமான உபகரணங்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். 

ஆசிரியர்களை கல்விப்பணி தவிர்த்த வேறு பணிகளுக்கு பயன்படுத்தாமல் இருப்பது குறிப்பாக கோவில் நிர்வாகம், அமைச்சர்களுக்கு உதவியாளர் போன்ற கல்வித்துறைக்கு சம்பந்தம் இல்லாத பணிகளுக்கு அனுப்பவதை தடைசெய்ய வேண்டும்.

பள்ளி ஆசிரியர்களை கல்வி அல்லாத வேலைகளுக்கு இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் புதுவையில் ஆண்டுக்கு 29 நாள் பயன்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும்.

பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஓப்பந்த அடிப்படையில் ஆசிரியர், கல்வி பணி அல்லாத ஊழியர்களை பணி நியமனம் செய்யக் கூடாது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூஷன் வகுப்புகள் நடத்துவதை தடைசெய்ய வேண்டும்.

ஆசிரியர் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம மற்றும் சக ஆசிரியர்கள் சேர்ந்து ஒவ்வொரு காலாண்டுக்கும் வெளியிடுவது.

கல்வியில் பிரைவேட், பொது, மற்றும் பார்ட்னர்சிப் மூலம் (பிபிபி) வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

பள்ளிகளில் சேர்ப்பதற்கு எந்த விதமான தேர்வு முறையையும் பின்பற்றக் கூடாது. & தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் கணக்கு விவரங்களை ஊடகத்தில் வெளியிட வேண்டுமென சட்டம் இயற்றுவதோடு கல்வி வணிகர்களது கணக்கு வழக்குகள் அரசின் தணிக்கைக்கும் உட்பட்டது என்று அறிவிக்க வேண்டும்.

பள்ளி நூலகங்கள் முறையாக பராமரிக்க தேவையான நூலகர்கள், நூல்கள், தேவையான இடம் மேலும் மாணவர்கள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். 

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் காலமுறைப்படியே செய்யவேண்டும். தொற்று வியாதிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பிரத்ஏக வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.

போதுமான அவசர உதவி மருந்துகள், கருவிகள் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு போதுமான அளவு நாப்க்கின்கள் வைத்திருக்க வேண்டும். 

தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெரும் மாணவர்களின் முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். 

பொறியல், மருத்துவம் படிப்பவர்களுக்கு வழங்கப்படுவதைப்போல   கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தனியார் மருத்துவ, பொறியல் கல்லூரிகளில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டை உறுதியாக பெற்றுத் தர வேண்டும்.

Friday, June 17, 2011

உடல் பருமனை(obesity) தவிர்ப்பது எப்படி வீடியோ


உடல் பருமன் என்பது ஒரு மனிதன் சராசரியாக இருக்க வேண்டிய எடையை விட 20 சதவிகிதம் கூடுதலாக இருக்கும் நிலையாகும். உடல் பருமன் உடல் நலத்தைக் கெடுக்கும். உடல் பருமன் மூலம் ஒருவருக்கு இரத்த அழுத்தம், இருதய நோய், நீரிழிவு நோய், சில புற்று நோய், முடக்குவாதம், தூக்கமின்மை போன்ற எண்ணற்ற பின் விளைவுகள் தோன்றி ஆயுட்காலமும் குறையும்.

உடல் பருமனின் காரணங்கள்:

1. பரம்பரை உடல் வாகு.2. உடல் உழைப்பின்மை, எந்த வித உடற் பயிற்சியிலும்/நடைப்பயிற்சியிலும் ஈடுபடாதிருத்தல்.3. அசைவ உணவு, எண்ணெய் உணவு பொருட்கள், ஜாம், ஜெல்லி, கேக், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள், சாக்லேட் ஆகியவற்றை அதிகமாக உண்ணுதல்.4. மாறிவரும் கலாச்சாரமும், அடிக்கடி உணவகம் சென்று சாப்பிடுதலும், துரித உணவுகளும், உடல் பருமனுக்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.5. மன அழுத்தம்.6. உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.7. உண்டி குறைத்தல் பெண்டிர்க்கு அழுகு. ஆனால் பெரும்பாலான தாய்மார்களோ மீதமுள்ள உணவை வீணாக்க மனமில்லாமல் தாங்களே உண்ணுதல்.8. இந்த அவசர கணினி யுகத்தில் உண்பதற்கு கூட நேரம் இல்லாமல் உணவை மென்று விழுங்காமல் அவசர அவசரமாக விழுங்குவதன் மூலம் அதிக அளவில் உட்கொள்ளுதல்.

சரியான உடல் எடையை தெரிந்து கொள்வது எவ்வாறு?

ஒருவருடைய உயரம் எத்தனை செ.மீ. இருக்கிறதோ, அதிலிருந்து 100 செ.மீட்டரை கழித்துப் பார்த்தால் மீதம் எவ்வளவு வருகிறதோ அதுதான் சரியான எடை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். (உதாரணம் ஒருவர் 165 செ.மீ. உயரமுடையவர் என்றால் அவர் 65 கிலோ எடையில் இருப்பதே சரியான எடை)

உணவுக் கட்டுப்பாடு:

நொறுங்கத் தின்றால் 100 வயது என்ற வாக்கியத்திற்கேற்ப நாம் உணவை நன்குமென்று ரசித்து ருசித்து உண்ண வேண்டும்.

குறைந்த கலோரி அளவுள்ள உணவை உட்கொள்ளுதல். அதிக நார்ச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ளுதல்.

கலோரியை / சக்தி கழித்தல் / எரித்தல் (நடை, உடற்பயிற்சி, யோகா, சைக்கிளிங், நடனம், ஏரோபிக்ஸ், உள்/வெளி விளையாட்டுகளில் ஈடுபடுத்திக் கொள்ளுதல்)மொத்தக் கொழுப்பு உணவில் உட்கொள்ளலை குறிப்பாக உறையும் தன்மையுள்ள கொழுப்புகளை குறைப்பது. (உதாரணம்: நெய், வனஸ்பதி) உங்கள் உணவில் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்கு முக்கிய வழிவகையாகும்.முட்டை, பால் மற்றும் பால் பொருட்கள், இறைச்சி, வறுத்தமீன், ஆட்டுக்கறி போன்ற கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிகமாக உள்ள உணவை குறைக்க வேண்டும்.கொழுப்புகளுக்கு பதிலாக முழு தானியங்களையும், பழங்களையும், காய் கறிகளையும் உண்ண வேண்டும். உட்கொள்ளலையும் குறைக்க வேண்டும்.

காய்கறி சாலட்:

குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் உள்ள பச்சை காய்கறிகள் செரிமானம் ஆக அதிக நேரம் ஆகும். எனவே பசியின்மை ஏற்பட்டு, அடுத்த வேளை உணவின் போது குறைந்த அளவே உட்கொள்ளலாம்.

கீரை வகைகள், பழங்கள்:

நார்ச்சத்து உடையவை, நார்ச்சத்து உடல் கொழுப்பை குறைக்க உதவும். எனவே உடல் எடை அதிகரிக்காது. செரிமானமாக நேரம் எடுக்கும். பசியும் அதிகரிக்காது. பழச்சாறுக்கு பதிலாக பழங்களை அப்படியே உண்பதன் மூலம் நார்ச்சத்து கிடைக்கும்.

வேகவைத்த உணவு வகைகள்:

பொரித்த உணவை விட வேகவைத்த முறையில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் சிறந்தவை.

சப்பாத்தி (எண்ணெய் இல்லாமல்):

நன்கு மென்று விழுங்குவதன் மூலம் குறைந்த அளவு உட்கொள்ளலாம். புரதம் மற்றும் நார்ச்சத்து உடையது. அரிசியை விட கோதுமையில் கலோரி சிறிது குறைவு, எனினும் நாம் உட்கொள்ளும் அளவே முக்கியம்.

சரியான உணவுகளை உண்பதோடு, ஒழுங்குமுறையாக உடற்பயிற்சி செய்வது உடல் எடையை குறைப்பதற்கு ஒரு முக்கியமான வழியாகும்.

எடை குறைப்பதால் ஏற்படும் நன்மைகள்:

1. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.2. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம்.3. இரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பின் நல்ல சீரான நிலைக்கு கொண்டுவர இயலும்.4. பொதுவாக எடை இழப்பின் மூலம் சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய் போன்ற பல நோய்களை தவிர்க்கலாம்.

சில பரிந்துரைகள்:

1. உண்ண வாழாமல் வாழ உண்ண வேண்டும்,2. உண்ட உணவு செரித்த பின், அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும்,3. நாள் ஒன்றிற்கு சுமார் 2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.4. அதிக கலோரியுடைய உணவுகள் மற்றும் பானங்களை குறைக்க வேண்டும்.5. உணவு உட்கொள்ளும் அளவை குறைக்க வேண்டும்.6. நொறுக்கு தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும்.7. காலை சிற்றுண்டியை தவிர்த்தல், இரவுவேளையின் போது அதிகமாக உண்ணுதல் போன்ற தவறான உணவு முறைகளை தவிர்க்க வேண்டும்.8. உணவு உட்கொள்ளும் அரைமணி நேரத்திற்கு முன் நன்கு தண்ணீர் பருகினால் உணவு வேளையின் பொழுது குறைந்த அளவே உட்கொள்ளலாம்.9. பேருந்து, மகிழ்வுந்து (கார்) ஆட்டோவில் பயணிப்பதற்கு பதிலாக மிதிவண்டியை பயன்படுத்தலாம்.எந்த வித நோயுமின்றி பிறர்க்கும் நமக்கும் சுமையாக இல்லாமல், நலமாக வாழ நாம் அவசியம் உடல் பருமனை குறைத்தல் வேண்டும்.“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியின் படி வாழ உடல் எடையை சரியாக வைத்துக் கொள்வோம்.
                                                                                                                                             நன்றி: இளைஞர் முழக்கம்


Tuesday, June 14, 2011

இந்த நூற்றாண்டின், மிக இருண்ட, முழு சந்திர கிரகணம் நாளை


சந்திர கிரகணம்.. ஜூன் 15, 2011

உல்கில் முழு சந்திர கிரகணம், 2011, ஜூன் 15-16 ல்
   

Sree Seetha Ramachandra Swamivari Temple, Bhadrachalam, Andhra Pradesh,
Sri Kalahastheshwara Temple, Kalahasti, Andhra Pradesh The Only Hindu Temple in the world which is opened even during Lunar and Solar Eclipses as the Graha Doshas do not effect this Temple.
 ஆந்திரா, பத்ராசலத்தில், உள்ள சீதாராமச்சந்திரா, காளஹமேஸ்த 
கோயில் காளஹஸ்தி கோவில்கள் மட்டுமே, இந்தியாவில், சூரிய, 
சந்திர கிரகணங்களின் போது திறந்திருப்பவை.

கருவுற்ற பெண்கள்
   
   







 ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான இருக்கிறோம்.கிரகணத்தின் போது என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கட்டாயம் கிரகணத்தின் போது கட்டாயம் பல மேட்டுக்குடி மக்கள் விரதம் இருக்கின்றனர்.கொஞ்சம் நடுத்தர வர்க்கமும்,கொஞ்சம் விபரம் அறிந்தவர்களும், கிரகணத்தின் போது கருவுற்ற பெண்களை, கிரகண நேரத்தில் வெளியே விட மாட்டார்கள்; யாரும் சாப்பிட மாட்டார்கள்.முக்கியமாக, அனைத்துக் கோயில்களின் நடை சாத்தப் படுகிறது. கிரகணம் முடிந்த பின், கோயில்களை   கழுவி விடுகின்றனர். மக்கள்  குளித்த பின்னரே சாப்பிடுகின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் வெயிலில் வந்தி பாடுபட்டு, உழைத்து உண்ணும், அடித்தட்டு மக்களுக்கு எதுவும் தெரியாது. அது ஒரு பக்கம் இருக்க,  உலகில் வாழும் அனைவரும் இப்படித்தான் செய்கின்றனரா? அப்படித்தான் பழக்க வழக்கங்களை நாமும் கடைபிடிக்க வேண்டுமா? கிரகம் பிடிச்சவனே/வளே என்று திட்டுவது , இந்த கிரகணம் பிடிச்ச கிரகணத்தினால்தானா/காரணத்தினால்தானா ?

கிரகணத்துக்காக மூடியுள்ள
திருப்பதி பாலாஜி கோயில்.. 
அதனைக் காவல் காக்கும் 
இராணுவ வீரர்
  
 ”திருமலை திருப்பதி கோவில் ஜூன் 15 ல் மாலை 6 மணி முதல் ஜூன் 16 அதிகாலை 4.30 வரை மூடப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 15 ஆம் தேதி பகல் 12.53 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி கோவில் சுத்திகரிக்கப்பட உள்ளதால் மாலை 6 மணிக்கு கோவில் மூடப்பட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். மேலும் ஜூன் 16 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் வழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் கோவிலில் நடைபெற உள்ள திருப்பாவாடை சேவை ரத்து செய்யப்பட உள்ளது.” இந்த தகவல் திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அறிவிக்க ப்பட்டுள்ளது. 

சூரிய, சந்திர கிரகணம் உருவாதல்

எது..கிரகணம்....?..!
கிரகண உருவாக்கம்

ஜமைக்கா தலைவருடன், கொலம்பஸ், சந்திர கிரக்ணம் பற்றி கூறி மிரட்டுதல்

    கிரகணம் என்றால்.என்ன.? இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ,அவை நகர்ந்து செல்லும்போது,சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது அந்த வான் பொருள்,நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும்.. இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப் படுகிறது.கிரகணம் என்பது சமஸ்கிருத சொல்.இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம்.    
 30 நாளில்..வானின் ..  மூவகை..விருந்துகள் ..!
2011, ஜூன் 1-ஜூலை 1, 3 கிரகணங்கள்

2011,ஜூன் 1, பகுதி சூரிய கிரகணம், வட துருவத்திற்கு அருகில்
 
2011, ஜூன் 15-16, முழு சந்திர கிரக்ணம். உலகில் பாதிப்பேர் காணமுடியும்.
2011,ஜூலை 1,பகுதி சூரிய கிரகணம்.
   2011 , ஜூன் முதல் தேதியிலிருந்து ஜூலை முதல் தேதிக்குள்( 30 நாட்களுக்குள்.) வானம் நமக்கு மூன்று அற்புதமான விருந்தினை படைக்கிறது..!  ஆமாம். ஜூன் முதல்  தேதி அன்று, பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்போது,  ஜூன் 15 ம் நாள் 2011ம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் உருவாக உள்ளது. இந்த் முழு சந்திர கிரகணத்தின் போது,முழு நிலா நாளில்,  நில்வு முழுமையாக நம் கண்களிருந்து மறைக்கப்பட்டு விடும். அது மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் மிகக் கருமையான சந்திரக் கிரகணம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. அட..அது மட்டுமா நண்பரே..! இன்னும் ஒரு விருந்து..!  அடுத்து ஜூலை  முதல் தேதி மீண்டும் பகுதி சூரிய கிரகணம்..! எப்படி நம் குடும்ப உறுப்பினர்கள் பட்டையை கிளப்புகிறார்கள் பாருங்கள்..!
        சூரியனைச் சுற்றி..சுற்றி வர ஆசை..! 
     
சூரிய குடும்பம், ஒரு மணல் துகள் போல, பால்வழி மண்டலத்தை 22 1/2 கோடி ஆண்டுகளில் ஒரு சுற்று சுற்றி முடிக்கிறது.


 பூமி, தன் துணைக் கோளான சந்திரனையும் இழுத்துக் கொண்டே  சூரியனைச்  சுற்றிகொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை, பூமியை 29 1/2 தினத்தில் சுற்றுகிறது.அது மட்டுமல்ல.சூரியனாவது சும்மா இருக்கிறதா? சூரியனும் கூட தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை(MilkyWay galaxy),   தனது குடும்ப உறுப்பினர்களான, கோள்கள், துணைக் கோள்கள், குள்ளக் கோள்கள், குயிப்பர் வளையம், ஊர்ட் மேகம், மற்றும் வால் மீன்கள் என தனது அனைத்து குஞ்சு குளுவான்கள் படை சூழ நொடிக்கு சுமார் 250 -270 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது.இந்த நிகழ்வு  முடிய சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்றும்  சொல்லப் படுகிறது 
       பௌர்ணமி நிலவில்.. இருள் விழும் இரவில்..! 

சந்திரனையும் இழுத்துக் கொண்டு, சூரியனைச் சுற்றும் பூமி
அனைத்து கோள்களும் , சற்றே சாய்ந்த நிலையில்
   பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட,5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. . இந்த காலகதியில்,  பூமி, சூரியன் மற்றும் சந்திரன், இவை  மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப் படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப் படுகிறது.. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.  ஏனெனில் சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, எல்லா முழு நிலா நாளிலும் கிரகணம் ஏற்படுவதில்லை.அது போல எல்லா அமாவாசை தினத்திலும், சூரிய கிரகணமும் உருவாவதில்லை. 
       எப்படி.. கிரகணங்க..?  
   
முழு சூரிய, கிரகணம் உருவாதல்



சூரிய, கிரகணம் பாதுகாப்புடன் காணும் குழந்தைகள்

    சூரியனுடன் ஒப்பிடும்போது, சந்திரன் ரொம்ப பொடிசு.அதன் விட்டம், 384,400 கி.மீ மட்டுமே. இதில்  சூரியன் சந்திரனைவிட 4,00 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். இந்த அரிதான ஒற்றுமையால் தான், குட்டியூண்டு நிலவும், இம்மாம்.. பெரிய் ..ய் ..ய சூரியனும், பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது, ஒரே அளவில் தென்படுகின்றன. ௦௦குட்டியூண்டு ..சின்ன நிலா,நம் குடும்ப தலைவரான,  மிகப் பெரிய சூரியனை மறைத்து, முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும்  இதனாலேதான்.         
Solar eclipses occurring near the Moon's descending node are given even Saros series numbers. The first eclipse of each series starts at the southern limb of the Earth and the eclipse's path is shifted northward with each successive Saros cycle.
எத்தனை.. கிரகணம்.. எத்தனை முழுசு..!  .
   
 
   பொதுவாக, ஒரு வருடத்தில், 2-5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம்.சில சமயம், ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள் தான் வரும்.. இதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். முழு சூரிய கிரகணத்தின், மிக நீண்ட நேரம்,என்பது,7.5 நிமிடங்கள் மட்டுமே. எப்போதும் வட, தென் துருவங்களில், பகுதி சூரிய கிரகணமே தெரியும். நிலநடுக்கோட்டு அருகே கிரகணம் நிகழும்போதுதான் முழு சூரிய/சந்திர கிரகணம் உண்டாகிறது. ஒரே மாதிரியான சூரிய கிரகண நிகழ்வுகள், (நேரம், வகை போன்றவை,) . 18 வருடம் ,11 நாட்கள் (6.585.32 நாட்கள்) நிகழும்.இதற்கு சாரோஸ் சுழற்சி(Saros  cycle) என்று பெயர். பொதுவாக, கிரகணம், சூரிய உதயத்தில் துவங்கி, பூமியின் , ஏதாவது ஒரு பாதியில்,சூரியன் மறையும் போது, முடிவடைகிறது. . ஒரு வருடத்தில். பூமியில், எங்காவது இரு இடங்களில் கட்டாயம் சூரிய கிரகணம் நிகழும். இந்த கிரகணத்தில், கிரகண நிழலின் வேகம்,1,770 கி.மீ./மணி நிலநடுக்கோட்டுக்கு அருகில். ஆனால் .துருவங்களில்., கிரகண வேகம் பொதுவாக ...8,046 கி .மீ/மணி முழு சூரிய கிரகணம் 1 .5 வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது. சூரிய கிரகண பாதையின் அகலம், 269 கி.மீ. பகுதி சூரிய கிரகணம், பூமியின் மற்ற இடங்களுக்கு, முழு கிரகண பாதை தாண்டி,4,828 கி.மீ தூரம் வரை தெரியும்
நீண்ட நேரம் ..நீடிக்கும்... சந்திர கிரகணம்..!
     
முழு சந்திர கிரகணம் , பகுதி சந்திர கிரகணம் தெரியும் இடங்கள்
   
நீண்ட, கருப்பு முழு சந்திர கிரகணம்
   
முழு சந்திர கிரகணம்
         ஜூன் 15 ம் நாள்  நமக்கு காட்சி அளிக்கப் போவது, முழு சந்திர கிரகணம். பொதுவாக முழு சந்திர கிரகணத்தின், முழு மறைப்பு நேரம் (Totality) அதிக பட்சம்  107 நிமிடங்கள். ஆனால், பூமியில் நிழல் சந்த்திரனைத் தொடுவதிலிருந்து, சந்திரனின்  அடுத்த எதிர் முனையில்  விடுவது வரை உள்ள நேரம் சுமார் 4 மணி நேரம் வரை நீட்டிக்கலாம்.பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில், சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றுவதால், சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும்.சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால், அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும்.எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.   
    இந்த நூற்றாண்டின் .. நீண்ட.. சந்திர..கிரகணம்..!  
  
2011,ஜூன் 15 ல், சந்திர கிரகணத்தின் போது பூமியின் தோற்றம்
    இந்த  ஆண்டின்(2011)  முதல் சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள் நிகழ உள்ளது.ஜூன் 15ம் நாள் வரவுள்ள  சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் சரியாக 100 நிமிடங்கள். இது சந்திரனின் உயர் சந்திப்பு பகுதியில், தெற்கு ஒபியுக்கசுக்கு(southern Ophiuchus)அருகில்,மேற்கு லாகூன் நெபுலா(Lagoon Nebula ,M8)க்கு 7 பாகையில் நிகழவுள்ளது. இங்கே, சந்திரனில் கருமைப் பகுதி/முழு மறைப்பு நேரம்  100 நிமிடங்கள் அதிகமாக நீட்டிக்கும். இதற்கு,முன் ஜூலை 2000 ஆண்டில்தான், இந்த மாதிரி நீண்ட கிரகணம் வந்தது.   இந்த முழு கிரணத்தின்போது,  சந்திரன், நொடிக்கு ஒரு கி. மீ வேகத்தில் கிரகண பகுதியை கடக்கும்.   கிரகணத்தின் போது, அதன் நிழல் விழும் பகுதியின் கருப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை, முறையே, அம்பரா(Umbra), பெனும்பரா(Penumbera) என்று சொல்கின்றனர். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரிய கதிர்சிதறல் படும் பகுதி பெனும்பரா. சூரிய உதயம்/மறையும் சமயத்தில், சந்திர கிரகணத்தைப் பார்க்க நேரிட்டால், சூரியன் , சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசைகளில் அற்புதமாய் தெரியும்.இந்த ஆண்டு, ஜூன் 15ம் நாளில் நிகழ உள்ள கிரகணம் இந்த வகையைச் சேர்ந்தது. இந்த மாலை மயங்கும் வேளையில், நாம் ஒரே நேரத்தில் சூரிய மறைவையும், சந்திர உதயத்தையும் தொடுவானுக்கு அருகில்  பார்க்கும்போது, செலனோஹிலியன்(selenehelion ) என்ற நிகழ்வு உண்டாகிறது.  மேலும் இந்த சமயத்தில் இப்படி சூரிய மறைவு  மற்றும் சந்திர உதயத்தில் சூரிய, சந்திரனுடன், மாலை வேளையில் சந்திர கிரகணம் தெரிவதை படுக்கைவச கிரகணம் என்றும், சொல்கின்றனர்.    

ஜூன் 15 ,நிகழவுள்ள இந்த கிரகண நேரம்: 
முழு சந்திர கிரகணம்.. துவக்கம் முதல்..முடிவு வரை
  • பெனும்பரா(Penumbra) கிரகணம் துவக்கம்: 17 .24 .34 UT. 
  • பகுதி சந்திரகிரகணம் துவக்கம்:   16 .22 .56 UT  
  • முழு  மறைப்பு துவங்குநேரம்:
  • அதிக பட்ச முழு கிரகணநேரம்:  
  • பகுதி கிரகணம் முடியும் நேரம்:   
  • பெனும்பரா கிரகணம் முடியும் நேரம் :
  • .கிரகண நேரம்:
  • முழு மறைப்பு நேரம் : 1 மணி, 40 நிமிடம்,52 நொடிகள் 
  • பகுதி கிரகண நேரம்...:  3  மணி, 39 நிமிடம்,58 நொடிகள்.
  • பெனும்பரா  கிரகண நேரம்: 5 மணி,39 நிமிடம், 1 வினாடி. 
இந்திய நேரப்படி,2011 , ஜூன் 15 ன், முழு சந்திர கிரகணம்:
  •  பெனும்பரா பகுதிக்குள் : இரவு 10 மணி, 52 நிமிடம், 52 நொடி .ஜூன் 15
  • . கருமைநிற பகுதி சந்திர கிரணத்துக்குள்:11 மணி,52  நிமிடம், 24நொடி
  •  முழு மறைப்பு கிரகணம் :இரவு ௦0.மணி,51 நிமிடம், 57 நொடி ..ஜூன் 16
  • அதிக பட்ச கிரகணம் . ....:விடிகாலை,1 மணி,42 நிமிடம்,24 நொடி ஜூன் 16
  •  முழு மறைப்பின் முடிவு..:காலை 2 மணி, 32 நிமிடம்,50 நொடி 
  • கருமை நிற பகுதி கிரகணம் முடிவு:ஜூன் 16 காலை, 3மணி, 32 நிமிடம், 22 நொடி 
  • நிலா பெனும்பராவை விட்டு விலகுவது: ஜூன் 16 , விடிகாலை, 4 மணி, 32 நிமிடம், 02 நொடி.
அரிதான.. மிக .. இருண்ட.. சந்திர.. கிரகணம்..!  
   
    இந்த ஆண்டு ஜூன் 15 ம் நாள் ஏற்பட உள்ள முழு சந்திர கிரகணம் ஓர் அரிதான நிகழ்வே..! ஏனெனில் இந்த கிரகணத்தின் போது , சந்திரன் பூமியின் மைய நிழலை ஒட்டி பயணிக்கும். இது போலவே  ஒரு முழு சந்திர கிரகணம், கி.பி. 2000  ஆண்டு, ஜூலை 16 ல் உண்டானது. இனி இதனை ஒத்த முழு சந்திர கிரகணம், கி.பி.2018 , ஜூலை 27 ம் நாள்தான் வரும். இந்த கிரகணத்தை முழுமையாக, உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இது ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா முழுமைக்கும் தெரியும்,தென்னமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இக்கிரகணம், துவங்குகிறது. மேற்கு ஆசியா , ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்சில், ஜூன் ௧௬ ம் நாள் சூரிய உதயத்துக்கு முன்,கிரகணம் முடிகிறது. இப்போது வந்துள்ள முழு சந்திர கிரகணம், சாரோஸ் சுழற்சியின் 130  வது வகை. இந்த வகையில் மொத்தம் 72 கிரகணங்கள் நிகழும், இது 34 வது கிரகணம்.இந்த வகை சாரோஸ் சுழற்சி, 1262 ஆண்டுகளில் முடியும். இனி அடுத்த சந்திர கிரகணம், 2011 , டிசம்பர் 10 ம் நாள் ஏற்பட இருக்கிறது. 
       கிரகணம்..!     
   
முழு சந்திர கருப்பு கிரகணம்
பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் செம்பு வண்ணத்தில் மிளிரும். ஆனால் இம்முறை அப்படி இருக்காது.நிலா கருப்பு நிலாவாக காட்சி அளிக்கும்.  இதனைத் தொடர்ந்து பார்த்து பழக்கமில்லாத  
நண்பர்களுக்கு, கிரகணத்தின் போது, சந்திரனைக் கண்டறிவதே சிரமம்தான். சூரியன், பூமி மற்றும் சந்திரனின் மையங்கள் ஒரே நேர்க் கோட்டில் அமைவதால் /வருவதால்தான் சந்திரன் இப்படி இருட்டாக இருக்குமாம். மேலும் சமீபத்தில் ஐஸ்லாந்தில்  ஒரு எரிமலை வெடித்து புகை மற்றும் சாம்பலை அள்ளி வளி மண்டலத்தில் வீசியதே..! அதுவும் கூட, இந்த இருண்ட முழு சந்திர கிரகணத்தின் ஒரு காரணியாகும். !முழுமையும் வானம் இருட்டாக, சந்திரனைக் காண முடியாமல் போவதால், மிகவும் ஒளி குறைவாய் தெரியும் விண்மீன்களைக் கூட இப்போது பார்க்கலாம். ! இதற்கு முன்னால், இப்படி ஒரு முழு சந்திரகிரகணம், 1971 , ஆகஸ்ட் 6 ம் தேதி ஏற்பட்டது. அடுத்து இது போல ஒரு முழு சந்திர கிரகணம், இன்னும் 47 ஆண்டுகள் கழிந்து, 2058 , ஜூன் 6 ம் நாள் வரவிருக்கிறது. இப்போதுள்ளவர்களில் எத்தனை மனிதர்கள், 47 ஆண்டுகளுக்கு அப்புறம் இப்படியான சந்திர கிரகணத்தைப்  பார்க்கப் போகிறோம்...!  நிச்சயமாய் நானில்லை சாமி..! 
செம்பின்.. நிறத்த. முழு .. சந்திர..கிரகணம்..!  
செம்பு வண்ணம் நிலவில் முழு சந்திர கிரகணத்தின் மீது உருவாதல்
  




     முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கருப்பாகத் தெரிவது  போல, முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் கருப்பாக/இருட்டாகத் தெரிவது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை.சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக,சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதி பலிக்கின்றன. இப்போது பூமியில் மட்டும் வளிமண்டலம் இல்லாது போயிருப்பின், சந்திரன் கன்னங்கரேல் என கரித்துண்டம்/கருப்பு நிலாவாக காட்சி அளித்திருக்கும். பூமியின் வளிமண்டலம்தான்,அதில் பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான் , முழு சந்திர கிரகணத்தின் போது, அதனை சிவப்பான செம்பு நிலாவாகக்(copper moon) காட்டுகிறது.இதுவேதான், சூரியன் உதிக்கும்/ மறையும்போதும், அதன் சிவப்பு வண்ணத் தூரிகை கொண்டு வான் மேகத்தில் சிவப்பு-ஆரஞ்சு வண்ண ஓவியம் வரைவதன் காரணியும்..!

இருண்ட கிரகணத்தில்.. பளிச்சிடும்.. பால்வழி.. மண்டலம்..!
     
சந்திர கிரகணம் ஏற்பட்ட பின், தெரியும் பால்வழி மண்டலம், விண்மீன்கள்

பால்வழி மண்டலம்
      சாதாரணமாய்  நம் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டும் நமது சூரிய குடும்ப தாய்வீடான, பால்வழி மண்டலம்,  முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும்.இம்முறை  நீங்களும்  பார்த்து மகிழுங்கள்.இந்த முறை சந்திர கிரகணத்தின் போது, தெற்கு வானில், தனுசு விண்மீன் படலமும்,அதன் பிரகாச விண்மீனான பூரட்டாதி,  அதன் அருகில் வலப்பக்கத்தில், அழகாகத் தெரியும், பால்வழி மண்டலத்தின் மையப் பகுதியையும் கண்டு   ரசித்து மகிழலாம்.அது மட்டுமல்ல. இரவு வானின்  பிரகாச விண்மீன்களான, வடக்கில் உச்சியில் தெரியும் பருந்து/வடக்குச் சிலுவையின் தெனாப்(Denob),அதன் அருகில் உள்ள கழுku (aquis) விண்மீன் படல  திருவோணம்(Altair), கொஞ்சம் தள்ளி யாழ் விண்மீன்(Lyra) படலத்தின் வேகா(Vega), இவை உருவாக்கும், கோடைக்கால முக்கோணம் (Summer Trianle) போன்றவற்றை பார்த்து பரவசப்படலாம்.

..அன்று..வந்ததும்.. அதே.. நிலா... கிரகணம்..!   . 
     
பழங்கால சீனாவில் கிரகணம் காணுதல்
      சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு.சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம் போல அவ்வளவு அரிதானது கிடையாது. ஏனெனில் முழு சூரிய கிரகணம், உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால்,முழு சந்திர கிரகணம், உலகில் இரவில் இருள் கவிந்த பாதி புவிப் பகுதிக்கு தெரியும்.சரித்திரத்தில் பதிவுடன் எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம்  , சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty.) சோயு-சூ புத்தகத்தில், கி.மு 1136 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 29 ம் நாள் நிகழ்ந்ததாய்  குறிப்பிடப் பட்டுள்ளது.
 ஏதென்சை.. வென்ற.. நிலா..கிரகணம்..! 
    பழங்காலத்தில், கிரகணம் என்ன என அறியப்படாதபோது, அவை ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட  நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள், நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என சவால் விட்டனர் முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று. மக்களும் நம்பினர். இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது.அதற்கு முன்னால், கி.மு.413 , ஆகஸ்ட் 28 ம் நாள் முழு சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.மதகுருவின் சொல்படி எதெனியர்கள்    நடந்தனர்.ஆனால் சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர்.ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார்.சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால்,ஓர் போர்  ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.
மக்களை.. மிரட்டிய.. கொலம்பஸ்..!
     
     கிறிஸ்டோபர் கொலம்பஸ் உலகை வலம் வந்தவர் என்ற தகவல் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அவர் பெரிய கில்லாடி..! அவர், 1503 , ஜூன் 30 , ஜமைக்கா போய் இறங்கி, அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கினார். அங்கிருந்த பூர்வகுடி மக்கள், வந்தவர்களை வரவேற்று உணவும் அளித்தனர். ஆனால் கொலம்பஸின் மாலுமிகள் அம்மக்களிடம் ஏமாற்றி, திருடினர். இதனால் கோபம் கொண்ட மக்கள் அவர்களுக்கு உணவு தர மறுத்து விட்டனர். இந்த சமயம் பார்த்து, அப்போது முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. கொலம்பஸ் கடற் பயணத்துக்காகவும், சொந்த தேடல் மற்றும் ஆர்வத்தாலும், கால நிகழ்வுகள்  குறித்த, ஒரு காலண்டரை வைத்திருந்தார். அதில் முக்கிய நிகழ்வுகள் குறிக்கப் பட்டிருக்கும். அதன்படி, அப்போது வரும் முழு சந்திர கிரகணம் அறிந்து, இதன் மூலம் அந்த மக்களை மிரட்ட திட்டமிட்டார். அவர்களின் தலைவனைக் கூப்பிட்டு, கடவுள் உங்கள மேல் கோபம் கொண்டிருக்கிறார். இரவின்  ஒளியை/ சந்திரனை உங்களிடமிருந்து பிடுங்கிக்  கொள்ளப் போகிறார், என்றார். தலைவர் இதனை நம்பவில்லை. முழு சந்திர கிரகணம் வந்தது. ஊர் இருண்டது. சந்திரன் மறைந்தான்; ஊர் மக்கள் கொலம்பசிடம் வந்தனர். அவரின் குழுவுக்கு உணவும், உதவியும் செய்வதாக ஒப்புதல் வாக்கு மூலம் தந்தனர். பின் வழக்கம் போல், பூமியின் நிழல் விலகியதும், சந்திர ஒளி ஜமைக்கா மேல் விழுந்தது. மக்கம் மகிழ்ச்சி கொண்டனர். எப்படி இருக்கிறது.. இந்த வரலாற்றுத் தகவல்..! எப்போதும் மெலிந்தோரை வலியோர் ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டே இருப்பது தெரிய வருகிறதா? 
மூட நம்பிக்கையால்.. மூடப்பட்ட.. மக்கள்..!
பொதுவாக,தினம் தினம், சந்திரன் உதிப்பதில்லை. காரணம் நாம் அறிவோம். தினமும் சூரியன் நமக்குத் தெரிகிறது. அது நகர்வது போல தோன்றினாலும், அது நகர்வதில்லை. நாம்தான் சூரியனைச் சுற்றுகிறோம். கிரகணத்தின் போது எந்த சிறப்பு கதிரும் சூரியனிடமிருந்து வருவதில்லை . அப்போது வருகிறது என்று சொல்லப்படும் அகசிவப்பு கதிர், காமாக் கதிர்கள், எப்போதும் சூரியனிட மிருந்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. நாம் வெயிலில் போனால் உடலோ, பொருளோ சூடாவதுக்கு காரணம் அகச்சிவப்பு கதிர்களே. பிரபஞ்சம் முழுவதும் காமாக் கதிர்கள் உள்ளனவே.ஆனால், கிரகணம் தொடர்பான, கட்டுக்கதைகளையும், மூட நம்பிக்கைகளையும், ஊடகங்கள் சும்மா, சகட்டு மேனிக்கு அவிழ்த்துவிட்டே இருக்கின்றன. கிரகணம் எப்படி வருகிறது என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே, கிரகணம் முடிந்ததும், குளித்து, தர்ப்பணம் செய்கிறார்.,. இது எவ்வளவு சரி? அது மட்டுமல்ல, வானுக்கு விண்கலத்தை அனுப்பும், இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் கூட, சாமி கும்பிட்டு, தீபாராதனை செய்த பின் தான், விண்கலம் அனுப்பும் பட்டனைத் தட்டுகின்றனர். இன்று அறிவியல் உலகின், பல அறிவியல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அதனுடனே மூட நம்பிக்கைகளையும் போர்த்திக் கொண்டு வாழ்வது என்ன நியாயம்.? 

 கட்டுரையாளர் 
பேரா.எஸ்.மோகனா